கொரோனா வைரஸினால் வேலை இழப்பு அதிகரிக்குமா..!

  • by
job loss due to corona virus

உலக நாடுகளில் இருக்கும் ஏராளமான நிறுவனங்களில் இந்தியர்களின் பங்கு நிச்சயம் இருக்கும். இதனால், ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை துவங்கினார்கள். இந்தியாவில் ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் உருவாகுவதற்கு காரணமாக இருப்பவர்கள் இந்தியர்கள்தான், ஏனென்றால் இவர்களின் உழைப்பு, திறமை மற்றும் சிந்திக்கும் தன்மை போன்றவற்றின் மூலமாக எல்லா நிறுவனங்களும் அதிக லாபத்தை பெற்று வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இவர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள்

நம் நாட்டில் இயங்கிவரும் ஏராளமான நிறுவனங்கள் வெளி நாட்டை சார்ந்தவை, அதிலும் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கியுள்ள அமெரிக்காவில்தான் இந்த நிறுவனங்களின் முதலாளிகள் இருக்கிறார்கள். எனவே இவர்களின் நிறுவனங்கள் நஷ்டத்தில் சென்றால் நிச்சயம் இது இந்தியாவில் பணிபுரியும் மக்களை முழுமையாக பாதிக்கும். சில சமயங்களில் இவர்களின் வேலை இழக்கவும் நேரிடலாம். மராத்திய மாநிலத்தில் ஏராளமான இந்திய நிறுவனங்கள் செயல்பட்டாலும் தென்னிந்தியாவில் ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்களே செயல்படுகிறது. எனவே அதிகமான வரி பணத்தை மீட்டுத் தரும் ஏராளமான நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

மேலும் படிக்க – மக்களை ஊக்குவிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி..!

இந்தியாவில் நிலை

இந்தியாவில் உற்பத்திகள் அனைத்தும் குறைந்து வருமானம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இருப்பு தொகையை வைத்து இந்திய அரசு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது. இதில் மக்கள் அளித்த நிவாரண நிதிகள் மற்றும் வெளிநாடுகள் கொடுத்த தொகைகள் வைத்து நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அரசு வேலை செய்பவர்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தையும் மற்றும் இனிவரும் காலங்களில் அவர்களின் வருமானத்தில் இருந்து 30 சதவீதம் குறைத்து தரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அடுத்த ஒரு வருடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 30 சதவீதம் குறைவான சம்பளத்தையும் பெறுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வேலை இழப்பு

தொழில் செய்பவர்களின் நிலை மிக மோசமாக உள்ளதால் அவர்கள் மீண்டும் தங்கள் தொழிலை புதுப்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே லாக்டவுன் நிறைவடைந்தவுடன் இவர்களுக்கு அரசு உதவ வேண்டும், இல்லையெனில் இவர்களின் தொழில் வளர்ச்சியில் சிக்கல் ஏற்படும். ஏராளமான தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும் வேலையை விட்டு நிறுத்தி வருகிறார்கள். இதைத் தவிர்த்து அதிகமான வருமானம் பெறும் ஊழியர்களை நிறுத்தி அதற்கு பதிலாக இரண்டு முதல் மூன்று ஊழியர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். இது போன்ற சூழ்நிலை எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம் என எல்லாவற்றையும் எதிர்பார்த்து தைரியமாக இருங்கள்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸ் பற்றிய கிரேசி ஃபேக்ட்..!

வங்கிக் கடன்

பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது எனவே இதைத் தடுப்பதற்கு அடுத்த சில மாதங்களுக்கு அனைத்து தனியார் மற்றும் அரசாங்க வங்கிகள் நமக்கு ஏராளமான கடனை அளிக்க திட்டமிட்டுள்ளது. இதைவைத்து நீங்கள் புதிதாக தொழில் துவங்கலாம், இல்லையெனில் எதிலாவது முதலீடு செய்யலாம். எதுவாக இருந்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வதே சிறந்தது.

எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை கணிப்பது மிகவும் கடினமான ஒன்று, எனவே உங்கள் வேலைகளை இழக்கும் வாய்ப்பிருக்கிறது, கூடுதலாக ஏராளமான வேலைகள் உண்டாகும் வாய்ப்பும் உள்ளது. எனவே நேர்மரை எண்ணத்துடன் உங்கள் திறமைகளை வளர்த்து புதிய வாழ்க்கைக்கு தயாராகுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன