ராமர் பாலம் கற்பனையா அல்லது வரலாற்று உண்மையா?

  • by
is ramar bridge real or just an imaginary story

இந்த கேள்வி எல்லோருக்குள்ளும் எழும். ராமர் பாலம் பல மர்மங்களை தன்னுள் உள்ளடக்கியது. இது ஆதாம் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. 

ஆனால் உண்மையில் நடந்தது என்ன!

சேது கால்வாய் திட்டம் 

ராமேஸ்வரம் ஒரு தீவு பகுதி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இலங்கைக்கும் இராமேஸ்வரத்துக்கும் கடல் வழி பயணம் மேற்கொள்ள சேது கால்வாய் திட்டம், 150 ஆண்டுகளுக்கு முன்பே டெய்லர் என்னும் பிரிட்டிஷ் தளபதி என்பவரால் கொண்டுவரப்பட்ட திட்டம். அதன்பின்னர் 1955 ஆம் ஆண்டு, அப்போது இருந்த இந்திய அரசு ஒரு குழுவை நியமித்து, இந்த சேது கால்வாய் திட்டம் ஏற்பட ஐந்து சாத்தியமான வழித்தடங்கள் பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதற்கு ஒரு முற்று கிடைக்காமல் நீண்ட காலமாக இந்த பேச்சுவார்த்தை வழக்கில் இருந்து வந்தது. அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு, அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இந்த முயற்சியை கையில் எடுத்தது. 2002 ஆம் ஆண்டு நாசா விண்வெளியில் இருந்து சில புகைப்படங்கள் வெளியிட்டது. அந்தப் புகைப்படங்களின் வாயிலாக ராமேஸ்வரத்துக்கும் இலங்கையில் உள்ள மன்னார் வளைகுடாவிற்கும் இடையில் பாலம் ஒன்று இன்னும் அழியாமல்  கடலுக்கு அடியில் புதைந்து உள்ளது என்ற தகவலை அறிவித்தது. இதுவே ராமர் கட்டிய பாலம் என்று கூறப்படுகிறது. கடலில் சுமார் 50 கிலோமீட்டரக்கு அடியில் புதைந்து கிடக்கும் இந்த பாலமானது சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டது என்று கூறுகின்றனர்.

மேலும் படிக்க – கிருஷ்ணன் பிறப்பதற்கான காரணம் என்ன..!

ராமர் கட்டிய பாலம்

ராமர் கட்டிய பாலம் கடலுக்கடியில் இருக்கிறது என்ற உண்மை அறிந்தவுடன், இந்த சேது கால்வாய் திட்டத்தை கைவிடுமாறு இந்து மத ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பல வருடங்கள் பழமையான ராமாயண வரலாற்றைப் பற்றிய எந்த ஒரு சுவடுகளும் கிடைக்கப் பெறாத நிலையில், இந்தப் பாலத்தை ராமர் வாழ்ந்ததற்கான சுவடாக கருதுகின்றனர்.

பாலம் உருவான கதை 

இந்தப் பாலம் ராமர் காலத்தில் எப்படி உருவாக்கப்பட்டிருக்கும் என்ற கதையை இங்கு பார்ப்போம். பத்து தலை கொண்ட ராவணன் சீதையை கடத்தி இலங்கையில் சிறைப்பிடித்தான் என்பது நாம் அனைவரும் அறிந்த கதை. சீதையை ராவணனிடம் இருந்து மீட்பதற்காக, ராமன் அவரது சகோதரர் லட்சுமணன் மற்றும் அனுமன், இவர்களுடன் வானர குல தலைவனாகிய சுக்ரீவன் ஆகியோர் பெரும் வானரப் படையுடன் இந்த பிரம்மாண்டமான கடலைத் தாண்டி இலங்கை சென்றடைய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதற்காக தென்கோடி முனையில் ஒரு பாலத்தை அமைத்து இலங்கையின் வடமேற்கு கடற்கரைக்குச் செல்வது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. 

சமுத்திர ராஜனின் பரிந்துரை 

அப்பொழுது சமுத்திர ராஜனை தங்களுக்கு உதவுமாறு ராமர் கேட்கிறார். அதற்கு சமுத்திரராஜன் “ராமர்” என்று எழுதப்பட்ட கல் மட்டுமே நீரில் மூழ்காது என்று ராமருக்கு வாக்குறுதி அளிக்கிறார். இந்தப் பணியை மேற்கொள்வதற்கு விஸ்வகர்மாவின் வாரிசான நளனை தேர்ந்தெடுக்குமாறு ராமருக்கு சமுத்திர ராஜன் பரிந்துரைக்கிறார். அதன்படியே ராமரும் அவரின் கோரிக்கையை ஏற்று நளனை வானரங்களின் உதவியுடன் இந்த கட்டுமான பணியை தொடங்க அனுமதிக்கிறார்.

இந்த நளன் ஏன் இந்த கட்டுமான பணியில் ஈடுபட வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்?

அதற்கும் வரலாற்று கதை உள்ளது. நிலன் மற்றும் நளன் என்ற இருவரும் ஒரு முனிவரிடம் பெற்ற சாபத்தின் பட, அவர்கள் எந்த கல்லை தொட்டாலும் அதை நீரின் மேல் வைத்தால் மூழ்காது என்று ராமாயண கதையில் கூறப்பட்டிருக்கிறது. எனவேதான் நளனை சமுத்திரராஜன் பரிந்துரைக்கிறார்.

மேலும் படிக்க – திருமணத்தடையை நீக்கும் காலபைரவர் வழிபாடு..!

அதன் பிறகு கடலுக்கு அடியில் தொடர்ச்சியாக இருக்கும் மணல்மேடுகள் பகுதியில் மா மரம். அசோகமரம். ஆச்சாமரம். திலகா, கர்னிகா, மூங்கில் போன்ற சில மரங்களை பயன்படுத்தி மரப்பலகையை கொண்டு அஸ்திவாரம் போடப்படுகிறது. அதன் பிறகு அதில் கற்களை நிரப்பி அதற்கு மேல் சுண்ணாம்பு கற்களை கொண்டு சமன்படுத்தி உள்ளார்கள். இந்த குறிப்புகள் அனைத்தும் நமக்கு வால்மீகி எழுதிய ராமாயணத்தின் மூலம் கிடைக்கிறது. வெறும் ஐந்தே நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த பாலத்தின் தூரம் பண்டைய அளவுகோலின்படி நூறு யோஜனைகள் ஆகும். இவ்வாறு கடல் வழியாக போருக்கு புறப்பட்ட ராமர், இலங்கையை அடைந்து போரில் வென்று புஷ்பக விமானத்தில் சீதையுடன் திரும்பி வரும் போது, சீதைக்கு இந்த பாலத்தை காண்பித்து, இதை நளன் சேது பாலம் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

சுனாமி ஏற்பட்ட பொழுது ராமேஸ்வரம் பகுதியில் இந்த சுண்ணாம்புக் கற்கள் பரவலாக காணப்பட்டிருக்கின்றன. தற்போது கடல் மட்டம் உயர்ந்த நிலையில் காணப்படுவதால் இந்த ராமர் பாலம் கடலுக்கு அடியில் மூழ்கி கிடக்கிறது. ஆராய்ச்சியின் முடிவில் இது பவளப்பாறை வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தப் பாலம் மனிதர்களால்  கட்டப்பட்டதற்கான நிறைய வரலாற்று சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

எது எப்படியாக இருந்தாலும் இது ஒரு அதிசயப் பாலம் ஆகும். நம்முள் பல கேள்விகளையும் ஆச்சரியங்களையும் ஏற்படுத்தும் இந்த பாலத்தின் கதை இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன