உங்க குழந்தைங்க அதிகமாக ஸ்மார்ட் போன் பயன்ப்படுத்திகிறார்களா?

is your child using smart phone for a long time

இப்பொழுதெல்லாம் எல்லா குழந்தைகளும் வெளியில் வந்து விளையாடுவதை விட்டுவிட்டு, மொபைல் போனை அதிகமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு கவலைக்குரிய விஷயம். அவர்கள் மனதளவில் அதிகமான மாற்றத்தை எதிர்கொள்கிறார்கள். சில வீடுகளில் குழந்தைகள் தொந்தரவு செய்யாமல் இருப்பதாகவே ஸ்மார்ட்போன் கொடுத்துவிடுகிறார்கள். இந்த ஸ்மார்ட்போன் பழக்கத்தினால் குழந்தைகளின் சுபாவம் மற்றும் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை எவ்வாறு சரி செய்வது என்று பார்ப்போம்.

குழந்தைகள் ஓடி விளையாடி மகிழ வேண்டிய இந்த காலகட்டத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் அவர்களின் நேரத்தை செலவிடுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால் அவர்கள் அவுட்டோர் கேம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையே மறந்து போய் இருக்கிறார்கள். மீண்டும் அதன் முக்கியத்துவத்தையும், இது போன்ற மொபைல் போன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளையும் பெற்றோராகிய நீங்கள் தான் எடுத்துரைக்க வேண்டும். சிறு குழந்தையாக இருக்கும் போதே குழந்தைகளிடத்தில் மொபைல் போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க – புளி சாப்பிட்டு வந்தால் வாழ்வில் சலிப்பு போகும்!

மொபைல் போன் பயன்படுத்துவதன் அவசியத்தை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் இந்த மொபைல் போன்களில் இருந்து வரும் கதிர்வீச்சுகளால் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கேடு விளையக்கூடும் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. சில நேரங்களில் குழந்தைகள் வீடியோ கேம்ஸ் விளையாடும் போது அவர்களை அறியாமலேயே அவர்கள் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.

ஒரே இடத்தில் இருந்து இது போன்ற விளையாட்டுகளை விளையாடுவதால் அவர்களுக்கு இயற்கையான முறையில் விளையாடும் விளையாட்டுகளின் மீது உள்ள ஆர்வம் குறைந்து விடுகிறது. இதனால் தான் உடளவிலும் அதிக பிரச்சினைகள் ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக பெற்றோர்கள் முதலில் அவர்கள் முன்னிலையில் ஸ்மார்ட்போன் உபயோகத்தை குறைக்க வேண்டும்

ஸ்மார்ட் போன்களில் பாஸ்வேர்ட் செட் செய்து வையுங்கள். அதை குழந்தைகளிடம் பகிராதீர்கள்.

மேலும் படிக்க – புடலங்காய் சாப்பிட்டு வந்தால் பலம் பெறலாம்!

குழந்தைகள் எந்த இணைய பக்கங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணியுங்கள்.

குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை மெதுவாக குறையுங்கள்.

அவர்களை அதிலிருந்து விடுபட விழிப்புணர்வு செய்வதுடன், மற்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதற்கு ஊக்கத்தை கொடுங்கள்.

நீங்கள் குழந்தைகளுடன் உரையாடும் மற்றும் விளையாடும் நேரத்தை அதிகமாக்குங்கள்.

மற்ற கலைகளான ஓவியம், நடனம் போன்ற விஷயங்களில் அவர்களது கவனத்தை திசை திருப்புங்கள்.

ஆர்ட் மற்றும் கிராப்ட் செய்வது எப்படி என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

பூங்கா, விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

நீங்கள் எவ்வளவு தூரம் குழந்தைகளிடம் உங்களது நேரத்தை செலவிடுகிறீர்களா, அந்த அளவுக்கு உங்களது குழந்தையின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு நீங்கள் வழி வகுக்கிறீர்கள் என்று அர்த்தம்.

மேலும் படிக்க – குழந்தைகளின் சளி, இருமலுக்கு குட் பாய் சொல்லுங்கள்..!

இரண்டு வயது குழந்தைகள் கூட அதிக நேரம், அதாவது ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வரை மொபைல் போன்களை பயன்படுத்துவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மொபைல் போன்களில் அதிக நேரங்களை செலவிடுவதால் குழந்தைகளுக்கு உணவு உட்கொள்ளும் பிரச்சனை, பருமன் பிரச்சனை, கவன சிக்கல், தூக்க பாதிப்பு பிரச்சினை போன்றவை உண்டாகலாம்.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் குழந்தைகளிடம் மொபைல் போன்களை கொடுக்கும் போது, சில கல்வி சார்ந்த வீடியோக்களை காண செய்யலாம். ஆனால் அதுவே வழக்கமாகி விடக்கூடாது.

நாம் நண்பர்களுடன் பேசுவதற்கும், அல்லது ஏதேனும் வேலையில் கவனம் செலுத்துவதற்கும் குழந்தைகள் தடையாக இருக்கிறார்கள் என்று எண்ணி இந்த காலகட்டத்தில் அவர்களை திசை திருப்புவதற்காக மொபைல் போன்களை கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. மொபைல் போன்களில் செலவிடப்படும் நேரத்தை விட திட்டமிடப்படாத விளையாட்டுகளில் உங்கள் குழந்தை நேரத்தை செலவிட்டால் அவர்களது வளர்ச்சியில் உங்களால் நல்ல ஒரு வித்தியாசத்தை காண முடியும்.

சரி குழந்தைகளை எவ்வாறு மாற்று செயல்களில் ஈடுபட வைப்பது என்று யோசியுங்கள். புத்தகம் படிக்கலாம் அல்லது மற்ற விளையாட்டுகளில் ஈடுபட அவர்களை ஊக்கப்படுத்தலாம். நீங்கள் வீட்டு வேலைகள் செய்து கொண்டிருக்கும்போது அவர்களையும் சில வேலைகள் செய்யுமாறு ஊக்குவிக்கலாம். நீங்கள் செய்யும் வேலைகளை பற்றி அவர்களிடம் விவாதிக்கலாம். இரண்டு அல்லது மூன்று வயது குழந்தைகள், பள்ளிக்கு செல்லாத குழந்தைகளாக இருப்பின் அவர்களுக்கு தமிழ் எழுத்துக்களைப் பற்றி சொல்லிக் கொடுக்கலாம். வரலாறு பற்றிய கதைகளை அவர்களுக்கு எடுத்துரைக்கலாம். முக்கியமாக இதில் ஒரு பெற்றோரின் பங்கு மிக அதிகமாக இருக்கிறது. நீங்கள் தான் உங்க குழந்தைகளின் உடல்நலத்திலும், மன நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அதனால் உங்களது நேரத்தை அதிகமாக உங்கள் குழந்தையுடன் செலவிடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன