திருமணத்தடையை நீக்கும் காலபைரவர் வழிபாடு..!

  • by
Kaala Bairavan Blessing For Wedding

சிவனின் மற்றொரு அவதாரமாக பார்க்கப்படும் காலபைரவர் தங்களை வணங்குபவரை கடைசி வரை கைவிடாமல் அவர்களுக்கான சிறந்த வழிகளை உண்டாக்குவார். இவர் இருக்கும் சிவாலயங்களுக்கு சென்று இவரை வணங்குவதன் மூலமாக உங்கள் அனைத்து வேண்டுதலும் நிறைவேறும், அதைத் தவிர்த்து திருமண தடைகள் மற்றும் தாமதமாகும் திருமணம் மற்றும் திருமண பாக்கியம் இல்லாதவர்களுக்குக் கூட திருமண யோகம் கிடைக்கும்.

காலபைரவர்

கால பைரவர் என்றால் காலத்தை நம் நினைப்பதைப் போல் மாற்றும் சிவன் ஆவார். அவர் கண்கள் எப்போதும் சிவப்பாக கோபம் உடையதாக இருக்கும் எனவே தீய சக்திகள் நம்மை அண்டாமல் அதை அழிப்பதை குணமாக கொண்டிருப்பவர் தான் காலபைரவன். பெரிய கூந்தல், புலிப்பல் என பார்ப்பதற்கு பயங்கரமாக இருப்பார் காலபைரவன். நம் வேண்டிய அனைத்தையும் நிறைவேற்றும் சக்தியை கொண்டவர்.

மேலும் படிக்க – அனுமானை வழிப்படும் முறைகள்…!

தலைவிதியை மாற்றும் பைரவர்

காலபைரவர் எல்லோரின் தலைவிதியை மாற்றும் சக்தியை கொண்டுள்ளார். இதனால் இவர் இருக்கும் சிவாலயங்களில் இவர் இருக்கும் பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. சனி பகவானின் குரு பைரவர் என்பதால் பைரவரை வணங்குவதன் மூலம் சனி பகவான் நமக்கு ஆசீர்வாதத்தை அள்ளிக் கொடுப்பார். அதேபோல சனிபகவானால் ஏற்படும் இன்னல்கள் அனைத்தும் நீங்கும்.

திருமண யோகம்

21 அஷ்டமி நாளில் பைரவரை வணங்கியவர்கள் எவரும் துன்பத்தில் விழுந்ததில்லை என்பது ஐதீகம். எனவே இந்நாட்களில் காலபைரவன் ஆலயங்களுக்கு சென்று அவர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும். அதை செய்வதன் மூலமாக உங்களுக்கு திருமண யோகம் கிடைக்கும்.

மேலும் படிக்க – சிவராத்திரியில் வில்வ பூஜை செய்து வளம் பெருக

வில்வம் அல்லது செவ்வரளி மாலையை காலபைரவருக்கு சூட்ட வேண்டும். அவருக்கு நல்லெண்ணெய் மூலமாக தீபம் ஏற்றி வழிபடலாம் அதைத் தவிர்த்து மூன்று கண்களுடைய தேங்காயில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி தீபம் ஏற்றி வழிபடலாம். நெய்தீபம், மெழுகுதிரி தீபம் ஏற்றி பைரவரை வழிபடலாம். இதன் மூலமாக அவர்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும்.

எனவே உங்கள் எதிர்காலம் இப்படித்தான் இருக்கப் போகிறது என்று கவலை இல்லாமல் காலபைரவரை வழிபடுவதன் மூலமாக உங்கள் எதிர்காலம் அழகாகும். அதைத் தவிர்த்து உங்கள் எதிர்காலத்தை நீங்களே மாற்றிக் கொள்ளலாம். எனவே உங்கள் பாவங்களை போக்கி புண்ணியங்களை சேர்த்து உங்களுக்கான வாழ்க்கையை கடவுளை வழிபட்டு அழகாக வழங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன