காணும் பொங்கல் கலந்து கொண்டாடுவோம்

  • by

காணும் பொங்கல் சிறப்புகள்

தமிழர்களில் மிக முக்கியமான திருவிழா என்பது பொங்கல் திருவிழா இது தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் முதல் நாள் போகிப் பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்நாளில் பழைய பொருட்களை எரித்து அதுவும் நமது பகை, கோபம், துன்பம், சோகம் என அனைத்தையும் எரிப்பதை போகிப்பண்டிகை. இதனை தொடர்ந்து இரண்டாம் நாளன்று பெரும் பொங்கலை கொண்டாடுவார்கள். இந்த நாளில் நமது மகிழ்ச்சியை பொங்கல் மூலமாக பொங்க செய்வார்கள்.

பெரும் பொங்கலை தொடர்ந்து மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவார்கள். இந்நாளில் தன் வீட்டிலிருக்கும் லட்சுமியை, அதாவது பசுமாட்டிற்கு விருந்தளித்து இறைவனை வணங்குவார்கள். அதைப்போல் இந்நாளில் ஜல்லிக்கட்டு போன்ற தமிழர் திருவிழாவை நடத்துவார்கள்.

உற்றார் உறவினர் கலந்து கொண்டாடும் காணும் பொங்கல்:

நான்காவது நாளில் காணும் பொங்கலை கொண்டாடுவார்கள். இந்த நாள் என்பது நம் சொந்தம், பந்தங்கள், உற்றார், உறவினர்கள் போன்றவர்களை மகிழ்ச்சியுடன் சந்திக்கும் நாள். இப்போதைக்கு இருக்கும் காலங்களில் யாரும் உறவினர்கள் வீட்டுக்குச் செல்வதில்லை. இதற்கு பதிலாக சுற்றுலா தளத்திற்கு செல்கிறார்கள்.

மேலும் படிக்க – இயற்கை எழில் கொஞ்சும் வால்பாறை…!

அக்காலங்களில் மக்கள் கிராமப்புறத்தில் வாழ்ந்து வருவதனால் பக்கத்து கிராமத்தில் இருக்கும் அவர்களது சொந்தக் காரர் வீட்டுக்கு செல்வார்கள். ஆனால் இப்போது அனைவரும் நகரத்திற்கு வந்து விடுவதனால் சொந்தக்காரர்கள் வெகுதூரத்தில் இருப்பதனால் வீட்டின் அருகே உள்ள கடற்கரை அல்லது பூங்காக்களுக்கு சென்று காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கழிக்கிறார்கள்.

பொது இடங்களில் ஒன்றுகூடும் மக்கள்:

காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளார்கள். இதைத் தவிர்த்து சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி செல்வதற்காக சென்னையின் பல இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளில் வெறும் பத்து ரூபாய் கட்டணத்தை வசூலிக்கிறார்கள். நாம் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம். இதற்கான கட்டணம் வெறும் 10 ரூபாய். ஆனால் காணும் பொங்கல் கொண்டாட்டத்தை மக்கள் குடும்பத்துடன் செல்வதற்கு தங்களுக்கென ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து வருகிறார்கள். இவர்கள் பேருந்துகளில் செல்வதாக இருந்தால் இன்றைய தினம் வாகன நெரிசல் எதுவும் இல்லாமல் நிம்மதியாக சென்று வரலாம்.

மேலும் படிக்க – ஒரு சராசரி மனிதனின் தினசரி வாழ்க்கை..!

ஒரு சில கிராமப்புறங்களில் காணும் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துகிறார்கள். அதேபோல் சென்னையில் பல இடங்களில் புதிதாக சந்தைகளை உருவாகியுள்ளார்கள். இன்றைய தினம் சென்னையை சுற்றியுள்ள பல நகரம் மற்றும் கிராமங்களிருந்து மக்கள் சென்னைக்கு வருவதினால், இன்று சென்னை முழுவதும் திருவிழாக் கோலமாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன