திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்து வந்த பாதை..!

journey of superstar rajinikanth in the indian film industry

என் வழி தனி வழி என்ற சினிமா வசனத்தை உண்மையாக்கியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கதாநாயகர்கள் அவர்களுக்கு என்று பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தனக்கென ஒரு பிரத்தியேகமான ஸ்டைல் உருவாக்கினார் இதன் மூலம் பிரபலமடைந்தது மட்டுமல்லாமல் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக உருவெடுத்தார்.

சினிமா வாழ்க்கை

முதல் முதலில் கே. பாலசந்தர் அவர்களின் கண்களில் பட்ட ரஜினிகாந்திற்கு 1975 ஆம் ஆண்டு “அபூர்வ ராகங்கள்” என்ற படத்தில் ஒரு வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த படத்தின் கதாநாயகன் கமலஹாசன் ஆவார் பின்பு அதே வருடம் ரஜினிக்கு கன்னட மொழியில் “கதா சங்கமா” என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

“மூன்று முடிச்சு”,. “அவர்கள்”, “ரகுபதி ராகவ ராஜாராம்” போன்ற படங்களில் நடித்த பின்பு பாரதிராஜாவின் “16 வயதினிலே” படத்தின் மீண்டும் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது இதை சரியாக பயன்படுத்தி ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

மேலும் படிக்க – தளபதி விஜய் கடந்து வந்த பாதையும் அவரின் வாழ்க்கை முறையும்.!

1970 ஆம் வருடம் இயக்குனர் முத்துராமன் இவரை முதன் முதலில் “புவனா ஒரு கேள்விக்குறி” என்ற படத்தில்  இவரை ஒரு நல்லவன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் .

அதன்பிறகே “பாஸ்கர்” அவர்கள் இயக்கிய “பைரவி” என்ற படத்தில் ஒரு முழுநீள கதாநாயகனாக நடித்திருந்தார் இதுதான் அவரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது இந்த படத்தில் இவர் செய்யும் ஸ்டைலை கண்டே ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தார்கள்.

1978ஆம் ஆண்டு மட்டும் தமிழ் தெலுங்கு கன்னடம் என்று மூன்று மொழிகளிலும் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

இதில் “முள்ளும் மலரும்”, “ஆறிலிருந்து அறுபது வரை”, “ஜானி”, “பொல்லாதவன்”, “பில்லா”, “தீ” என்ற வெற்றி படங்களில் நடித்திருந்தார் பிறகு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் முழுநேர நகைச்சுவை படமான “தில்லு முல்லு” என்ற படத்தில் நடித்து மக்கள் மனதில் நிரந்தரமாக ஓர் இடத்தைப் பிடித்தார்.

மேலும் படிக்க – சிலம்பாட்டம் ஆடிய சிம்புவின் சீறிய வாழ்கை வரலாறு இதுதானுங்க..!

“மூன்று முகம்”, “தங்க மகன்”, “அடுத்த வாரிசு”, ”நான் மகான் அல்ல”, “நான் சிகப்பு மனிதன்”, நடிகர் சிவாஜி கணேசனுடன் இணைந்து “படிக்காதவன்”, “மிஸ்டர் பாரத்”, “வேலைக்காரன்”, “மனிதன்”, “பணக்காரன்”,  “தர்மத்தின் தலைவன்” போன்ற ஏராளமான படங்களை வெற்றி படமாக்கினார்.

1990ல் இவர் கொடி கட்டி பறந்த காலமாகும்

நட்பு என்றால் என்ன என்பதை மிகவும் ஆழமாகவும் அழகாகவும் சொல்லப்பட்ட படம்தான் “மணிரத்தினம்” இயக்கிய “தளபதி” ஒரு புதுவிதமான கதைக்களம் மற்றும் தாய் பாசம், காதல் தோல்வி, நட்பின் பிரிவு போன்ற எல்லாவற்றையும் சரியான அளவில் சேர்த்து ரசிகர்களை திருப்திபடுத்திய படம் தான் “தளபதி” இதைத்தொடர்ந்து இவரின் ஆதிக்கம் 90 முழுவதும் இருந்தது.

“மன்னன்”, “அண்ணாமலை”, ”பாண்டியன்”, “உழைப்பாளி”, “முத்து”, “அருணாச்சலம்”, “படையப்பா”, “சந்திரமுகி”, “சிவாஜி”, “எந்திரன்” என “பேட்டை” வரை இவரின் படங்கள் கொடிகட்டிப் பறந்தன ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சிவாஜி படத்திற்கு பிறகு அங்கீகரிக்கப்பட்டார்.

மேலும் படிக்க – வெற்றி நாயகர் தனுஷின் வாழ்வியல் வழக்கங்கள்

இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை இந்திய அளவில் அதிகமாக கொண்டாடப்படும் நடிகர்களில் ரஜினிகாந்த் எப்போதும் முதல் இடத்தில் இருப்பார் வருகிற பொங்கல் அன்று ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் தான் “தர்பார்” ரசிகர்கள் இதற்காக பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

1 thought on “திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்து வந்த பாதை..!”

  1. Pingback: important persons who helped rajinikanth to emerge as super star

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன