கிருத்திகை வழிபாடு செய்தால் வாழ்வு வளம் பெறும்.

  • by

 முருகனான கந்தனை கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்தனர் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்று  அனைவராலும் பெருமிதப்படுத்தப்படுகின்றனர. 

கார்த்திகேயனின் கிருத்திகை விரதம்

 சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு முருகனை வளர்த்தமையால்  அவர்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெற்று வாழ்கின்றார். 

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர்களின் துன்பம் அனைத்தும் கரையும். வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று  சிவபெருமான ஆசிர்வதித்தார். அவ்வாறே முருகபக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ கிருத்திகை விரதம் பின்பற்றுகின்றனர். 

மேலும் படிக்க: செவ்வாயில் முருகனின் அருள் பெற பின்பற்றுங்கள்

  கிருத்திக்கை விரதம்: 

கந்தன் அருள் பெற கந்தனை முழுவதுமாக ஜெபித்து வர வேண்டும். இரவில்  தூங்காமல் கந்தனை துதித்து வருவது சிறப்பாகும். கிருத்திகை மறு நாள் ரோகிணியன்று காலையில் குளித்து கந்தனின் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.  பின் சாப்பிடலாம். 

அன்று  முருகனுக்கு நடைபெறும் அபிசேகத்தில் பங்கு கொண்டு பூஜை செய்து வருதல் வேண்டும்.  மாதம் மாதம் கிருத்திகை வரும் அதனை ச மாதக் கார்திகை எனபார்கள். கார்திகை மாத கிருத்திக்கை சிறப்பானது வருடத்திற்கு ஒரு முறை அதனை சிறப்பாக மக்கள் வழிபடுவார்கள். 

மேலும் படிக்க: 2020 இல் சனிபெயர்ச்சி வரபோகுது!

கிருத்திக்கையில் தானம்:

கார்த்திகேயன்

 நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும். கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்வது சிறப்பாகும்.  கிருத்திகையில் தானம் செய்வோர்கள் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை பெறுவார்கள். என்பது முன்னோர்கள் கூற்றாகும். இவ்வளவு பெருமை வாய்ந்தது கிருத்திகா நட்சத்திரத்தை வழிபட்டுவருவது சிறப்பாகம். 

கார்த்திகேயன்

ஆடி கிருத்திகை சிறப்பானது ஆகும். ஆடிகிருத்திகையன்று அதிகாலையில் குளித்து முடித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து அரிசி மாவில் அறு கோண கோலம் இட வேண்டும். முருகனின் படத்திற்கு அருகில் நெய் விளக்கேற்ற வேண்டும். பழங்கள் படைத்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும். சண்முக கவசம் படிக்கலாம். மாலையில் கோவிலுக்கு சென்று வரலாம்.

மேலும் படிக்க: தீபம் தினமும் ஏற்றி வருவதால் வாழ்வில் திருப்பம் நடக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன