உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா? ஜோதிடரை அணுகுங்கள்!

  • by

ஜோதிடம் என்பது ஒரு வாழ்வியல் அதிசயம். மனிதன் தனது முற்பிறவியில் செய்த நன்மை, தீமைகளின் அடிப்படையில் வாழ்கின்ற பிறவியில் அதற்க்கான யோகங்கள் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஜோதிடத்தை கற்பது சுலபம். ஜோதிடம் என்பது கணிதம் போன்றது விருப்புடன் அதை நாமே போட்டு, விடையையும் தெரிந்து கொள்ளலாம்.

ஜோதி என்பதற்கு தீ என்று பொருள். இந்த அகிலம், கிரகங்கள் மற்றும் பிற வான் பொருட்கள் இயங்குவது, என அனைத்துமே வெய்யோன் எனும் சூரிய பகவானால்தான். பொதுவாக வாழ்க்கை என்பது இருள் சூழ்ந்த பாதை, அதற்கு வழிகாட்டியாக இருப்பது ஜோதி. ஆகவேதான் இதை ஜோதிடம் என்று அழைக்கின்றோம்.

ஜோதிட வகைகள் :

உலகில் பல ஜோதிட வகைகள் நடைமுறையில் உள்ளது. இதில் குறிப்பாக இந்திய முறைப்படி பல வித ஜோதிட முறைகள் பின்பற்றப்படுகிறது. பின்வரும் வகைகள் முக்கியமானவை,

  • நாடி ஜோதிடம்.
  • வேத ஜோதிடம்
  • பிரசன்ன ஜோதிடம்.
  • எண் கணித ஜோதிடம்.
  • பஞ்சபட்சி சாஸ்திரம்.
  • கைரேகை ஜோதிடம்.

மேலும் பல உட்பிரிவுகள் உள்ளது, வெவேறு நாடுகளிலும் ஜோதிட சாயலில் இன்றளவும் நிபுணர்கள் மக்களின் வருங்காலத்தை கணித்து கூறுகின்றார்.

எதிர்கால கணிப்பு :

ஜோதிடத்தின் மூலம் ஜாதக குறிப்புகள் இன்றி, ஒருவரின் பிறந்த நேரம், நாள், நட்சத்திரம் என எதுவும் இல்லாமல் உண்மையாகவே சிறந்த ஜோதிடர்களால் ஒருவரின் எதிர் காலத்தை கணிக்க முடியும்.

  • ஸ்பரிஸ வாரகம்
  • சாமுத்ரிகா லட்சணம்

சாமுத்ரிகா லட்சணம் :

தன்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வந்திருப்பவர் எந்த நோக்கத்திற்காக வந்திருக்கிறார் என்பதை வந்திருப்பவரின் முகபாவனைகள், நடை, உடை, தலை முடி, கை, கால், நகங்கள், விரல்கள், கண்களின் துடிப்பு என பலவற்றை கவனித்து அவர் இதற்காக தான் வந்திருக்கிறார் என்று துல்லியமாக கணிக்கும் ஆற்றல் கொண்ட ஒரு முறைதான் சாமுத்திரிகா லட்சணம்.

ஸ்பரிஸ வாரகம் :

ஜோதிடர்கள் ஒரு சில பிராமணர்கள் போன்றோர் ஒருவரை தொடுவதன் மூலம் அவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து அவர்களின் தேவைகளை அறிந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள். ஒருவரை தொடுவதன் மூலம் அவர்களின் உடலில் இருக்கும் நேர்மறை, எதிர்மறை எண்ணங்கள் அவை கூற வரும் விஷயங்கள் என அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் தான் ஸ்பரிஸ வாரகம் எனும் முறையை கற்று வைத்திருப்பார்கள்.

ஆன்லைனில் ஜோதிட ஆலோசனை :

இப்போது ஏற்பட்டுள்ள ஊரடங்கிலும் மக்கள் ஜோதிடர்களை தொடர்பு கொண்டு கல்வியில் முன்னேற எண்கணிதம், நாடி ஜோதிடம், பரிகார பூஜைகள், ராசிக்கற்கள் போன்றவற்றில் நாட்டம் கொண்டுள்ளனர். இதற்கு காரணம் அவர்களின் மூதாதையர்களின் நம்பிக்கை அல்லது இவர்களுக்கும் ஏற்பட்ட ஒருவித நம்பிக்கை இவர்களை நாட செய்து வருகின்றது. திருமணம், வாழ்க்கை முறை, அரசு உத்யோகம், கல்வியில் முன்னேற்றம் போன்ற பலவற்றுக்கும் ஜோதிடரிடம் ஆலோசனை பெற மக்கள் ஊரடங்கிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல ஜோதிடர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இவர்களோடு சிறப்பு வாய்ந்த நந்தினி கிருஷ்ணா எனும் ஜோதிடர் ஆன்லைனில் திங்கள் முதல் சனி வரை ஜோதிட ஆலோசனைகள் ஆன்லைன் வழியில் வழங்கி வருகிறார். இவரிடன் ஆலோசனை பெற விரும்புவோர் வீடியோ, ஆடியோ அல்லது உரை மூலம் தொடர்பு கொள்ளலாம். பெரும்பாலும் திருமண பொருத்தம், ஜாதகம் எழுதுதல், பரிகார பூஜைகள், எண் கணிதம், எந்திர தகடு போன்ற பலவற்றில் இவர் அனுபவம் பெற்றுள்ளதால் பலரும் நந்தினி கிருஷ்ணாவை அணுகி வருகின்றனர்.

ஜோதிடர் நந்தினி கிருஷ்ணாவிடம் ஆலோசனை பெற…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன