கொரிய நாட்டு பெண்களின் அழகு குறிப்புகள் உங்களுக்காக

  • by

அழகு என்பது   ஆராதனைகூரியது இதனை   உணர்ந்த பலர் தங்களை எப்பொழுதும் அழகுபடுத்த இதற்காக மெனக்கெடுவார்கள்.  அழகு பராமரிப்பு வெவ்வேறு நாட்டில் வேறு விதமாகப் பின்பற்றப்படுகின்றன. கொரியா நாட்டில் அழகு என்பது வேறுவிதமாக இருக்கும். 

அழகு பராமரிப்பில் சிறந்துவிளங்குவபவர்கள் என்றால் நிச்சய நாம்  கொரியப் பெண்களை கூறலாம். அதுபோல் நாம் நிறைய செய்ய நம் நாட்டு பெண்கள் இப்பொழுது ஆர்வம் காட்டுகின்றனர். 

மேலும் படிக்க – பிராமண பெண்களின் அழகு ரகசியம்!


அழகு என்றால் அதற்கு கொரியன் பெண்களைக் கூறவத்ற்கான காரணங்கள் அவர்கள் பின்பற்றும் முறையாகும்.  கொரியப் பெண்கள் வயதானாலும் சருமத்தை பராமரிப்பதில் வல்லவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு எவ்வளவு வயதாகியும் அவர்களின் சருமம் மினுமினுப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆரோக்கியமான சருமம் கிடைக்க அவர்கள் நிறைய மெனக்கெடல்களை  விடுத்து, தினமும் சில அழகு பராமரிப்பு முறைகளை மட்டும் செய்து அழகு பராமரிப்பு மேற்கொள்கின்றன. 

 கொரிய பெண்களின்  அழகு பராமரிப்பு முறைகள் நீங்களும் பின்ப்பற்றினால்  போதும் நீங்களும் கொரியன் பெண்கள் போல் இளமையுடன் அழகாகலாம். 

அக்கரை சீமை அழகினேலே :

கொரியன் பெண்கள் தங்கள் முகத்தை பொலிவாக்க  ஆயில் க்ளீன்சர் பயன்படுத்துகின்றனர். கொரியப் பெண்களின் ஆயில் க்ளீன்சர் நமது முகத்தில் தேங்கியுள்ள எண்ணெய் பசையை போக்கி சருமத்தை பொலிவாக்கும் தன்மையுடையது ஆகும்.  இவர்களின் ஆயில் முறை முகத்தில் உள்ள ஆயில் மேக்கப், சன்ஸ்க்ரீன், மஸ்காரா போன்றவற்றையும் இதைக் கொண்டு எளிதாக நீக்கி விடலாம். எனவே உங்கள் மேக்கப்பை ரிமூவ் செய்ய இது உதவியாக ஆயில் க்ளீன்சர் பயன்படுத்தலாம்.

தினசரி பாதுகாப்பு:

 கொரிய பெண்கள் தினமும் முகத்தை சுத்தம் செய்ய ஒரு சில முறைகளை  பின்பற்றுகின்றனர். வியர்வை, தூசிகள், அழுக்குகள் போன்றவை முகத்தில் தேங்கியிருக்க அவர்க்ள்  அனுமதிப்பதில்லை. கொரியப் பெண்கள் ரெகுலராக ஃப்பார்ம் க்ளீன்சர் பயன்படுத்துகின்றனர். கொரியப் பெண்கள் நாளும் விடாமல் தினந்தோறும் செய்கிறார்கள்.

டெட் செல்ஸ் நீக்கம்:

கொரியப் பெண்களைப் பொருத்த மட்டில் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குதல் என்பது கொரியன் பெண்களின் முக்கியமான பராமரிப்பு ஆகும். நமது தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கும் போது சருமம் புதுப்பிக்கும். ஆனால் இதை தினமு‌ம் செய்யக் கூடாது எங்கின்றனர்.  சென்ஸ்டிவ் சருமம் உடையவர்கள் இதை வாரத்திற்கு 1-2 தடவை செய்தால் போதும் நல்ல பலன் கிடைக்கும். கடினமான சருமம் உள்ளவர்கள் இதை அடிக்கடி செய்து சருமத்தைப் பொலிவுறச் செய்யலாம். 

மேலும் படிக்க – சரும பொலிவிற்கு இதனை செய்யுங்கள்

கொரியப் பெண்களிம் டோனர் முறை: 

 கொரியப் பெண்களின்  சரும பாதுகாப்பு செய்முறையில் டோனர் முக்கியப் பங்கு வகிக்கின்றது.  கொரியன் பெண்கள் சருமத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு சருமத்தை மாய்ஸ்சரைசர் செய்கிறார்கள் அது  அவர்களின் சருமத்தை வறட்சியில் இருந்து காக்கும். மாய்ஸ்சுரைசர்காக டோனர் பயன்படுத்தி சருமத்திற்கு போஷாக்கு அளிக்கிறார்கள். கொரியன் பெண்கள் பயன்படுத்தும் டோனர் நாம் பயன்படுத்தும் அஸ்ட்ரிஜெண்ட் டோனர் போல் இருக்காது. இவர்கள் டோனாராக இது சருமத்திற்கு நல்ல தக்காளி பழத்தை  பயன்படுத்துகின்றனர். இது இன்னும் சிறப்பு மிக்கதாகும். 

 அழகில்  நொதித்தல் வகை  தயாரிப்புகள் : 

கொரியப் பெண்கள் முகத்தில் டோனர் செய்தப் பின்பு எசன்ஸ்  பயன்படுத்துகின்றனர். இது பெரும்பாலும் பழங்கள் மற்றும் வேப்பிலை, பூக்கள் ஆகியவற்றில் தயாரிக்கப்படுகின்றது. அதனை வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்துகின்றனர். 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன