வாழைப்பழமும், சக்கரை நோயும்..!

Is it safe for sugar patients to eat banana

சர்க்கரை நோய் என்பது குடும்பத்தில் இருக்கும் யாராவது ஒருவருக்கு நிச்சயம் இருக்கிறது. இதற்கான காரணம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுமுறைகள். இதைத் தவிர்த்து தங்கள் உணவை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பவர்கள் மிக எளிதில் சர்க்கரை நோய்களுக்கு உள்ளாகிறார்கள். பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளில் அதிகமாக மாட்டிக் கொள்கிறார்கள். ஒருமுறை சர்க்கரை பிரச்சினை வந்துவிட்டாலே நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு உணவையும் மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

உணவுகளில் சர்க்கரை இல்லாத பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலமாகவே நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடிகிறது. இதில் பழங்கள் மற்றும் உணவுகளை சர்க்கரை அதிகமாக உள்ளவற்றை நம் தொட கூட கூடாது ஆனால் வாழைப்பழத்தை நாம் சக்கரை வியாதி இருக்கும்போது எடுத்துக்கொள்ளலாமா என்று கேள்வி பலருக்கும் வந்துவிடுகிறது. வாழைப்பழத்தில் போதுமான அளவு சர்க்கரை இருக்கிறது ஆனால் இதை உட்கொள்வதன் மூலம் நமக்கு சர்க்கரை வியாதியின் தூண்டுதல் அதிகமாக இருக்கிறதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் மூலமாக இங்கே தெளிவான பதிலை பெறுவோம்.

மேலும் படிக்க – இரும்பு சத்துனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

வாழைப்பழத்தில் அதிக அளவிலான புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கி உள்ளது இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மூளை செயல்பாட்டை பராமரிப்பது மட்டுமல்லாமல் நமக்கு செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சினை போன்ற அனைத்திற்கும் தீர்வாக வாழைப்பழம் உள்ளது. சர்க்கரை வியாதி இருப்பவர்கள் இதை குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.

இதில் புரதம், நார்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் இரும்புச்சத்து, துத்தநாகம், செலினியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது. எனவே இதை நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள முடியும். இதனால் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதை தவிர்த்து இரண்டாம் நிலை நீரிழிவு நோயை வரவிடாமல் இது தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் உங்களது இரைப்பை குடல் நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வாழைப்பழம் உதவுகிறது. மற்றும் நோய்கள் உண்டாகும் போது நமது உடல் எடையும் அதிகமாகிறது, இதுபோன்ற சமயங்களில் நீங்கள் வாழைப்பழத்தை உட்கொள்வதினால் உங்கள் உடல் எடையை சமநிலையில் வைத்து சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சிக்கல்களில் இருந்து விடுதலை செய்கிறது. இறுதியாக இது உங்கள் இருதயத்திற்கும் ஆரோக்கியத்தை சேர்க்கிறது.

மேலும் படிக்க – மலச்சிக்கல் பிரச்சனையை இந்த காய்கறிகளை கொண்டு அழிக்கலாம்.!

எனவே நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல்நிலையை கருத்தில்கொண்டு வாழைப் பழங்களை சிறிதளவு உட்கொள்வது நல்லது ஆனால் சுவையாக இருக்கிறது என்று இதை அதிகமாக உட்கொண்டால் உங்கள் உடம்பில் சர்க்கரை அளவு மீண்டும் உயர வாய்ப்பிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன