ஊரடங்கை நீட்டித்தால் இந்தியாவுக்கு நல்லது..!

  • by
it is good to extend lock down in india

மே மாதம் 20 வரை உரடங்கை நீட்டிக்க வேண்டும் என மேகாலயா, மிசோரம், மேற்குவங்காளம் போன்ற ஆறு மாநில தலைவர்கள் ஊரடங்கு மே மாதம் 20 வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஏற்கனவே தெலுங்கானா மற்றும் டெல்லி போன்ற மாநிலத் தலைவர்கள் ஊரடங்கு நீட்டிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை விடுத்துள்ளார். இதை தவிர்த்து மீதமுள்ள மாநிலத்தவர்கள் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதையே பின் தொடர்வோம் என்று கூறியிருக்கிறது.

வல்லுனர்கள் கருத்து

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறைவாக உள்ளது. இதைத் தவிர்த்து இந்தியாவில் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள் இத்தனை கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரம் வரை இருக்கிறது. இதை உலக நாடுகளிடையே ஒப்பிடுகையில் பாதிக்கப்படும் சதவீதம் இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளது. ஆனால் ஊரடங்கை நாம் மூன்றாம் தேதிக்கு பிறகு தளர்த்தினாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது, என வல்லுநர்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளார்கள்.

மேலும் படிக்க – வெங்காயச்சாறில் இவ்வளவு நன்மை இருக்கிறதா..!

ஊரடங்கு நீட்டிக்க வேண்டும்

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் ஊரடங்கு 21ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் அந்திர பிரதேஷ், இமாச்சலப் பிரதேசம், கோவா, மிஷோரோம் மற்றும் மேகாலயா போன்ற மாநில தலைவர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முடிவெடுத்து உள்ளார்கள். ஒரு சில மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் முழுமையாக தளர்ந்துள்ளது, இதனால் இது போன்ற மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு மே 3ஆம் தேதிக்கு பிறகு தளர்க்கலாம் என மற்ற மாநில தலைவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். உலக சுகாதார துறை ஜூன் மாதம் வரை ஊரடங்கை பின் தொடர வேண்டும் என உலக நாடுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.

நன்மை அளிக்கும்

பாதிப்புகள் அதிகமாக இருந்த ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் ஊரடங்கு தளர்வு வந்துள்ளது. இந்தத் நிலைக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மருத்துவர்கள் மட்டுமல்லாமல் அந்நாட்டில் இருக்கும் மக்களும்தான். அரசாங்கம் சொல்வதை கேட்டு ஊரடங்கை சரியாக கடைப்பிடித்த ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடு இன்று ஊரங்கிளிருந்து முழுமையாக விடுதலையாகி உள்ளது. ஆனால் இதை சரியாக கடைபிடிக்காத இந்திய மக்கள் ஊரடங்கை நீட்டிப்பதற்கான காரணமாக மாறியுள்ளார்கள். நாமும் அரசாங்கம் சொல்வதைக் கேட்டு கடந்த முப்பது நாட்கள் வீட்டிலேயே இருந்திருந்தால் இன்றைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமையாக குறைந்திருக்கும். அந்த தவறை செய்ததினால் மேலும் ஒரு மாதத்திற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் என சுகாதாரத் துறை கூறியுள்ளது.

மேலும் படிக்க – புரோட்டின் உணவுகளின் அவசியம்..!

இப்போதிலிருந்தே நாம் ஊரடங்கை சரியாக கடைபிடித்தால் ஜூன் மாதத்திற்குள் முழுமையாக கொரோனா அழிந்துவிடும். அதேபோல் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை மட்டும் சரியாக கடைப்பிடித்தாலே கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேல் இந்த வைரஸ் தொற்றை நம்மால் தடுக்க முடியும், அதேபோல் வெளியே சுற்றாமல் அவ்வப்போது உங்களை சுத்தப்படுத்திக் கொள்வதன் மூலமாக 100 சதவீதம் வரை இந்த வைரஸ் தொற்றை நம்மால் தடுக்க முடியும். எனவே மக்கள் அனைவரும் ஒத்துழைத்து இனி வரப்போகும் நாட்களில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன