கேரளாவில் கண்ணகிக்குக் கோயில் எடுத்த சேர மன்னன்.!

  • by
kerala's famous kodungallur bhagavathi amman temple bulit by chera king

கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவில் கேரளாவில் உள்ள மிக சக்தி வாய்ந்த அம்மன் கோவில் ஆகும். பெரியம்மையால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் இந்நோயில்  இருந்து குணமடையலாம் என்பது கால காலமாக இருந்து வரும் நம்பிக்கை. இந்தக் கோவில் உருவாக்கியதற்கான காரணங்கள் பல உள்ளன. திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பகவதி அம்மன் கோயிலில், எட்டு கரங்கள் கொண்ட பத்திரகாளி, மூலவராக இருக்கிறார். இங்கு இருக்கும் அம்மன் கொடுங்கோளூர் அம்மை என்று அழைக்கப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் கண்ணகியாகவும் மக்கள் வழிபடுகின்றனர்.

வரலாறு

பண்டைய காலத்தில் தோன்றிய கோவில் இது என்று சங்க இலக்கிய நூல்களின் மூலம் தெரியவருகிறது. கேரளா உருவாவதற்கு காரணமாக இந்த பரசுராமர் மற்றும் அந்நாட்டு மக்களை, தாரகன் என்னும் அரக்கன் துன்பப்படுத்தி கொண்டிருந்தான். அப்போது அந்த அரக்கனால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற பரசுராமர் அருகிலிருந்த சிவனிடம் வேண்டி தங்களைக் காத்தருளும்படி கூறினார். 

அப்போது சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து பத்திரகாளியாக தோன்றிய சக்திதேவி மக்களை கொடுமைபடுத்தியதாக தாரகனை அழித்து வதம் செய்தாள். இந்நிகழ்வுக்குப் பிறகு பரசுராமர் அங்கு சக்தி தேவிக்கு என்று ஒரு ஆலயம் நிறுவி வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆரம்பக் காலகட்டங்களில் சிவனுக்கு கோவிலாக இருந்த இந்த ஆலயம் பின்னர் பகவதி அம்மனுக்கு என்று மாறியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க – அனுமானை வழிப்படும் முறைகள்…!

கேரளாவில் உள்ள மக்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பகவதி அம்மனை வழிபட்ட பிறகே அவர்கள் அந்த நிகழ்வினை தொடங்குகிறார்கள். சிவன் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட அம்மன் பத்ரகாளியாக  காட்சி அளித்ததால் இக்கோவிலில் பகவதி அம்மனுக்கு உயிர் பலி கொடுத்தும், கள் நெய்வேத்தியம் செய்தும் மக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். அதன் பிறகு ஆதி சங்கரர் சக்கரம் பிரதிஷ்டை செய்து இங்கு வீற்றிருக்கும் அம்மனை சாந்த சொரூபி ஆக்கினார் என்று வரலாறு கூறுகிறது. அதனால் உயிர் பலியும், கள்  நெய்வேதியம் போன்றவை கொடுப்பதை தவிர்த்து, குங்குமத்தில் குருதி பூஜையும், கள்ளிற்கு பதிலாக இளநீர் மஞ்சள் பொடியும் கலந்து நைவேத்தியம் செய்வதற்காக ஒரு நம்பூதிரியை ஆதிசங்கரர் நியமித்து இருக்கிறார்.

இங்குள்ள அம்மனின் விக்ரகம் பல மரங்களால் செய்யப்பட்டது. அம்மனின் கருவறைக்கு அருகில் ஒரு ரகசிய அறை காணப்படுகிறது. இதற்கும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. அம்மனுக்கு எதிராக சிவனுக்கு ஆலயம் உள்ளது. ஆனால் இங்கு பகவதி அம்மனுக்கே முக்கியத்துவம் அளித்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

வைசூரி மலை அம்மன்

கொடுங்கலூர் அம்மைக்கு லோகாம்பிகை, கன்யகா தேவி என்ற புனைப் பெயர்களும் உண்டு. மனோதரி என்னும் பெண் அம்மனிடம் சென்று கன்யகா தேவியிடம் இருந்து தனது அசுர கணவனை காப்பாற்றும்படி வேண்டி நின்றாள். அம்மனும் தனது உடலில் இருந்து வெளியான சில வியர்வைத் துளிகளை மனோதரியிடம்  கொடுத்து இந்த தீர்த்தத்தை பயன்படுத்தி உன் கணவரை மீட்டு கொள் என்று சொல்லி அனுப்பினார்.

ஆனால் மனோதரி செல்வதற்கு முன்பாகவே கன்யகா தேவி அசுரனைக் கொன்று விட்டாள். இதனால் கோபம் கொண்ட மனோதரி தன்னிடமிருந்த தீர்த்தத்தை கன்யகா தேவி மீது தெளிக்க அவளது உடல் வெப்ப நோயால் பாதிக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. அதன்பிறகு சிவபெருமான் தேவியின் வெப்பநோயை குணப்படுத்தினார். எனவே மனோதரிக்கு இத்தளத்தில் சன்னதி உருவானது. அதனால்தான் இது வைசூரி மலை என்று அழைக்கப்படுகிறது. இந்த அன்னையை வழிபடும் பொழுது பெரியம்மை போன்ற வெப்ப நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

கண்ணகி

சிலப்பதிகார வரலாறின் படி கோவலன் மிகப் பெரும் பணக்காரியான கண்ணகியை திருமணம் செய்து கொள்கிறான். ஆனால் கூடா நட்பால் இவனது அனைத்து செல்வங்களையும் இழந்து கடைசியில் மனைவியுடன் பிழைப்புக்காக மதுரை வந்து சேர்கிறார்கள். அங்கு கஷ்டத்திற்காக தனது மனைவியின் கால் சிலம்பை விற்க நினைக்கும் கோவலன், அதை விற்க முயலும் போது மதுரை அரசியின் காணாமல் போன கால் சிலம்பும் இதுவும் ஒரே மாதிரியாக இருந்த காரணத்தினால், இவன் மீது குற்றம் சாட்டப்பட்டு மன்னனின் ஆணையால் கோவலன் கொல்லப்படுகிறான்.

மேலும் படிக்க – சிறப்புமிக்க தைப்பூசத் திருநாள்..!!

கணவன் இறந்த செய்தியைக் கேட்டதும் கண்ணகி கோபத்துடன் மன்னனின் அரசவைக்கு சென்று மன்னனை சபிக்கிறாள். இது நாம் அனைவரும் அறிந்த வரலாறு. அதன்பிறகு கண்ணகி கோபத்துடன் சேர நாடு நோக்கிச் செல்கிறாள். மதுரையை எரித்த பிறகு சேர நாட்டிற்கு வந்த கண்ணகி உக்கிர கோலத்தில் இந்த கோயிலில் அம்மனை வேண்டி தவத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அதன் பயனாக அம்மன் கண்ணகியை தன்னுள் இழுத்துக் கொண்டு அவளுக்கு முக்தி வழங்கியதாக இங்குள்ள தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. கண்ணகியின் கற்பு நெறியை அறிந்து வியந்து அவளை தெய்வமாக வழிபட நினைத்த சேரமன்னன்,  சேரன் செங்குட்டுவன் கோயில் கட்டி பகவதி அம்மனாக வழிபாடு செய்திருக்கிறான். இக்கோயிலே பின்னர் பகவதி அம்மன் கோயிலாக மாறியதாக தெரிவிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன