கார்குழல் கூந்தல் அழகுக்கு கரிசாலை வேண்டும்!

  • by

கரிசலாங்கண்ணி இது நீர்வளங்கள் அதிகமுள்ள இடங்களில் வளர்கிறது. இது கிராமப்புறங்களில் ஆற்றங்கரை அருகில் அல்லது ஏரிகள், குளம் அருகில் வளரக்கூடியது. இதில் இரண்டு விதமான பூக்கள் மலரும் ஒன்று, வெள்ளை கரிசலாங்கண்ணி மற்றொன்று மஞ்சள் கரிசலாங்கண்ணி. இந்த கரிசலாங்கண்ணிக் கீரையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன இதனால் உங்களுக்கு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இதனால் தீர்வு காண முடியும்.

கரிசலாங்கண்ணிக் கீரையில் வைட்டமின்கள் ஏ, சி, சுண்ணாம்பு சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருக்கின்றன மற்றும் இதில் எக்லிப்டால், வெடிலோலாக்டோன், டெஸ்மீத்தைல், ஸ்டிக்மாஸ்டீரால், ஹெப்டாகோசனால், ஹென்ட்ரை அக்கோன்டனால் போன்ற வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன. 

எல்லா கீரைகளைப் போலவே இதிலும் நீர்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. மஞ்சள் காமாலை நோய் இருப்பவர்கள் தினமும் காலை, மாலை கரிசலாங்கண்ணி கீரையை தண்ணீரில் அலசி அப்படியே மென்று சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமடையும்.

மேலும் படிக்க – வீட்டிலேயே மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்வது எப்படி?

அல்சர் நோய்க்கு கரிசலாங்கண்ணி இலையில் இருந்து எடுக்கப்படும் சத்துகளை மாத்திரையாக மாற்றுகிறார்கள். எனவே அல்சர் உள்ளவர்கள் இந்த கீரையை காய வைத்து பொடியாக்கி அதை தினமும் தண்ணீரில் கலந்து நான்கு மாதங்கள் குடித்து வந்தால் அல்சர் பிரச்சனை அடியோடு நீங்கிவிடும். மேலும் அஜீரணக் கோளாறு, குடல் புண் போன்ற நோய்களை இது வரவிடாமல் தடுக்கும்.

நீரிழிவு நோய்க்கு கரிசலாங்கண்ணி கீரை சிறந்த மருந்தாகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த கீரையை தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். பின்பு இதில் சிறிய வெங்காயத்தை சேர்த்து ஆறவைத்து வாரம் இருமுறை சாப்பிட்டால் உங்கள் உடலில் இருக்கும் சர்க்கரையை சமநிலைப்படுத்தி நீரிழிவு நோயில் இருந்து உங்களை பாதுகாக்காது.

கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிடுவதனால் உங்கள் உடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது. புற்றுநோய் ஏற்படுவதற்கான தாதுக்கள் குறைபாடுகளை சரிசெய்து, தாதுக்களை சமநிலையில் வைக்கிறது. இதுமட்டுமில்லாமல் புற்றுநோய் செல்களை வேருடன் அழிக்கிறது.

கரிசலாங்கண்ணிக் கீரை கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உங்கள் கண்கள் வரட்ச்சி அடைவதால் ஏற்படும் பிரச்சினையிலிருந்து தீர்வு காண்பதற்காக கண்ணுக்குள் இருக்கும் நரம்புகளில் நீர் சக்திகளை அதிகரிக்கச் செய்கிறது, இதனால் பார்வை நரம்பு வலுவடைகிறது. தோலழற்சி, சுவாசப் பிரச்சனையான ஆஸ்துமா, இருமல் போன்றவர்களை குணப்படுத்துகிறது. இதை தவிர்த்து மிக முக்கியமாக உங்களின் கூந்தலின் அழகை அதிகப்படுத்துவதற்கு இந்த கீரை உபயோகப்படுகிறது.

கரிசலாங்கண்ணிக் கீரையை நன்கு பொடியாக்கி அதனை சிறு சிறு துண்டுகளாக உருட்டி வெயிலில் காயவைத்து விடவேண்டும். பின்பு இதனை தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி உங்கள் தலையில் தேய்த்தால் உங்கள் கூந்தல் கருமையாகவும் மென்மையாகவும் இருக்கும். இது தவிர்த்து முடிஉதிர்தல் பிரச்சினையை இது அடியோடு தவிர்த்து விடும்.

மேலும் படிக்க – பன்னீர் ரோஜாவை கொண்டு அழகு செய்வோம்!

இப்போதிருக்கும் வாழ்க்கை முறையினால் அனைவருக்கும் இளம் வயதிலேயே நரை ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக கரிசலாங்கண்ணிக் கீரையை பொடியாக்கி அதை ஒரு துணியில் கட்டி  தேங்காய் எண்ணெயில் வைத்துவிட வேண்டும். பிறகு அந்த எண்ணெயை வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும். தேங்காய் எண்ணெய் கருநிறமாக மாறியபின் அதை உங்கள் தலையின் வேர்ப்பகுதி வரை நன்கு தேய்த்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நரைமுடி மற்றும் பொடுகு பிரச்சினைகளில் அனைத்தையும் தீர்த்து வைக்கும். 

கரிசலாங்கண்ணிக் கீரையில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கின்றன. உங்களுக்கு தேள் அல்லது தேனீக்கள் கடித்தால் கரிசலாங்கண்ணியை மோரில் கலந்து சாப்பிடுவதன் மூலம் தேள் கடித்ததால் ஏற்படும் விஷயங்கள் உடலை விட்டு இறங்கும். அதேபோல் தேனி கடித்த இடத்தில் இதை தடவினால் தேனியால் ஏற்பட்ட காயம் குணமாகும். இத்தகைய மருத்துவ குணங்கள் வாய்ந்த கரிசலாங்கண்ணியை அதிகமாக உட்கொண்டால் உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்க வாய்ப்புள்ளது, எனவே சரியான அளவில் சரியான நேரத்தில் இதை எடுத்துக் கொள்வது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன