உளவியல் சிகிச்சை அனைத்து வயதினருக்கும் தேவையா?

 • by

மனித சிந்தனைகளின் தொடர்புடையது தான் உளவியல், உள்ளம் + இயல் = உளவியல். மனிதன் தான் நினைக்கும் அனைத்தையும் சில கற்பனைகளை உண்மை என நம்பிக் கொண்டிருப்பான். சில நேரங்களில் உங்களுக்கு பிடிக்காத ஒருவர் செய்யும் அனைத்தும் உங்களுக்கு எதிராக உள்ளது போல் உள்ளது போல் நீங்கள் நினைக்க கூடும். உங்களுக்கு வாழ்வில் ஏற்படும் தோல்விகளுக்கு அவர்கள் தான் காரணம் என உங்கள் உள் மனம் சொல்லிக் கொண்டே இருக்கும்.உளவியல் பிரச்சனை அனைத்து தரப்பு மக்களுக்கும், வயதினருக்கும் ஏற்படுமாதலால் அனைவரும் உளவியல் சிகிச்சை பெறுவது அவசியம்.

மனநல நிபுணர்கள் :

மனநல நிபுணர்கள் என்பவர்கள் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த ஒரு துறையை கொண்ட நிபுணர்கள் ஆவார்கள். இவர்களைப்பற்றி பின்வருவனவற்றில் காண்போம்…

மனநல மருத்துவர் :

மனநல மருத்துவர் என்பவர்கள் சைக்கியாட்ரிஸ்ட் என்றும் அழைக்கப்படுவர். இவர் மனிதர்களில் உடல் ரீதியான மாற்றங்களால் மனதில் தாக்கம் ஏற்பட்டு, அதனால் அவர்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டால் மருத்துவ முறையைக் கொண்டு உடலிலும் மனதிலும் மாற்றத்துக்கு தீர்வை தேடுபவர்.

 • சிறிய விஷயத்திற்காக கோபப்படும் மனிதர்கள் பிறரின் அன்புக்காக ஏங்க கூடிய மனிதர்களாகவே இருப்பார்கள்.
 • ஒருவர் உண்மையில் அழுகையை அடக்குபவராக இருந்தால் அவர் மனதால் பலவீனமானவர்களாக இருக்கிறார் என்று பொருள்.
 • வேகமாகவும், அதே சமையம் குறைவாக பேசுபவர்கள் தங்களுக்குள் அதிக ரகசியங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

மனநல ஆலோசகர் :

இத்துறையை சார்ந்தவரின் நோக்கம் ஒருவரின் உள் சக்தியைக் கொண்டே அவரது பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுவது. புதிய வாய்ப்புகளை உருவாக்கும் உங்கள் உறவுகளை மேம்படுத்தல், மகிழ்ச்சியாக வாழ ஊக்கப்படுத்துதல்.

 • நம்பிக்கையோடு கூடிய சிறு புன்னகை, நீங்கள் கூறுவதை கேட்க விரும்பாதவரையும் செவிமடுத்து கேட்கவைக்கும்.
 • மற்றவரின் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசும் திறனை நீங்கள் முதலில் வளர்த்துக்கொள்ளுங்கள். அச்செயல் உங்களை நேர்மையானவராகக் காட்டும்.
 • நீங்கள் அழகானவர் என்பதை நீங்கள் முதலில் நம்புங்கள். இதை அடிக்கடி உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள்.

சைக்கோ தெரபிஸ்ட் :

சைக்கோ தெரபிஸ்ட் என்பவர் ஒருவரின் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்பவர். மனித வாழ்க்கையைத் திறம்பட மாற்ற மனித மனதின் செயல்பாடு எவ்வாறு தடையாக உள்ளது என்பதை ஆராய்ந்து, நமது கவனத்துக்குக் கொண்டுவருவது. இதன் மூலம் நிகழ்காலத்தை மகிழ்வோடும், எதிர்காலத்தைப் பயனுள்ளதாகவும் மாற்ற நாம் கற்றுக்கொள்ளலாம்.

 • ஒருவர் மீது சில நிமிடங்களில் நாம் காதலில் விழுந்து விடுவதாக ஆய்வுகள் உணர்த்துகிறது.
 • நீங்கள் பேசுவதை பிறர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசுங்கள்.
 • சுவிங்கம் மன அழுத்தத்தை போக்கவல்லது என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

உங்களை அறிந்துகொள்ளுங்கள் :

மன சிக்கலில் பெரும்பாலானோர் மாட்டிக் கொள்வதற்கு முதல் காரணம் அவர்கள் தங்களை தாங்களே அறிந்து கொள்ளாமல் இருத்தல். ஒருவர் தங்களை முழுமையாக அறிந்து கொண்டுவிட்டால் அவர்களுக்கு வாழ்வில் பிரச்சினைகள் ஏற்படுவது கிடையாது. இதை அறிந்து கொள்ள பின்வரும் விஷயங்களை மனதில் நிறுத்துங்கள்.

 • உங்களுக்குள் இருக்கும் நல்ல எண்ணங்களை மேம்படுத்துங்கள்.
 • உங்கள் உள்மனம் சொல்வதை கேளுங்கள்.
 • எதற்காகவும், யாருக்காகவும் உங்களை விட்டுக்கொடுக்காதீர்கள்.
 • எப்போதும் உங்களை உயர்வாக வைத்துக்கொள்ளுங்கள்.
 • உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ளுங்கள், எப்போதும் குழப்பத்தை கொண்டிருக்காதீர்கள்.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் இப்பொழுது அனைவரும் வீட்டில் இருப்பதால் பெரும்பாலானோருக்கு மனம் சார்ந்த நிம்மதி கிடைப்பது மிகவும் அரிது. ஆகையால் உளவியலாளர் மற்றும் ஆலோசகர் விஜய ராம்குமார் அவர்கள் வாழ்க்கை பிரச்சினைகளுக்கான ஆலோசனைகளை ஆன்லைன் மூலம் வீடியோ, ஆடியோ மற்றும் உரை மூலம் வழங்கி வருகிறார். அவரை அணுகி உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் விஜய ராம்குமார் அவர்கள் உளவியல் ஆலோசனை தருவதில் பல்லாண்டுகளாக அனுபவம் பெற்றுள்ளதால் அவர் அனைத்து துறைகள் சார்ந்த நபர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கி தீர்வுகளை வழங்குகிறார்.

விஜய ராம்குமார் அவர்களிடம் ஆலோசனை பெற…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன