கூட்டுப் பிரார்த்தனை அவசியம் செய்து வளமுடன் வாழ்வோம்

  • by

 லாக்டவுன்  தொடங்கி 5நாட்களுக்கு மேல் கடந்து விட்டது. திறம்பட செயல்பட வேண்டியது அவசியமாகின்றது. இந்த நேரத்தில்  நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கின்றது. லாக்டவுன் நேரத்தில் இருக்கின்ற பயம் போதாது என இருந்தால் இது வேறயா என,  நாம் நினைக்க வேண்டியிருக்கு. அதான் லாக் டவுன் காலத்தில் நாம் படிக்க வேண்டிய பல இருக்கு, இதெல்லாம் நாம் தெரிந்தால்  வாழ்வியலை நாம் திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். இன்று நாம் அவசர உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால் நம்மால் வரலாற்றை திரும்பி பார்க்க  நேரமில்லை. ஆனால் நாம் திருப்பி பார்க்கும் பொழுது உலகம் நோயில் சிக்கித் தவிக்கின்றோம். 

இந்த நேரத்தில் ஒற்றுமை என்பது அவசியம் ஆகின்றது. இதனை நாம் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் ஆகும்.  அனைவரும் அரசாக ஒத்துழைத்தல் நோயின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். அதனை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.  சமூக விலகுதல் என்பது அனைவரும் ஒன்றாக கடைப்பிடித்து வருகின்றனர். அதனை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். 

மேலும் படிக்க: கொரானாவுக்கு மருந்து குறித்து ஆயுவுகள் !

கூட்டுப்பிரார்தனை: 

நாம் அனைவரும் ஒன்றாக அரசுக்கு ஒத்துழைப்பதுடன் அனைவரும் கொரானா என்னும்  தொற்றிலிருந்து காக்கப்பட வேண்டும் என அனைவரும் அவரவர் வீட்டில் இருந்து பிரார்த்தனை செய்யலாம்.  இதற்கு ஒன்று கூடி பிராத்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அனைவரும் ஒன்றாக காலை 5 மணிக்கு மாலை 5 மணிக்கு   ஆரோக்கியத்துடன் அனைத்து மக்களும் வாழ்கின்றனர். அனைவரையும் காத்தமைக்கு நன்றி, தடுப்பு மருந்து கிடைத்துவிட்டது நன்றி என்ற நம்பிக்கையோடு  ஒரே நேரத்தில் அவரவர் வீட்டில் தனித்தனியாக இறை பிரார்த்தனை செய்யலாம். மனிதனால் இயலாத சூழலில் இறைவன் ஒன்றே நமக்கே இறுதி முடிவு ஆகும். நாம்  சேர்ந்த ஜாதி, மதமானாலும் மனிதம் ஒன்றே அதனால் மனிதம் என்ற மனப்பாங்குடன் பிரார்த்தனை செய்யலாம். 


மேலும் படிக்க: கொரோனா வைரஸ் தொற்று நம்மைத் தாக்காமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் முகமூடியின் அவசியம்..!

இறைவன் மீது நம்பிக்கை இல்லாதவராக இருந்தால் இயற்கையின் மீது நிச்சயம் நம்பிக்கை கொண்டிருப்பீர்கள். அந்த இயற்கையிடம் நம் விருப்பத்தை வைக்கலாம். அதுவும் இல்லை எனில் பிரபஞ்சத்திடம் நேர்மறை எண்ணங்களை முன்வைத்து அனைவரும் நலமுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் நன்றி என்ற பிரார்த்தனையை முன்வைக்க  நம் முன் இருக்கும் பெரிய சவால்கள் அனைத்தும் ஈர்ப்புவிதியின் படி உடனடியாக தீரும். ஆனால் நம்பிக்கை என்பது அவசியம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது இலக்கானது எளிதில் அடைய முடியும். 

 நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கின்றது அதற்கான   தேவை வரும் பொழுது நிச்சயம் அது மனிதனுக்கு உதவும் என்பதில் ஒரு தெளிவு இருத்தல் போதுமானது ஆகும்.  இது நமது ஆய்வுகளுக்கு உபயோகமாக இருக்கச் செய்கின்றது. அதற்கான பாசிட்டிவ் வைபுகளை அதிகப்படுத்திக் கொடுக்கும். உலகத்தில் கொத்து கொத்தாக மடிவதை தடுக்க  உதவும் ஒன்றாகும். இந்த பியார்த்தனையை நாம் முழுமயாக செய்ய வேண்டியது அவசியம் ஆகும். நாம் இதுவரை சந்தித்த பேரிடர், நோய் தொற்று அனைத்திற்கும் உலகமானது ஒருங்கிணைந்து வென்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

மீண்டும் மருத்துவத்துறை, ஆய்வுகள் துறை ஒன்று சேர்ந்து முயன்றால் நிச்சயம் எந்த நோயானாலும் வைரஸ் ஆனாலும் மனிதனை விட்டு ஓடும்.  நம்பிக்கையுடன் தேடல் ஒன்றுதான் இன்றைய தேவை. சித்தா, ஆயுர்வேத மருத்துவங்கள் அனைத்தும் டெங்கு போன்ற காய்ச்சலை ஓட விரட்டியது. கொரனாவுக்கு என்ன எதிர்ப்பு மருந்து எனில் நிச்சயம் அவற்றில் இருக்க கூடும். அதற்கும் போதிய ஆய்வுகள் செய்ய அனுமதி கொடுத்து மக்களை காக்க வேண்டும். 

மேலும் படிக்க: கொரோனா வைரஸின் தாக்குதல் எப்போது முடிவுக்கு வரும்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன