கொரோனா வைரசை பற்றிய கமல்ஹாசன் உரை..!

  • by
kamal hassan speech about corona virus

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் கொரோனா வைரஸிற்கு எதிராக ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் எப்படி விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்றும், நமது அரசாங்கம் எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மற்றும் சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சியை செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் இந்த காணொளியில் கூறியிருந்தார்.

பிரதமருக்கு நன்றி

கமல்ஹாசன் இந்த உரையை தொடங்குவதற்கு முன்பாக நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார். கமல்ஹாசன் எழுதிய கடிதத்திற்கு உடனடியாக பதிலளித்ததற்காக மற்றும் நமது நாட்டில் நலனுக்காக அவர் எடுத்த ஒரு சில முடிவுகளுக்காகவும் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்தார். சமுதாயத்தில் நடக்கும் அநீதிகள், பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள், இனவெறி, மதவெறி மற்றும் ஊழல்கள் போன்ற அனைத்திற்கும் எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கமலஹாசன் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க – ஹாவர்ட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கணிப்பு..!

இந்தியாவில் நடக்கும் போர்

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தியாவில் மிகப்பெரிய போர்கள் நடந்து வந்தது, ஆனால் இதில் உயிரிழந்தவர்களை விட சுகாதார குறைபாடினால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 15 லட்சத்திற்கு மேல் உயிர் இழக்கிறார்கள் என கமலஹாசன் வருந்தினார். இந்தியா பாதுகாப்பிற்காக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் வெளியிட்டு வந்தது, இந்த ஆண்டில் மருத்துவத்திற்கு இந்தியாவிலும் உள்ள ஒத்து மட்ட தொகைகளில் ஒரு சதவீத தொகையை மட்டுமே அளித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை விட நாட்டு மக்களின் பாதுகாப்பு மிக அவசியம். இருந்தும் நாட்டின் வளர்ச்சிக்கு ஏராளமான தொகைகளை இந்திய அரசு பயன்படுத்தி வருகிறது, அதுவே நாட்டை பாதுகாப்பதற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் மொத்தமாகவே 3 சதவீத தொகையே செலவு செய்துள்ளது.

வளர்ந்த நாடுகள்

வளர்ந்த நாடுகள் அனைத்துமே தங்கள் சுகாதாரத்துறைக்கு கிட்டத்தட்ட 8 சதவீதம் வரை தொகைகளை ஒதுக்குகிறார்கள். இந்தியாவில் இது போன்ற செயலை செய்தால் மட்டுமே நம் நாடு முன்னேறும் என கமல் ஹாசன் கூறியிருக்கிறார். தேசப்பற்று என்பது நாட்டு மக்களின் உயிரை காப்பதாக இருக்க வேண்டும், அதை தவிர்த்து ஆயுதங்களை உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு போட்டியாக இருக்கக்கூடாது என்று கூறினார்.

தொழிலாளர்கள்

நமது நாடு வல்லரசாக வேண்டும் என்றால் நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கு ஏற்று வேலைகளை அரசாங்கம் அமைத்து தர வேண்டும் என்றார். நமது நாடு வல்லரசு நாடாக வேண்டும் என்றால் எல்லைகளுக்கு வெளியே போரிடுவதை தவிர்த்து எல்லைகளுக்குள் இருக்கும் மக்களுக்கு ஊக்கமளித்து அவர்களுக்கு ஏற்ற தொழில்களை இந்திய அரசு அமைத்து தர வேண்டும் என்றார்.

வருமான வரி

நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தொழிலை அதிகரித்தால் நாட்டிற்கு வரிப்பணமும் அதிகரிக்கும். இதன் மூலமாக பொருளாதாரத்தில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாடு முதல் இடத்திற்கு முன்னேறும் என்றார். இந்தியா முழுக்க இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக தமிழ்நாடு மாறவேண்டும் என்றால் அனைத்து மக்களுக்கும், தமிழக அரசு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ன கமல்ஹாசன் கூறினார்.

விவசாயம்

வேளாண்மை துறையையும் மற்றும் நீர் நிலையையும் அதிகரிக்க வேண்டும் என கமல்ஹாசன் இந்தப் பதிவில் குறிப்பிட்டுதிருந்தார். விவசாயிகளின் கடனை குறைத்து அவர்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதைத் தவிர்த்து விவசாயிகளுக்கான அடையாளத்தையும் மற்றும் மரியாதையையும் அனைத்து விதமான அரசாங்க துறையும் அளிக்க வேண்டும் என்றார். இயற்கை வளங்களை பாதுகாத்து மக்களுக்கு ஏராளமான நன்மைகளை அரசு அளிக்க வேண்டும்.

மக்கள் பாதுகாப்பு

இந்தியாவில் சுகாதாரத் துறையை மேம்படுத்தி சுகாதார குறைபாட்டினால் ஏற்படும் உயிரிழப்புகளை முழுமையாக குறைக்க வேண்டும். பிறக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும்  மருத்துவத்தைப் போல் இடைநிலை வயதினர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் நமது அரசாங்கம் இலவசமாக மருத்துவத்தை அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் வசதிகள் அனைத்தும் அரசு மருத்துவமனைகளிலும் இருக்க வேண்டும். அது அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என கமலஹாசன் விரும்பினார்.

மேலும் படிக்க – முக கவசத்தை வீட்டில் செய்வது எப்படி..!

இல்லத்தரசிகள்

நம் நாடு வளர வேண்டுமென்றால் நம் நாட்டு மக்களை மதிக்க வேண்டும், அதேபோல் நம் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளும் அனைவரும் மதிக்க வேண்டும் என்றார். அவர்கள் வீட்டில் செய்யும் வேலைகளை மதித்து அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றார். வீட்டு வேலை செய்யும் பெண்களின் கஷ்டங்களை அனைவரும் அறிந்து அவர்களுக்கான ஊக்கத்தையும் மற்றும் மரியாதையும் அளிக்க வேண்டும். பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கும் போதெல்லாம் சமையல் அறையில் பதுக்கி வைத்த பணத்தின் மூலமாக நமது பொருளாதாரத்தை உயர்த்தியவர்கள் இல்லத்தரசிகள். எனவே அவர்களுக்குத் தேவையான மரியாதையை நமது நாடு அளிக்க வேண்டும்.

கமல்ஹாசன் நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய வேண்டும் என கூறியிருந்தார். பணக்காரர்களிடம் இருக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டை வளர செய்வதை விட ஏழ்மையாக இருப்பவர்கள் அனைவரையும் உயர்த்தி நம் நாட்டின் வருமானத்தையும் மற்றும் பொருளாதாரத்தையும் உயர்த்த வேண்டுமென கமலஹாசன் கூறினார். தமிழ் நாட்டின் வளர்ச்சியையும் மற்றும் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லவும் கமலஹாசன் முழு முயற்சியுடன் இறங்கி உள்ளார் என்பதை தெரிவித்து ஜெய் ஹிந்த் என்று கூறி மக்களிடம் இருந்து விடைபெற்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன