கோடைக்காலங்களில் லெக்கிங்ஸ் மற்றும் ஜீன்ஸ்களை அணிவது சரியா..!

  • by
is it right to wear jeans and leggings during summer season

கோடை காலம் வந்தாலே அசௌகரியமும் நம்முடன் சேர்ந்து பயணிக்கும், அதிலும் தமிழகத்தில் இருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையை தீர்மானிப்பது பருவநிலை மாற்றம்தான். இந்த மாற்றம் கோடை காலத்தில் துன்புறுத்தலகவே தமிழக மக்களுக்கு அமைகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கோடை காலம் சற்று தலை தூக்கி இருக்கும். இதனால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் சூழலில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை வெளியே கழிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். அச்சமயங்களில் நம்மை பாதுகாப்பாகவும், குளுமையாகவும் வைப்பதற்கான ஆடைகளை நாம் தேர்ந்தெடுத்து அணியவேண்டும். அதில் ஆண்கள் அணிவது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் பெண்கள் அணிவது லெகியன்ஸ் இது எந்த அளவிற்கு பாதுகாப்பை அளிக்கிறது என்பதை காணலாம்.

பெண்கள் அணியும் லெக்கின்ஸ்

கோடைக் காலங்களில் பெண்கள் அதிக அளவில் விரும்பி அணியப்படுவது லெக்கின்ஸ். அக்கால பாரம்பரிய முறைப்படி நாம் கோடை காலங்களில் பாவாடைகளை அணிந்து வந்தோம். ஆனால் இக்காலத்தில் இதை அலுவலகம் மற்றும் கல்லூரிகளுக்கு அணிந்து சென்றால் அவர்களை வேடிக்கையாக பார்க்கிறார்கள். எனவே இதற்கு பதிலாக காற்றோட்டமாகவும் மற்றும் சவுகரியமாக உணர்வதற்காக பெண்கள் அணியப்படுவது இந்த லெக்கின்ஸ். இதை நமக்கு ஏற்றபடி மற்றும் கோடை காலத்திற்கு உகந்த படி எப்படி வாங்க வேண்டும் மற்றும் எப்படி அணிய வேண்டும் என்பதை காணலாம்.

மேலும் படிக்க – சித்த அமைப்பின் மருத்துவ முறைகள் !

பருத்தி ஆடைகள்

நீங்கள் வாங்கப்படும் லெக்கின்ஸ் 100% காற்றோட்டமாக உள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். இப்போது விற்கப்படும் அனைத்து கடைகளிலும் இந்த வகை உள்ளது. கோடைக்காலங்களில் நீங்கள் கருப்பாக உள்ள லெக்கின்ஸை பயன்படுத்தலாம். அதை இடுப்புக்கு மேல்வரை அணிந்து காலில் அடிப்பகுதியை தூக்கலாக அணிந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பின்பு அதற்கு ஏற்றவாறு கருப்பான காலணிகளை அணிந்து கொள்ளலாம், பின்பு உங்களுக்கு பிடித்தமான எந்த வண்ணத்தில் வேண்டுமானாலும் மேலே அணியப்படும் ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.

ஆண்களுக்கான ஜீன்ஸ்

கோடைகாலம் மட்டுமல்லாமல் எல்லா காலத்திலும் ஆண்கள் அதிகமாக விரும்பி அணியப்படும் ஆடைதான் ஜீன்ஸ் பேண்ட். ஆனால் மற்ற சமயங்களில் அணியப்படும் ஜீன்ஸ் பான்ட்களை நீங்கள் கோடைகாலத்தில் அணிந்தால் உங்கள் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். இதை தவிர்த்து தங்கள் உஷ்ணத்தைக் குறைக்கும் வகையில் உருவாக்கப்படும் ஜீன்ஸ் பேண்ட்களை வாங்கி பயன்படுத்தலாம். அதிலும் பல ஆண்டுகளாகவே ஆண்கள் பருத்தியினால் செய்யப்பட்ட ஜீன்ஸ் பெண்களும் அதிகளவில் கோடைக்காலங்களில் விரும்பி அணிகிறார்கள்.

மேலும் படிக்க – லாக்டவுனில் நாடு முழுவதும் இயங்ககூடியது இயங்காதது!

ஜீன்ஸ் பேண்டின் வகைகள்

ஆண்களுக்காகவே ஜீன்ஸ் பேண்டில் ஏராளமான வகைகள் உள்ளது. அதில் பென்சில் ஃபிட், லோ ஹிப், ஹய் ஹில் போன்றவைகள் ஆண்கள் விரும்பி அணிகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஆடைகளை பெண்களும் அணியலாம்.

கோடை காலத்தில் உண்டாகும் வெப்பநிலை தவிர்ப்பதற்காகவும் உங்கள் உடலில் ஏற்படும் அசௌகரியத்தை குறைப்பதற்காகவும் இது போன்ற ஆடைகள் எல்லா கடைகளிலும் பிரத்தியேகமாக விற்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த ஆடை விற்பனைக்கு இருக்கும். எனவே இது போன்ற உடைகளை அணிந்து உங்களை மேம்படுத்தி கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன