கரகாட்டம் தமிழர்களின் பாரம்பரிய கலை..!

  • by
karakattam the pride dance of tamil culture

நாம் பள்ளியில் கற்கும் பாடங்களினால் நம்முடைய பொது அறிவு வளருமே தவிர நம்முடைய கலை உணர்வு மற்றும் கலை பற்றிய தெளிவு நமக்குக் கிடைப்பதில்லை. இதனால் ஏராளமான கலைகளை நாம் புறக்கணித்து வருகிறோம், அப்படி தமிழர்களினால் மறக்கப்பட்ட மற்றும் பலராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு கலைதான் கரகாட்டம்.

கரகாட்டத்தின் சிறப்பு

தமிழர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து கலைகளிலும் ஏதேனும் ஒரு சிறப்பு நிச்சயம் இருக்கும், அப்படி ஏராளமான சிறப்புகளைக் கொண்டது தான் இந்த கரகாட்டம். இந்த கரகாட்டத்தின் சிறப்புகளை நகர்ப்புறங்களில் வசிப்பவர்களை விட கிராமப் புறத்தில் இருப்பவர்கள்தான் அதிகமாக ரசிக்கிறார்கள். இது அவர்களின் வாழ்க்கை முறையில் ஒரு முக்கியமான பங்காக பார்க்கப்படுகிறது. அதைத் தவிர்த்து எந்த ஒரு கலை நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அதில் நிச்சயம் கரகாட்டத்தை புகழ்வார்கள். பண்டைய தமிழர்களின் நடனத்தில் மயிலாட்டம், குயிலாட்டம் போன்றவர்களின் வரிசையில் முக்கியமாக பார்க்கப்பட்டது தான் இந்த கரகாட்டம். இதை இன்றும் ஏராளமானோர் பயன்றும் மற்றும் மற்றவர்களுக்கு பயிற்சி கொடுத்தும் வருகிறார்கள்.

மேலும் படிக்க – தனிமை படுத்தப்பட்டவர்களுக்கு அன்பை பரிமாறுங்கள்..!

மீண்டும் கற்க வாய்ப்பு

கரகாட்டத்தை இக்காலத்தில் கற்பதற்காக ஏராளமான கலை கூடங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் அதிலும் தென் தமிழகத்தில் இதற்கான பள்ளிக்கூடங்கள் அதிகளவில் இன்றும் இயங்கி வருகிறது, இருந்தும் உங்களால் அங்கு வரை சென்று பயிற்சி பெற முடியாது. இந்தத் தடையை நீக்கி நீங்கள் கரகாட்டத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அமைக்கப்பட்டதுதான் காணொளி பயிற்சி பட்டறை. இதன் மூலமாக உங்களுக்கு பிடித்த இந்த கரகாட்டத்தை காணொளி மூலமாக கற்றுக்கொள்ள முடியும்.

நேரடி பயிற்சி

அழிந்துவரும் இக்கலையை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதற்காக இருக்கும் கரகாட்ட பட்டறையை தொடர்பு கொண்டு நீங்கள் நேரடியாக பயிற்சி பெறலாம். இதற்காக பிரத்யேக ஏற்பாடுகளை எங்கள் செயலி மூலமாக செய்யப்பட்டுள்ளது. எனவே உங்கள் வயதிற்கு ஏற்றார் போல் இந்த கலையை கற்க முடியும், அதை தவிர்த்து உங்களுக்காகவே ஏராளமான ஆசிரியர்கள் உங்கள் உடல்நிலையைப் பொருத்து ஏற்பாடு செய்துள்ளார்கள். எனவே இந்த கலையை நீங்கள் எளிதிலும் மற்றும் மிகச் சரியாகவும் கற்பதற்கு இந்த செயலி உங்களுக்கு உதவும்.

மேலும் படிக்க – மே 3க்குப்பின் கவனமாக பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும்.

அழிந்து வரும் கலைகளில் இருக்கும் இந்த கரகாட்டத்தை மீண்டும் எழுச்சி அடைய வைக்கும் வாய்ப்பு உங்களிடம் இருக்கிறது. இதை சரியாகப் பயன்படுத்தி இந்த கலையை மேம்படுத்துங்கள். பழைய சினிமாக்களில் மட்டும் தோன்றும் இக்கலைகளை பார்க்க வேண்டும் என்றால் நாம் கிராமப்புறம் வரை செல்ல வேண்டிய சூழல் நிகழ்கிறது, இதை தடுத்து இந்த கலையை நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் சிறுவர், சிறுமிகளுக்கு கற்றுக் கொடுத்து அதை மற்றவர்களுக்கும் காண்பிக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன