சுற்றுப்புற சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்..!

  • by
keep your surroundings clean and safe

சுற்றுப்புற சூழலை நாம் பாதுகாப்பாக வைப்பதற்கு நாம் அதிக அளவிலான செடிகள் மற்றும் பூக்களை நடவேண்டும். இதன் மூலமாக நம்முடைய பூமியின் எதிர்காலம் பல மடங்கு அதிகரிக்கும். அதைத் தவிர்த்து நம்முடைய சுற்றுச்சூழல் மற்றும் நம்முடைய காற்றின் தன்மை தூய்மையாகும். எனவே நம் சமுதாயத்தை தூய்மையாகவும் அழகாகவும் அதற்கு நாம் செய்ய வேண்டிய வழிகள்.

மரங்களை பராமரிக்க வேண்டும்

நம்முடைய சுற்றுப்புற சூழல் பெரிதாக பாதிப்படைவதற்கு முழுக்காரணம் நம்மால் வெட்டப்படும் மரங்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடப்படாத மரங்களை இன்றும் ஏதோ ஒரு மூலையில் வெட்டி கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் பல்வேறு விதமான காரணங்கள் சொல்வார்கள். அது நியாயமாக இருந்தாலும் இயற்கையை அழத்து நமக்கு ஒரு நன்மை கிடைக்கிறது என்றால் அது தீமை என்றே கருத வேண்டும். எனவே முடிந்தவரை மரங்களை வெட்டுவதை தவிர்த்து அதற்கு நீர் ஊற்றி பராமரிக்கலாம்.

மேலும் படிக்க – வளமாக வாழ வேண்டுமா? அப்போ வாழைப்பழம் சாப்பிடுங்கள்.!

புதிய செடிகளை நடவும்

நம்மால் முடிந்தவரை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உகந்த புதிய செடிகளை நாம் நடலாம். உங்கள் வீட்டில் இடங்கள் இல்லை என்றாலும் மாடியில் அல்லது ஜன்னல் ஓரங்களில் நம்மால் முடிந்தவரை பூக்கள் அல்லது செடிகளை நட்டு உங்கள் இல்லத்தையும் அழகாக்கி, உங்கள் சுற்றுச்சூழலையும் அழகாக மாற்றலாம்.

வாகனங்களை குறைவாகப் பயன்படுத்துங்கள்

நீங்கள் வாகனங்களை அதிகமாக பயன்படுத்துவதாக இருந்தால் முடிந்தவரை உங்கள் வாகனங்களை தேவையற்ற சமயங்களில் அணைத்து வையுங்கள். நீங்கள் எந்த அளவிற்கு வாகனங்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு அதில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் பெரிதாக பாதிப்பு அடையும்.

மறுசுழற்சி செய்யுங்கள்

நாம் அதிகளவில் குப்பைகளை தெருவோரங்களில் கொட்டுகிறோம். இதனால் உங்கள் சுற்றுச்சூழல் பெரிதாக பாதிப்படையும். சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நெகிழியை பயன்படுத்தக்கூடாது என்ற சட்டத்தைப் பிறப்பித்தார்கள், இது மிக வரவேற்கத்தக்க ஒரு சட்டமாகும். ஏனென்றால் இதன் மூலமாக நமது நிலத்தடி நீர் பெரிதாக வளரும் என்று எதிர்பார்க்கலாம். நம் குப்பைகளாக வெளியே வீசப்படும் பொருட்கள் பூமிக்கு அடியில் சென்றடைந்து நம்முடைய நிலத்தடி நீரை உறிஞ்சும். நம்முடைய நிலத்தை பாதிப்படைய செய்கிறது. எனவே குப்பைகளை அதற்கேற்ற இடங்களில் போடுங்கள். மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டு வகையாகப் பிரித்து அதற்கேற்றபடி நீங்கள் போடும் குப்பைகளினால் உங்கள் சுற்றுச்சூழல் அழகாகும்.

மேலும் படிக்க – திவ்விய மூலிகை திருநீற்றுப்பச்சிலை அறிவேமா

நம் வீட்டை எப்படி தூய்மையாக பார்த்துக் கொள்கிறோமோ அதே போல் நம்முடைய சுற்றுச்சூழலையும் தூய்மையாக பார்ப்பதன் மூலமாக உங்கள் சமுதாயம் அழகாகும். இது அனைத்திற்கும் மேலாக நீங்கள் செய்யக்கூடிய ஒரு சிறிய செயல் மூலமாக உங்கள் மற்றும் உங்களின் எதிர்கால சகோதர, சகோதரியின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன