தொலைக்காட்சி முடக்கத்தில் இணையதள சேவை..!

  • by
internet usage overtakes television

தமிழகம் முழுவதும் எல்லாத் துறைகளும் முடங்கி உள்ளது. இதன் மூலமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சினிமா மற்றும் நாடகத்துறையில் தங்கள் வேலைகளை முழுமையாக நிறுத்தி உள்ளது. இதனால் புதிதாக எந்த நிகழ்ச்சிகளையும் அவர்கள் உருவாக்க முடியவில்லை, இதன் மூலமாக புதிதாக எந்த ஒரு நிகழ்ச்சியும் இனிவரும் நாட்களில் ஒளிபரப்பு செய்ய மாட்டார்கள். ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட பழைய நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப அனைத்து தனியார் தொலைக்காட்சிகளும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக மக்களின் பொழுதுபோக்கு பாதி அளவு துண்டிக்கப்படும்.

தனியார் தொலைக்காட்சி

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் தங்கள் பொழுதுபோக்காக கருதுவது மெகா தொடர்கள் மற்றும் எதார்த்தமான நிகழ்ச்சிகள். இது போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சியின் மிகப்பெரிய பொழுதுபோக்காக கருதப்படும் இந்த நிகழ்ச்சிகளை சார்ந்துதான் ஏராளமான மக்கள் இருந்தார்கள். ஆனால் இந்த சூழ்நிலை இப்போது முழுமையாக மாறியுள்ளது. எனவே இவர்கள் பொழுதுபோக்கிற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை காணலாம்.

மேலும் படிக்க – ரகுல் ப்ரீத் சிங்கின் வாழ்க்கை..!

இணையத்தளம்

வேறு வழியில்லாமல் நீங்கள் செய்தி சேனல்களில் ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளில் காணும் சூழ்நிலை ஏற்படும். ஆனால் தொடர்ந்து நீங்கள் செய்திகளை பார்த்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறியுள்ளது. எனவே காலை 30 நிமிடம் மற்றும் இரவு 30 நிமிடம் மட்டுமே நீங்கள் செய்திகளைப் பார்க்கவேண்டும். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் இணையத்தளத்தில் ஏராளமான சேவைகள் இருக்கின்றன. அதே பொழுது போக்காகவும் மற்றும் நம்பிக்கை தன்மையுடைய செய்திகளும் காண்பிக்க படுகிறார்கள். எனவே அதைப் பின்தொடர்ந்து உங்கள் பொழுதை கழிக்கலாம்.

ஸ்டிரீமிங் சேனல்

இளைஞர்களுக்காகவே இணையதளத்தில் ஏராளமான ஸ்ட்ரீமிங் சேனல்கள் இருக்கிறது. அமேசான் பிரைம், நெட்ப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஜி5, எச் பி ஓ, டிஸ்ணி, உலு போன்ற செயலிகள் இருக்கிறது. இதன் மூலமாக நீங்கள் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை காண முடியும். உங்கள் மொழிக்கு ஏற்றவாறு இந்த ஸ்டிரீமிங் சேனலை பயன்படுத்தலாம். இதையெல்லா வயது நபர்களுக்கு ஏற்றார்போல் நிகழ்ச்சிகளை வகுத்து வைத்துள்ளார்கள். எனவே சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் இந்த சேனல்களை காணலாம்.

விலை குறைவு

நாம் பயன்படுத்தப்படும் அத்தியவசிய பொருட்களின் விலையை விட இணையத்தள சேவைகளை மிக குறைந்த விலையில் பெறலாம். ஒரு நாளைக்கு நாம் 3 ஜிபி வரை இணையதள சேவையை பெற முடியும். இதன் மூலமாக செல்போனில் உங்களுக்கு பிடித்த, அனைத்து பொழுதுபோக்கையும் காணலாம். அதேபோல் உங்களுக்கு பிடித்த தொடர்களை மற்றும் திரைப்படங்களை முழுமையாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க – நடிகை நதியாவின் வாழ்க்கை முறை..

சமூக வலைத்தளம்

அடுத்து பொழுதுபோக்கு தலமாக இருப்பது இந்த சமூக வலைத்தளங்கள்தான். இதில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் போன்றவைகளின் மூலமாக இளைஞர்கள் அவர்களின் நேரத்தை அதிகளவில் கழிக்கிறார்கள். ஆனால் இதற்கான நெறிகளை வகுத்து நாம் சமூக வலைத்தளங்களை காண வேண்டும். இல்லையெனில் இதுவே உங்களின் புத்தியை சீர்குலைத்துவிடும். எனவே எல்லாவற்றையும் சம அளவு தேவைக்கேற்ப பயன்படுத்தி உங்கள் நாட்களை பயனுள்ளதாக கழியுங்கள்.

இதேபோல் நாட்கள் தொடர்ந்தால் நம் வாழ்வில் ஏராளமான மாற்றங்கள் உண்டாகும். அது அனைத்தையும் எதிர்பார்த்து பதட்டமில்லாமல் வாழுங்கள். எது நடந்தாலும் மன வலிமையைக் கொண்டு எதிர் கொள்ளுங்கள், இது தான் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும். நாம் கடந்து வந்த காலங்களில் உலகில் வாழும் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர் கொண்டு வந்தார்கள். இப்போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சனை அதில் வெறும் 10 சதவீதமே அதை நினைத்து நேர்மறையாக வாழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன