தூக்கத்தின் அவசியம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

  • by
know the importance of sleeping

நாம் காலையில் எழுந்து பல் துலக்குவது, குளிப்பது, வேலைக்கு சென்று வீடு திரும்புவது மற்றும் மூன்று வேளை உணவு அருந்துவது போல் தினமும் செய்யப்படும் மிக முக்கியமான ஒரு செயல் தான் தூக்கம். இதில் மற்ற எதையாவது நாம் மறந்தாலும் தூக்கத்தை மற்றும் நம்மால் மறக்க முடியாது. ஏனென்றால் நம்மை அறியாமல் நமக்கு போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால் அதுவே நம்மை மயக்கி தூங்க வைத்து விடும். இத்தகைய சக்தி வாய்ந்த தூக்கம் ஒருவருக்கு எவ்வளவு நேரம் தேவைப்படுகிறது, அதனால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

தூக்கம் வலி நிவாரணமாகும்

தூக்கம் என்பது உண்மையில் ஒரு வலி நிவாரணமாகும். நமக்கு எப்போதெல்லாம் மன உளைச்சல் அல்லது உடல் வலிகள் இருக்கிறதோ அப்போது தூங்குவது மூலமாக உங்களின் உடல் வலிகள் அனைத்தும் நிவாரணம் அடைகிறது. இத்தகைய எளிமையான வழி இருக்கும்போது மனிதர்கள் தேவையற்ற தீய பழக்கங்களுக்கு பின்னால் சென்று தங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை அழித்து விடுகிறார்கள்.

மேலும் படிக்க – இஞ்சியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா???

ஆயுளை நீட்டிக்கும்

சரியான தூக்கத்தை எடுத்துக் கொள்வதன் மூலமாக நம் உடலுக்கு தேவையான ஓய்வு கிடைக்கிறது. இதனால் நமது மன அழுத்தங்கள் குறைந்து நம்முடைய ஆயுள் அதிகரிக்க உதவுகிறது. நாம் என்றும் இளமையாகவும், சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு நம் வயதிற்கு ஏற்றார் போல் சரியான தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக நமது உடல் பல மடங்கு ஆரோக்கியமாக இருக்கும்.

ஆற்றலை அதிகரிக்கும்

நம்முடைய நாளுக்கு தேவைக்கான ஆற்றல் உணவு மற்றும் தூக்கத்தின் மூலமாக நமக்கு கிடைக்கிறது. நாம் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதன் மேல் அதிக அளவிலான கவனத்தை செலுத்தினால் மட்டுமே அந்த செயலை நாம் சிறப்பாக செய்து முடிக்க முடியும். அதற்கு நமக்கு போதுமான அளவு உறக்கம் தேவைப்படுகிறது. சரியாக உறங்குவது மூலமாக உங்களால் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் எளிதில் அதன் மேல் கவனத்தை செலுத்த முடிகிறது.

தூங்குவதற்கான நேரம்

பிறந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு 11 மணி நேரத்திலிருந்து 14 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

4 முதல் 11 மாதம் வரை இருக்கும் குழந்தைகள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

ஒன்றிலிருந்து இரண்டு வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு 11 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை உறங்க வேண்டும்.

3 வயது முதல் 5 வயது வரை இருக்கும் குழந்தைகள் ஒரு நாளைக்கு 10 முதல் 13 மணி நேரம் வரை உறங்க வேண்டும்.

மேலும் படிக்க – கொள்ளு பயிறை உணவில் சேர்ப்பதனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள்.!

5 திலிருந்து 13 வயது வரை இருக்கும் குழந்தைகள் ஒரு நாளைக்கு 9 முதல் 11 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

14 முதல் 17 வயது வரை இருக்கும் சிறுவர்கள் ஒரு நாளைக்கு 8 லிருந்து 10 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

18 வயதிலிருந்து அதற்கு மேல் உள்ள இளைஞர்கள், நடுநிலை இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் 7 லிருந்து 8 மணி நேரம் தூங்க வேண்டும்.

இதை சரியாக கடைபிடித்தால் மட்டுமே உங்களுக்குத் தேவையான ஆற்றல், இளமை மற்றும் ஆரோக்கியம் என அனைத்தும் கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன