உடல் உஷ்ணத்தை சீராக்கி ஆரோக்கியமாக வாழுங்கள்..!

  • by
keep you body temperature at low level and live healthy

இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் கத்திரி வெயில், அக்னி வெயில் போன்றவைகள் வரவிருக்கிறது. இதனால் வெளியே சுற்றும் மக்களின் உடல் உஷ்ணமாகி ஏராளமான உடல் பிரச்சினைகள் உண்டாகும். எனவே வெயிலின் தாக்குதலை எளிதாக எடுத்துக் கொள்ளாமல், மே நான்காம் தேதிக்குப் பிறகு நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் உடல் பிரச்சனைகள் உண்டாகி உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

கோடைக்காலம்

கோடைக்காலத்தில் வெப்பத்தினால் பல பிரச்சனைகள் ஏற்படும், இது இயல்பாகவே எல்லா மாவட்டத்திலும் அதிகரிக்கும். எனவே வெயிலின் தாக்கத்தினால் கட்டிகள், சிறுநீரகப் பிரச்சனை, பக்கவாதம், மூலநோய், நரம்புத் தளர்ச்சி போன்றவைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் இச்சமயத்தில் நம்முடைய உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும், அதற்கு ஏற்ற குளிர்பானங்களை அருந்த வேண்டும். குளிர்பானம் என்றவுடன் கார்பனேட் குளிர்பானங்கள் மற்றும் பாட்டில்களில் அடைத்து வைக்கும் குளிர் பானங்களை அருந்தக் கூடாது.

மேலும் படிக்க – உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் கற்பூரம்..!

குளிர்ந்த உணவு

நாம் சாப்பிடும் 3 வேளை உணவுகளில் நம் முடிந்த வரை காரத்தைக் குறைக்கவேண்டும். அதைத் தவிர்த்து மோர் மற்றும் ரசம் போன்றவைகளை செய்து உணவாக அருந்த வேண்டும். அதேபோல் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும், சூடு அதிகமாக உள்ள காய்கறிகளை தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியைத் தரும் முள்ளங்கி, வெள்ளரிக்காய், தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், கேரட் போன்றவற்றை சமைத்த உணவுகளை அருந்துங்கள்.

குளிர்பானங்கள்

குளிர்பானங்கள் என்றால் பிரிட்ஜில் இருந்து எடுத்துக் கொடுக்கப்படும் குளிர் பானம் அல்ல, குளிர்ச்சியை அளிக்கும் குளிர் பானங்களை அருந்துங்கள். வீட்டிலுள்ள கற்றாழையை மோரில் கலந்து சாப்பிடுவதன் மூலமாக உடனடியாக குளிர்ச்சி கிடைக்கும். அதேபோல் எலுமிச்சைசாறு அல்லது ஆரஞ்சு பழச்சாறு போன்றவற்றை அருந்துங்கள். முடிந்தவரை பிரிட்ஜில் இருக்கும் குளிர்ந்த நீரை தவிருங்கள்.

மேலும் படிக்க – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி நீர்..!

சன் ஸ்கிரீன்

நம் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கு எப்படி குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறோமோ, அதே போல் வெயிலின் தாக்குதலை சமாளிக்கும் க்ரீம்களையும் நாம் பயன்படுத்த வேண்டும். எனவே வெளியே செல்வதற்கு முன்பாக மாய்ச்சுரைசிங் க்ரீம் மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். அதேபோல் வாகனங்களில் செல்லும் பொழுது துணிகளில் உங்கள் முகம் மற்றும் கைகளை மறைத்துக் கொள்ள வேண்டும். நடந்து செல்லும்போது குடைகளை பயன்படுத்தலாம்.

கொரோனா வைரஸின் தொற்று மிக எளிதில் பாதிக்கக்கூடியவர்கள் வெயிலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் இவர்களின் உடல் வெப்பமடைந்து உடல் பிரச்சனைகள் உண்டாகும். இதனால் கொரோனா போன்ற வைரஸ் தொற்று மிக எளிதில் உருவி உங்கள் உடல் நிலையை பாதிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன