வீட்டிலுள்ள எளிய மூலிகையில் எல்லாம் இருக்கு

  • by

உலகை ஆட்டுவிக்கும் தொற்றாக இருக்கின்றது. கொரோனா போராட்டம் இன்று உலகம் முழுவதும் பரவி பெரும் அளவில் ஊரடங்கு காணப்படுகின்றது . கொரானா தடுப்பு மருந்துகள் தொடரபான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெறுகின்றது.  இந்தியாவில் பல சிக்கல்களை நாம் சந்தித்து வருகின்றோம். நாடு முழுவதும் வீட்டில் முடங்க வேண்டிய ஊரடங்கு உத்தரவானது பிறக்கப்பிட்டு வருகின்றது. இந்த லாக்டவுனில் அவசியமாக நாம் கற்க வேண்டிய ஒன்று அவசிய மூலிகைகள் குறித்து நாம் தெரிந்திருக்க வேண்டும். 

உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்ய நாம் சில வழிமுறைகளை கையாள வேண்டும்.   உடல் நலத்தை காக்க வீட்டில் சமைத்து கொடுங்க. வீட்டில் உள்ள எளிய உணவுகள் எவ்வளவு முக்கியச் சத்துக்கள் கொண்டுள்ளது என்பதை அறிய வேண்டியது அவசியம் ஆகும்.  இதனைப் பற்றிய தொக்குப்பை இங்கு பார்ப்போம். 

துளசி: 

 இந்திய குடும்பங்களில்  துளசி அதிகம் பயன்பாடு கொண்டத இருக்கின்றது. வாரம் ஒரு முறை கோவிலுக்கு சென்றால்  நிச்சயம் துளசி தீர்த்தம் மருந்தளவே குடித்தாகனும். இதன் அருமை பலர் தெரிந்து வீட்டில் துளசி வளர்ப்பை கட்டாயமாக்கியுள்ளனர். 

கற்பூரவள்ளி : 

பார்க்க மொசு மொசுவென வெல்வெட்டு துணிப் போல் இருக்கும் இதன் இலைகள் ஆனால் அபூர்வ மூலிகை இது இதனை ஓமவல்லி என்றும் அழைப்பார்கள் இது வீட்டில் இருந்தால் தேவையற்ற  பூச்சிகள் வராது. சளியை போக்கும். வீட்டில் எளிய மூலிகையாக இதனை வளர்க்கலாம். 

மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் செயல்கள்..!

இதன் இலைகளில் உள்ள கார்வாக்ரோல் ஆன்டி-வைரலாக மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தி நரம்புகளை காக்கும். இதனை தினமும் காலையில் 10 இலைகளை சாப்பிட்டு வருதல் பலவானாக நம்மை உருவாக்கும் ஆற்றல் உண்டு.

வெந்தயம் இல்லா வீடு வெறுமைக்கு சொந்தம்: 

வீட்டில் அஞ்சரைப் பெட்டியில் கடுகும், வெந்தயம் கட்டாயமாக இருக்கும். இதிலுள்ள ஆன்டி-வைரல் பண்புகள் முளைக்கட்டிய வெந்தயத்தில் நிறைந்து காணப்படுகிறது.   வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் உடலை பலப்படுத்துகின்றது. பெண்களுக்கு இது நல்லது ஆகும்.

உடலை குளிர்ச்சியாக வைப்பதில் முக்கியப் பங்காற்றும். முளை கட்டிய வெந்தையத்தை தினமும் சிறிதளவு உட்கொண்டு வருவது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட வல்லது.

புதினா நீர்ச்சத்து:

புதினா உடல் நலத்துக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றது.  நறுமணத்துடன் நீர்ச்சத்து, புரதம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், தயாமின், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள், உலோகச்சத்துக்கள் ஆகிய அனைத்தும் புதினாவில் நிறைந்து காணப்படுகின்றது. வாரம் இரு முறை புதினா பயன்படுத்துதல் நல்லது ஆகும். 

புதினாவின் காரம் மற்றும் சுவைக்கு அப்பாற்பட்டு இதில்  ஆன்டி-வைரல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. சுவாசம் சீராக இயங்க வைக்கின்றது. புதினா நமது உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க: அதிமதுரத்தை சித்த மருத்துவத்தில் ஏன் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்..!

சோம்பு: 

சோம்பு வாசனையை அதிகரிப்பதுடன், ஜீரண உறுப்பை சீராக்கும் ஒன்றாக விளங்கும் சோம்பிலும் வைரஸை எதிர்க்கும் ஆற்றல் இருப்பது ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

பூண்டு:

பூண்டில் இருக்கும் மருத்துவ பண்புகளை எண்ணி பார்க்க முடியாதவை. அனைத்து விதமான நோய்களில் இருந்தும் பூண்டு பெரிய அளவில் மனிதர்களை பாதுகாக்கிறது. தினசரி உணவில் கட்டாயம் பூண்டு சேர்க்கலாம் . அதிகமான ஆன்டி-வைரல் பண்புகளை உள்ளடக்கிய பூண்டை தவிர்க்காமல் இருப்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும்.

இஞ்சி:

பூண்டிற்கு நிகராக இஞ்சியும் ஆரோக்கியத்தை கொடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.  உட்பொருட்களால் வைரஸ் மனிதர்களின் செல்களுக்குள் நுழைவதை தடுக்கிறது. 

இஞ்சியில் உள்ள சத்துக்கள் ஆண்டி  வைரஸ் தன்னை பன்பை தன்னுள் கொண்டு போராடுகிறது. ஆன்டி-வைரல் பண்புகளை அதிகமாக கொண்டுள்ளதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம் ஆகும்.  ஜீரணம், சளி, சுவாசப் பிரச்சனை போன்ற அனைத்தையும் சரி செய்யும் சக்தி இஞ்சிக்கு உண்டு.

மேலும் படிக்க: மஞ்சள், வேப்பிலை கலந்த உப்பு நீரை வீட்டைச் சுற்றி தெளியுங்கள்.‌.!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன