ஜல்லிக்கட்டின் பாரம்பரியம், மாட்டு பொங்கலின் மகிமை

  • by

தென்னிந்தியாவில் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையில் நம் வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்காக கொண்டாடப்படுவதே இந்த மாட்டு பொங்கல். உலகெங்கும் விலங்குகளுக்கான பல அமைப்புகள் இருந்தாலும் அதற்கான பண்டிகை என்பது கிடையாது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து நாம் விலங்குகளுக்கான பண்டிகையை கொண்டாடுகிறோம், இத்தனை சிறப்புமிக்கது இந்த மாட்டு பொங்கல். இந்த தினத்தில் மாடுகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நட்புறவை உண்டாக்குகிறார்கள்.

ஜல்லிக்கட்டு:

ஜல்லிக்கட்டு என்பது இப்போது தொடங்கப்பட்டது அல்ல, சுமார் 2500 வருடங்களுக்கு முன்பு மதுரை அருகில் உருவாக்கப்பட்ட குகை ஓவியத்தில் மனிதர்கள் மாடுகளை கொண்டு விளையாடுவது சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த ஓவியம் வரைவதற்கு முன்பு, ஜல்லிக்கட்டை மனிதர்கள் எத்தனை ஆண்டுகளாக விளையாடி வந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவே இது மிகப் பழமையான பாரம்பரிய விளையாட்டு மட்டுமல்லாமல் உலகில் தோன்றிய முதல் விளையாட்டாக கூட இருக்கலாம்.

மேலும் படிக்க – உங்கள் திறமையை கண்டுபிடிப்பது எப்படி?

பாரம்பரியமான விளையாட்டு:

ஜல்லிக்கட்டு விளையாட்டு ஆண்களின் வீரத்தையும், தைரியத்தையும் போற்று கூடியதாகும். ஜல்லிக்கட்டு காளையான புலிக்குளம் அல்லது காங்கையன் மாடுகளை மனிதர்களுக்கு இடையில் சீறிப்பாய விடுவார்கள், அதனை யார் கட்டுப்படுத்துகிறார்களே அவரே சிறந்த வீரர். அதனைத் தவிர்த்து அவருக்கு பல பரிசுகளையும் அந்த மாட்டு உரிமையாளர்கள் மற்றும் விளையாட்டு நிர்வாகம் அளிக்கும்.

2014 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை உச்சநீதிமன்றம் நிறுவியது, அதன் விளைவாக 2017 நடந்த மிகப்பெரிய அறப்போராட்டத்தின் விளைவாக ஜில்லிக்கட்டுன் மேல் உள்ள தடையை உயர்நீதிமன்றம் விலக்கியது. இவை இன்றுவரை இளைஞர்களால் போராடப்பட்ட மிகப்பெரிய போராட்டம் என்று கருதப்படுகிறது. இதைத்தவிர ஒற்றுமையின் உதாரணமாக இந்த போராட்டம் இருக்கிறது.

வாடிவாசல் திறந்து வா மகனே:

ஜல்லிக்கட்டு விளையாடுவதற்காகவே இந்த காளைகளை தயார் செய்கிறார்கள். ஒவ்வொரு கிராம பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டியை மிகப்பெரிய திருவிழாப்போல் கொண்டாடுகிறார்கள். மாட்டுப்பொங்கல் அன்று தொடங்கி பல மாதங்கள் வரை இந்த விளையாட்டு நீடிக்கிறது.

மாட்டுப் பொங்கல் என்பது மாடுகளுக்காக கொண்டாடப்படும் பொங்கல். விவசாயிகளுக்கு பெரிய அளவில் உதவும் மாடுகளை இன்றைய தினத்தன்று குளிக்க வைத்து அதன் கொம்புகளுக்கு வண்ணங்களைத் தீட்டி, அதற்கு மாலையணிவித்து, மாடுகளுக்கு பூஜை செய்து இறைவனுக்கு படைக்கும் உணவுகளை வழங்கப்பட்டடு மாட்டுப் பொங்கலை சிறப்பு மிக்கதாக கொண்டாடுவார்கள்.

புராணக்கதைகளில், ஒருநாள் சிவபெருமான் நந்தியை பூமிக்கு அனுப்பி மனிதர்களை மாதத்திற்கு 30 நாள் என்னை தேய்த்து குளித்து விட்டு ஒரு நாள் மட்டும் உணவு அருந்தும்படி சொல் என்று அதனை பூமிக்கு அனுப்பினார் ஆனால் நந்தி ஆனது மனிதர்களை 30 நாள் உணவு அருந்தும்படி ஒரு நாள் எண்ணை தேய்த்துக் குளிக்கும்படி தவறுதலாக சொல்லி விட்டது. இதனால் கோபமடைந்த சிவன் மாடுகளான நந்தியை மனிதர்கள் விவசாயம் செய்வதற்கு உதவிக்காக பூமிக்கு நிரந்தரமாக அனுப்பி வைத்தார். இதனால் அவைகள் பூமியில் இருக்கும் மனிதர்களின் உணவு உற்பத்திக்காக பெரிதும் உதவுகிறது.

மேலும் படிக்க – ஆயிரம் வருடம் பழமையான மற்றும் பள்ளிப்படுத்தப்பட்ட ஸ்ரீ இராமானுஜரின் உடல்.!

மாட்டுப்பொங்கலன்று யாரும் அசைவ உணவுகளை அருந்தக்கூடாது. இன்றைய தினம் பாடுகளுக்கு உணவாக பழங்கள், பலகாரங்கள் என படையலை படைக்கவேண்டும். இது நம் இறைவனுக்கு செய்யும் படையலுக்கு இணையானது.

தமிழர் பாரம்பரியம் போற்றும் இந்த மாட்டுப் பொங்கல் அன்று கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டை வெளிநாடு நிறுவனங்கள் அழிக்க முற்பட்டது ஆனால் இன்றுவரை அதை யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு வலுவாக நிற்கிறது ஜல்லிக்கட்டும், மாட்டு பொங்கலும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன