கொரோனா இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டம்..!

  • by
krishnagiri district in tamilnadu does not have corona virus

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லாத மாவட்டங்களை மத்திய அரசு பட்டியலிட்டது. அதில் கிட்டத்தட்ட 47 மாவட்டங்களில் இந்த வைரஸ் தொற்று முழுமையாக தடுக்கப்பட்டிருந்தது. இதில் தமிழகத்தில் இருந்து கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் இருந்தது. ஆனால் சமீபத்தில் தருமபுரி மற்றும் புதுக்கோட்டையில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பாக மைசூரிலிருந்து ஓசூருக்கு வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது, ஆனால் இவருக்கு மீண்டும் செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மீண்டும் உருவெடுத்தது.

மேலும் படிக்க – கொரோனா வைரஸிற்க்கான அறிகுறிகள்..!

பாதுகாப்பான மாவட்டம்

கொரோனா வைரஸின் பாதிப்புகள் அதிகமாக உள்ள கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களுக்கு அருகே இருக்கும் இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவர்கூட பாதிக்காதது ஆச்சரியத்தை அளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை என அம்மாவட்ட கலெக்டர் பிரபாகரன் அவர்கள் கூறியுள்ளார். ஏராளமான கோவில்கள் மற்றும் பசுமையான இடங்கள் நிறைந்துள்ள இந்த மாவட்டத்தில் அவ்வப்போது சுற்றுலா பயணிகளும் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இருந்தும் வைரஸின் விழிப்புணர்வு மற்றும் ஊரடங்கை சரியாக கடைப்பிடித்து போன்ற காரணங்களினால் இந்த வைரஸ் தொற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து முழுமையாக விலகியுள்ளது.

க்ரீன் ஜோன்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மே மூன்றாம் தேதிக்கு பிறகு எந்தெந்த மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் க்ரீன் ஜோனில் இருக்கிறதோ அந்த மாநிலங்களில் ஊரடங்கை தளர்க்கலாம் என கூறியிருக்கிறார். இதனால் தமிழகத்தில் க்ரீன் ஜோன் இருக்கும் ஒரே மாவட்டம் கிருஷ்ணகிரி தான். எனவே மே மூன்றாம் தேதிக்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பும் என அங்கு வாழும் மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இதை மற்ற மாவட்டங்களில் இருக்கும் மக்களும் புரிந்துகொண்டு கொரோனா வைரஸ் தங்களை தாக்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க – கொரனாவால் மனசிக்கலில் மாட்டித்தவிக்கும் பலர்

தமிழகத்தில் பாதிப்பு குறைவாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் அலட்சியத்தினால்தான் இந்த எண்ணிக்கையும் உருவாகி உள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மூலமாக இந்த வைரஸ் தொற்று பரவியிருந்தாலும், அலட்சியத்தினால் இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. எனவே மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும், அதே சமயத்தில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்க வேண்டும். இதை சரியாக செய்தாலே உங்கள் மாவட்டங்களும் கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டங்கள் பட்டியலில் இடம்பெறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன