நவகிரக கோள்களும் அவற்றிற்குரிய தானியங்களும்

  • by

 நமது  வாழ்க்கையில் கோள்களின் பங்கு முக்கியமானதாகும்.  நம் முன்னோர்கள் வாழ்வில் முக்கியமாக பின்பற்றிய ஒன்று என்று எனில் நவகிரக வழிபாடு அவைகளின் தாக்கத்தை  கட்டுக்குள் வைத்தல் போன்றவற்றை பின்பற்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றைய அதிவேக உலகில் நமக்கெல்லாம் அது எப்படி தெரியுமுனு கேக்றீங்களா, அதெல்லாம் இல்லை, இன்றும் நவகிரக வழிபாடு கொடிக்கட்டி பறக்கின்றது. 

பல பண்டைய நாகரிகங்களுக்கு வானியல் பற்றிய சொந்த பதிப்புகள் இருந்ததைப் போலவே, இந்துக்களும் மிகவும் பழங்காலத்திலிருந்தே தங்கள் சொந்த பதிப்பைக் கொண்டிருந்தனர். இந்து வானியல், அதன் தோற்றம் வேதங்களில் உள்ளது, இது ஒன்பது கிரகங்களின் (கிரஹாக்கள்) உள்ளமைவு மற்றும் பொதுவாக உலகில் அவர்களின் கூட்டு செல்வாக்கு மற்றும் ஒவ்வொரு தனி நபரின் அடிப்படையிலும் அமைந்துள்ளது.

ஒன்பது கிரகங்களும் கூட்டாக நவகிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கடந்த கர்மங்கள் அல்லது பிறப்பு தொடர்பான குறைபாடுகள் (தோஷங்கள்) ஆகியவற்றிலிருந்து எழும் துன்பங்கள், துரதிர்ஷ்டங்கள் அல்லது துரதிர்ஷ்டங்களை சமாளிப்பதற்காக அவர்கள் இந்து மதத்தில் வழிபடுகிறார்கள். அவை பெரும்பாலான இந்து கோவில்களில் ஒரு குழுவில் அல்லது கோவிலின் பொதுவாகக் காணக்கூடிய இடங்களில் ஒரு பீடத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. கோயிலின் கருவறையில் பிரதான தெய்வத்திற்கு பிரார்த்தனை செய்வதற்கு முன் பக்தர்கள் வழக்கமாக இந்த கடவுள்களை முன்வைக்கிறார்கள். ஒன்பது தெய்வங்களில், ஏழு சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களுக்கு பெயரிடப்பட்டுள்ளன, மேலும் இந்து நாட்காட்டியின் வாரத்தில் ஏழு நாட்களின் பெயர்களுடன் ஒத்துப்போகின்றன.

கிரகங்களில்  ராகு, கேது,  குரு  உச்சம், சனிப்பார்வை என்பதெல்லாம் பல நிலைகள் இருக்கின்றது. இதனை நமக்கு  சாதகமாக வைக்கவும் நவகிரக வழிபாடு தெரிந்து கொள்வது, இன்றைய காலகட்டங்களில் அவசியமாக மக்கள் பின்பற்றி வருகின்றனர். 

ஒன்பது  நவகிரகங்கள் மற்றும் அவற்றிற்க்குரிய தானியங்கள் அதனை நெய்வேத்தியமாக படைக்க நாம் விரும்பியது அனைத்தும் கிடைக்கப் பெறலாம். அல்லது கோள்களின் கெட்ட தாக்கத்திலிருந்து நம்மை காக்கலாம்.  நவகிரகங்களுக்குரிய தானியங்களை இங்கு பட்டியலிட்டு உள்ளோம் பின்பற்றவும். 

சூரியக் கோளைப் பொருத்தவரை  தானியமாக “கோதுமை” உள்ளது  கோதுமையால் செய்த பதார்த்தங்களை  ஞாயிற்றுக்கிழமையில் தானம் செய்துவர நன்மைகள் பல கிடைக்கப் பெறலாம். 

சந்திரன் பார்வை என்பது மிகவும் அவசியம் ஆகும்.  இவரின் தானியம் “நெல்” ஆகும்.   நாம் பொதுவாக எளிதாக பயன்படுத்துவது “பச்சரிசி” யில் செய்த உணவுகள்தான்  அதிகம்.  நெல் நெய்வேத்தியம் செய்ய உகந்த நாளாக திங்கட்கிழமை குறிப்பிடப்படுகின்றது. 

மேலும் படிக்க:ஊரடங்கிள் மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா..!

செவ்வாய் கோளின்   தானியம் “துவரை.” எனவே துவரையால் செய்த உணவுகளை தானம்  நம் முன்னோர்கள் தானம் செய்வது வழக்கமாகும். படையலாக வைக்கும் பொழுது சாம்பருக்கு துவரைதான் பயன்படுத்துவார்கள். 

புதன் கோளைப் பொருத்தவரை  தானியமாக “பச்சைப்பயறு”  வேக வைத்து படைக்கலாம். 

குரு யோகம் பெற  “கொண்டைக்கடலை” இதை வியாழக்கிழமைகளில் தானம் வழங்க வேண்டும். 

சுக்கிரன் கோளில் அதிக லாபம் பெற சுக போக வாழ்க்கை வாழ  தானியம் “மொச்சை” இந்த மொச்சைப் பருப்பை வெள்ளிக்கிழமை தோறும் தானம்  செய்யலாம். 

சனி  இவருக்கு உகந்த  “எள்” ஆகும். எள் கலந்த உணவை தானம் தர சனி கிழமை செய்யலாம்.

ராகு கோளுக்கு “உளுந்து.”  உளுந்து பருப்பில் செய்த உணவை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  படைக்கலாம். 

கேதுக்குரியது  “கொள்ளு”  ஆகும். கொள்ளு கலந்த உணவை  படைக்க தானம் செய்து வர  வாழ்வில் தடைகள் அகலும். 

மேலும் படிக்க: விளக்கேற்றி வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன