தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியது அருள்மொழிவர்மன் என்ற உண்மை தெரியுமா!!!

  • by
it is arul mozhi varman who build thanjavur big temple

தஞ்சையில் வீற்றிருக்கும் மிகப்பெரும் கோயில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம். இன்றளவும் கட்டடக் கலையில் சிறப்பு மிகுந்து விளங்கும் இந்த ஆலயம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது என்று நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் யார் இந்த ராஜ ராஜ சோழன். அவரது இயற்பெயர் என்ன என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படி என்றால் இதை தொடர்ந்து படியுங்கள். வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். இராஜராஜ சோழனே அவரது சோழநாடு கடல் கடந்து பரவச் செய்தவர் ஆவார். இந்த ராஜராஜசோழன் சுமார் 30 ஆண்டுகள் சோழநாட்டை ஆண்டிருக்கிறார். இதுவே அவர்களது வரலாற்றில் மிக முக்கியமான வருடங்கள் ஆகும். இவரது ஆட்சிமுறை மற்ற மன்னர்களிடமிருந்து வேறுபட்டு, இராணுவம் நுண்கலை கட்டடக்கலை சமயம் இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய புதிய எழுச்சியை உண்டாக்கிய பெருமை இந்த ராஜராஜ சோழன் எனும் அருள்மொழிவர்மனையே சேரும். 

அருள்மொழிவர்மன் 

இனி அருள்மொழிவர்மன் என்ற பெயரிலேயே இந்த கதையை கொண்டு போவோம். அருண்மொழிவர்மன் சுந்தர சோழனுடைய இரண்டாவது மகன். இவர் ஆட்சிக்காலம் தொடங்கிய முதல் அருள்மொழிவர்மன் என்றே அழைக்கப்பட்டு பின்னர் இவரது மூன்றாம் ஆண்டு ஆட்சி காலத்தின் போது முதலாம் ராஜராஜ சோழன் என அழைக்கப்பட்டார். இவரது தந்தை சுந்தரசோழன் இறந்ததும் இவர் உடனே பதவிக்கு வரவில்லை. 15 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே அருள்மொழிவர்மன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அரசர்களுக்கெல்லாம் அரசன் என்ற புனைப் பெயரை கொண்டு வாழ்ந்தவர் இந்த அருள்மொழிவர்மன். இந்த அருள்மொழிவர்மன் ஆட்சி செய்த காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய சோழர் வரலாற்றிலேயே ஒரு பொற்காலம் என்று கூறினால் அது மிகையாகாது. சோழப் பரம்பரையின் புகழை பொன்னியின் செல்வன் நூலை விட வேறு எதுவும் மிக அழகாக எடுத்துரைக்கும் முடியாது. 

மேலும் படிக்க – தமிழ்தாய் கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா!!!

தஞ்சைப் பெருவுடையார் கோயில்

தஞ்சையில் அமைந்துள்ள மிகப் பெரிய கோவில் இந்த தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம். சோழப் பரம்பரை சிவபெருமானுக்கு என்று ஏராளமான கோவில்கள் எழுப்பி உள்ளனர். அவர்கள் மிக முழுமையான ஒரு சிவ பக்தர்கள் ஆவர். அந்தவகையில் எழுப்பப்பட்டது இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில். இது  தென்னிந்திய வரலாற்றில் தலைசிறந்த சின்னமாகவும் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் வகையில் அமைந்திருப்பது தான் இதன் மிகப்பரும் சிறப்பு. இது ராஜராஜ சோழனின் ஒப்பற்ற நினைவுச் சின்னமாகவும் கருதப்பட்டு இன்றளவும் செல்வ செழிப்போடு விளங்கிவருகிறது. 

ஈழப் போர்

ராஜராஜன் வெற்றி பெற்ற நாடுகளில் இலங்கையும் சேரும். இலங்கையில் இவர் போர் தொடுத்த விதம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அந்த காலத்தில் நாம் போர் தொடுக்க எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அங்கேயேதான் அவர்களுக்கு தேவையான உணவு உடை இருப்பிடம் ஆகியவைக்கு தேவையான வசதிகளை செய்து கொள்ள வேண்டும். ஆனால் 19 வயதில் போர்தொடுக்க சென்ற அருண்மொழிவர்மன் தன்னுடைய நாட்டில் இருந்து போர் வீரர்களுக்கு தேவையான அனைத்தையும் கப்பல் வழியில் கொண்டு சென்று போர் தொடுத்தார். ஈழத்துக்கு போர்தொடுத்து சென்று வெற்றிகரமாக ஈழத்தையும் கைப்பற்றினான் இந்த அருள்மொழிவர்மன். 

அழகன்

அழகில் வானுலகில் வாழும் தேவர்களுக்கு ஈடானவன் இந்த அருள்மொழிவர்மன். இவனது அழகில் மயங்காத மங்கைகளை இல்லை எனக்கூறலாம். இளம் வயதில் வானதி  என்னும் பெண்ணுடன் காதல் வயப்பட்டார் அருள்மொழிவர்மன். காதலை ஒருவருக்கு ஒருவர் உரைக்கும் முன்னே ஈழம் நாட்டிற்கு போர்தொடுக்க சென்றவன் இந்த அருள்மொழிவர்மன்.

வரலாற்றுக்குறிப்புகள் இராஜராஜசோழன் பல பெண்களை திருமணம் செய்திருக்கிறார் என்று கூறுகிறது. பல மனைவிகள் இவருக்கு என்றாலும் குறைந்த அளவிலான குழந்தைககளையே இவர் பெற்றிருக்கிறார். இவரது சகோதரி குந்தவை ஆவார். இராஜராஜ சோழன் எனும் அருள்மொழிவர்மன் குந்தவை பிராட்டி இடத்தில் மிகவும் அன்பு கொண்டிருந்தவர். குந்தவை வீரத்தில் வல்லவனான வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். 

மேலும் படிக்க – தமிழர்கள் மரத்திடம் எந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தார்கள்..!

ராஜராஜசோழன் நினைவிடம்

ராஜராஜ சோழன் என்ற பெயரைக் கொண்ட அருள்மொழிவர்மன் அவர்களது நினைவிடம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் அருகிலுள்ள உடையாளூர் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன