ஜப்பானிய குடிநீர் மருத்துவம்..!

  • by
japan-drinking-water-treatment

ஆரோக்கியத்திற்காக மற்ற நாட்டவர்கள் ஏராளமான முயற்சிகளை செய்து வரும் நிலையில், ஜப்பானிய மக்கள் வெறும் குடிநீரை வைத்து தங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து வருகிறார்கள். அதை தவிர்த்து பல பிரச்சனைகள் மற்றும் பாதிப்புகளிலிருந்து இவர்கள் இந்த முறையை பயன்படுத்தி தப்பிக்கிறார்கள். இதை நாம் எப்படிப் பயன்படுத்தலாம் இதற்கு என்ன தீர்வு என்பதை காணலாம்.

ஜப்பானிய குடிநீர் பழக்கம்

ஜப்பானியர் மக்கள் குடிநீர் பழக்கத்தை பின்பற்றுவதற்காக அதிகாலையில் எழுந்து 4 முதல் 5 டம்ளர் நீரை உடனே அருந்துகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லிட்டர் நீரை அவர்கள் அருந்துகிறார்கள். இதற்கு 45 நிமிடங்கள் இடைவெளி விட்டு உணவை உண்ணுகிறார்கள், அச்சமயங்களில் அவர்கள் நீரை அருந்துவதில்லை. இதை முடிந்தவரை வெதுவெதுப்பான நீரில் குடிப்பது நல்லது. ஏனென்றால் அதுதான் உங்கள் கொழுப்புகளை உடனடியாக குறைக்கும்.

இதை இவர்கள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை செய்கிறார்கள். இதனால் இவர்கள் ஆரோக்கியம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் நாம் ஒரு லிட்டர்க்கு அதிகமான நீரை குடித்தால் நமது சிறுநீரகத்திற்கு பாதிப்புகள் ஏற்படும். எனவே சரியான அளவில் நீர் அருந்தி இது தரும் பலன்களை பெறுங்கள்.


மேலும் படிக்க – மன அழுத்தத்தை குறைப்பதற்காக நாம் பின்பற்ற வேண்டிய வழிகள்.!

இதனால் ஏற்படும் நன்மைகள்

தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை அடியோடு அழியும். இதைத் தொடர்ந்து 30 நாட்கள் செய்து வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். அதேபோல் இரண்டாம் நிலை நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதே வழியை பயன்படுத்தலாம்.

உடல் எடையை குறைக்கும்

இந்த சிகிச்சை முறையினால் நம் உடலுக்கு போதுமான அளவு நீர் சக்தியை விட அதிகமாக கிடைப்பதால் நமது மூளையின் ஆற்றல் அதிகரிக்கும் அதைத் தவிர்த்து உடலில் கொழுப்புகள் படிவதை முழுமையாக தவிர்த்து விடுகிறது. உங்கள் உடல் வெப்பத்தை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்வதன் மூலமாக உங்கள் உடல் எடை குறையும். நாம் உண்ணும் உணவுகள் எளிதில் ஜீரணமாக உதவும். தேவையற்ற உணவுகளை உடலில் தங்காமல் கலைந்துவிடும்.

மேலும் படிக்க – உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் ஓமவல்லி.!

கலோரிகளை குறைக்கும்

நீங்கள் முடிந்தவரை பழச்சாறு, சோடா, குளிர்பானங்கள் போன்றவைகளை எடுப்பதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள். இது உங்கள் உடலில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதுதை காணுங்கள். நீர் அருந்துவதால் உடலில் நீர் சக்தி அதிகரிக்கிறது. இதனால் நாம் செய்யும் சிறு சிறு செயலாக இருந்தாலும் கலோரிகளை உடனடியாக வெளியேற்ற உதவுகிறது.

இதை நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வழிகளில் பயன்படுத்தினால் மிக விரைவில் உங்கள் எடை குறைந்து உங்கள் சருமம் பளபளக்கும். வியர்க்க வைக்கும், மலச்சிக்கல் பிரச்சனை என எல்லாவற்றையும் தீர்த்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன