காதலில் நீங்கள் எந்த வகை என தெரிந்து காதலியுங்கள் !

  • by

காதலித்துப்பார்  கார்மேகம் எல்லாம் உன்னுடன்  கவிதை பேசும். காதல் என்ற உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும்  இயற்கை கொடுக்கும் பிரசாதம் ஆகும். காதல் என்ற உணர்வானது எப்பொழுதும் அவசியமானது ஆகும். அதனை நாம் எவ்வாறு கையாள்கின்றோம். என்பதில் உள்ளது.

காதல்   வகைகள்:

காதல்  அனைவருக்குள்ளும் உண்டு  அதனை நாம் எவ்வாறு வாழ்வில்  எடுத்து செல்கின்றோம் என்பதில்தான் அனைத்தும் உண்டு. காதல் மூன்று வகைகளில் உண்டு. சிசனில் வரும் காதல் உண்டு, காமத்தால் வரும் காதல்  ஒரு வகை, வாழ்க்கை முழுவதும் வரும் காதல் மூன்றாம் வகையாகும். 

நீங்கள் எந்த வகை:

நீங்கள் எந்த வகை காதலர் என்பது  முடிவு செய்யுங்கள். உங்கள் காதல் மேலே கொடுக்கப்பட்டுள்ள வகைகளில் எந்த வகையை சார்ந்தது என்பதை  தீர்மானித்துக் கொள்ளூங்கள். அதன்படி நீங்கள் எந்த ரகத்தார் என்பது தெரியும் பொழுது விளையாட்டாக தொடங்கியதை அப்படியே   அமைதியாக நிறுத்தவும். 

ஆனால் உங்களை நேசிப்பவர் உங்களை வாழ்நாள் காதலராக நினைக்கும் பொழுது வாழ்க்கையில் நீங்களின்றி அவர் இல்லை என உங்களோடு அவரை ஒருவராக பார்க்கும் பொழுது  நீங்கள் சீசனல் காதலராக, அல்லது ஆசையில் ஈடுபாடு கொண்ட காதலர் எனில் அது உங்களையே உயிராக நினைப்பவருக்கும் கொடுக்கும் வலியை எண்ணிப்பார்க்கவும். 

உணர்வை காயப்படுத்தாமல் இருப்பது நல்லது. உணர்வை காயப்படுத்தாத காதலாக இருப்பது காதலர்க்கு நல்லது வேண்டும் என்றபொழுது பெற்றுக் கொண்டு வேண்டாம் என்ற பொழுது விட்டுவிடலாம். 

காதல் வகைகள்

காதல் வாழ்க்கை: 

காதலிப்பவரை உயிராக நினைத்து உணர்வை  கொடுத்து அதனால் அவர் அதிக அளவில் காதலிப்பவருடன் ஈடுபாடு கொள்ளும் பொழுது அதன் தாக்கம் வேறு  மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் அன்புக்குரியவர் சீசனல் காதலராக இருந்து உங்களிடம் விளையாட்டு  காட்டி விட்டு சென்றால், வீணாக உங்களை துன்படுத்திக் கொள்ளாதீர்கள்.   

காமத்தால் வரும் காதல் காமம் கசக்கும் பொழுது குறிப்பிட்ட மனிதரும் கசத்து போவார். இந்த ரகம்  இதயம் மனது குறித்து ஆராயது கிடைத்தவரை லாபம் என காதலில் கசந்து செல்லும். 

மேலும் படிக்க: எல்லைகளை கடந்த எல்லோருள்ளும் பயணிக்கும் காதல்!

காதல் வகைகள்

உங்கள் காதலர்  எந்த ரகம் கணியுங்கள்: 

நீங்கள் உண்மையாக  அன்பு கொண்டவரா உங்களுக்குள் இருப்பது  என்ன காதல் என்பது தெரிந்து, உங்களை நேசிப்பவர் உண்மையாக காதலிக்கின்றாரா  அல்லது உங்களை போன்று இல்லாமல் சீசனல் காதலரா அல்லது உங்களிடம் எதையாவது எதிர்ப்பார்த்து காதலிக்கின்றராரா என்பதை தெரிந்து செயல்படவும்.  உங்கள் காதலைப் போல் உங்கள் காதலரிடம் உண்மை இல்லை எனில் ஜகா வாங்கிவிடவும். 

எதிர்பார்பற்றது: 

காதல் எதையும்  எதிர்பார்க்காது அது  உங்களிடம் அன்பை மட்டும் எதிர்ப்பார்க்காது. அது உங்களை சக மனிதமாக மதிக்கும். பலருக்கு வாழ்வில் அந்த வரமாகும். சிலருக்கு வாழ்வில் அது இனிய நினைவாகும். இன்னும் சிலருக்கு அது பொருட்டானதாக இருக்காது. இதுதான் மனிதர்கள் இப்படிதான் வாழ்வானது இருக்கும் இதற்காக நாம் மெனகெட கூடாது.  நம்மை நாமே காயப்படுத்திக் கொள்ள கூடாது. 

மேலும் படிக்க: அன்பின் அடுத்த பரிமாற்றம் அழகிய முத்தம்

காதல் வகைகள்

 காதலில் முழுமையாக அர்த்தங்கள் இருக்கும் பொழுது வாழ்கையானது இனிமையாக இருக்கும். காதல் மட்டும் வாழ்கையாக இருக்காது காதலை கடந்த உலகம்  என்பது உள்ளது. அவற்றில் குடும்பம் உங்களை நேசிக்கும் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், நன்பர்கள், உறவினர்கள், சுற்றத்தார், உங்கள் தனித்திறமை அவற்றில் நீங்கள் சாதிக்க வேண்டியது அவசியமாகும். 

காதலில் ஜெயித்தல்  தோற்றல் என்பது அது ஒரு உணர்வு, அந்த காதல் உணர்வை கடந்து வரும் பொழுது இருக்க வேண்டிய கவனம் உங்களிடம் இருக்க வேண்டும். அது இருந்தால் வாழ்வில் அனைத்து நலனும் பெறலாம். 


மேலும் படிக்க: நான் அறிந்த உலகத்தின் உத்தம காதலன்!

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன