வேப்ப எண்ணெய்யால் இந்தப் பிரச்சினயை தீர்க்க முடியும்.!

learn how to use neem oil to improve your hair growth

வேப்ப மரத்தின் நன்மைகள் ஏராளமாக இருக்கின்றன. நாம் பயன்படுத்தும் சோப்பு முதல் உணவு வரை அனைத்திலும் வேப்பமரத்தின் சம்பந்தங்கள் இருக்கின்றன. பொதுவாகவே கிருமிகளை கொல்லும் சக்தி வேப்பிலைக்கு உள்ளது இதனால்தான் யாருக்காவது நோய் அல்லது பிரச்சினைகள் ஏற்பட்டால் வீட்டைச்சுற்றி வேப்ப இலைகளை வைப்பார்கள். இப்படிப்பட்ட வேப்ப மரத்திலிருந்து எடுக்கப்படும் வேப்ப எண்ணெயில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன அதன் பயன்களை இங்கே பார்ப்போம்.

முடி வளர்ச்சிக்கு வேப்ப எண்ணெய்யை இந்த வகையில் பயன்படுத்தலாம் முதலில் கால் தேக்கரண்டி வேப்ப எண்ணெயையும், 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணையையும் மற்றும் ஒரு தேக்கரண்டி லாவண்டர் எண்ணெயை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து நம் தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமது கூந்தல் வலுப்பெற்று மிக ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் படிக்க – உங்கள் அழகை அதிகரிக்கும் ஆரஞ்சு ஃபேஸ் பேக்..!

பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் எரிச்சலை நீக்குவதற்கு 3 தேக்கரண்டி வேப்ப எண்ணெயுடன் அதற்கு சரிசமமாக ஆலிவ் எண்ணெயை ஒன்றாக கலந்து நம் தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பொடுகு பிரச்சினைகள் அடியோடு தீர்ந்து மீண்டும் வருவதற்கான சூழ்நிலையை இது அழித்துவிடும்.

வேப்ப எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக சேர்த்து நம் சருமத்தில் தடவுவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் அரிப்புகள் தொந்தரவு மற்றும் வறட்சியால் ஏற்படும் காயங்கள் என அனைத்திற்கும் தீர்வாக இருக்கும்.

மேலும் படிக்க – ஏவாளை மிஞ்சும் அழகு பெற எலும்பிச்சை பயன்படுத்துங்க!

சொரியாசிஸ் போன்ற பிரச்சனைக்கு இந்த வேப்ப எண்ணெய் தீர்வாக இருக்கிறது. இதைதால் நம் முன்னோர்கள் பண்டைய கால மருத்துவ முறைகளில் அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள். அதைக்கொண்டு சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் வேப்ப எண்ணெய்யை கொண்டு குணப் படுத்தி உள்ளார்கள். இப்படி இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலம் எல்ல பிரச்சினைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன