மூவாயிரம் வருடம் பழமையான மம்மிகள்..!

  • by
interesting things about 3000 years old mummy

மம்மிகள் என்று குறிப்பிட்டு உடன் முதலில் நம் ஞாபகத்திற்கு வருவது எகிப்து தான். எகிப்தில் உள்ள பல பிரமிடுகளில் இன்றளவும் மம்மிகள் புதைக்கப்பட்டு இருப்பதாக ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த காலத்தில் வாழ்ந்த ராஜாக்கள் அல்லது அவரது சமூகத்தைச் சார்ந்தவர்கள் யாரேனும் இறந்தால், அவர்களை பதப்படுத்தி வைக்கும் முறை இருந்து வந்திருக்கிறது. அவ்வாறே அவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், மேலும் வேலை ஆட்கள் கூட சில சமயங்களில் கொல்லப்பட்டு அவர்களுடன் புதைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தற்போது எகிப்தில் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த மம்மிக்கள் புதைக்கப்பட்ட இந்த இடத்தில் 30 சவப்பெட்டிகள் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எகிப்தில் ஆராய்ச்சியாளர்கள் மம்மிகள் பற்றிய ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரே இடத்தில் புதைக்கப் பட்ட ஆண் பெண் மற்றும் குழந்தைகள் அடங்கிய 30 சவப் பெட்டிகளை அவர்கள் தோண்டி எடுத்துள்ளனர். இந்த சவப்பெட்டிகள் அழகிய வேலைப்பாடுகளுடன், பல வண்ணங்களுடன் மிகவும் கலைநயத்துடன் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த சவப்  பெட்டிகளுக்குள் மம்மிகள் இருப்பதை தொல்லியல் துறையினர் உறுதி செய்துள்ளனர். எகிப்தியன் வழக்கப்படி இறந்தவர்களின் உடல்களை முழுவதுமாக துணியால் சுற்றி அவர்களை சவப்பெட்டிக்குள் பதப்படுத்தி வைத்து புதைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. 

மேலும் படிக்க – இயற்கை எழில் கொஞ்சும் வால்பாறை…!

பதப்படுத்தும் முறை 

உடல்களை பதப்படுத்த அக்காலத்தில் கடுகு எண்ணெய், கோரைப் புற்களின் வேர்களில் இருந்து எடுக்கப்பட்ட சாறு, வேல மரப்பிசின் மற்றும் பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

 செயற்கை குரல்வளை

சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு எகிப்திய மம்மியின் குரல்வளையை செயற்கையாக உருவாக்கி அதற்கு குரல் கொடுக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மம்மி 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மதகுருவின் மம்மியாக இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே பல வேதங்கள் மற்றும் மந்திரங்களை ஓதி இறந்த இதுபோன்ற மதகுருவின் குரல்கள் மிகவும் வலிமையானதாக இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் அவர்களது குரல் வளையை  3டி தொழில்நுட்பத்தின் மூலம் எடுத்து செயற்கை குரல்வளையை உருவாக்குகின்றனர்.

இந்த முயற்சியில் சில சமயங்களில் மதகுருவின் குரலை கணிக்க முடியாமல் போகலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மத குரு தனது ஐம்பதாவது வயதில் இறந்திருக்க கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் அவரது நாக்கு பகுதி சிறிது இருப்பதால் ஒலி ஏற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதுகின்றனர். ஒலியை  உருவாக்குவதற்கு நாக்கு பகுதி என்பது மிகவும் அவசியமானது என்பதால் இந்த முயற்சி பெரும்பாலும் வெற்றி அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம் எனவும் கருதுகின்றனர்.

இந்த மத குரு கிமு 1099 ஆண்டு முதல் 1069 ஆம் ஆண்டு வரை வாழ்ந்து இருப்பார் என்றும் அப்போது 11 ராம்சேஸ் மன்னரின் நிலையற்ற ஆட்சியில் எகிப்து நாடு இருந்ததையும், இங்கிலாந்தின் லண்டன் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். முதன்முறையாக ஒரு மம்மிக்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செயற்கை குரல் வளை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்த மதகுருவின் தாடை  பகுதியில் இன்றளவும் மென்மையான தசைகளும் தொண்டைப் பகுதி மென்மையாகவும் இருந்து வருவதால் இந்த முயற்சியை மேற்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். வெறும் எலும்புக்கூடாக இருக்கும் பட்சத்தில் இந்த முயற்சி வெற்றி பெறாது.

30 சவப்பெட்டிகள் 

மேலும் 30 சபா பெட்டிகளில் இருந்த இந்த உடல்கள் யாருடையது என்று அறியப்படவில்லை. சில மம்மிகள் துணிகளால் மூடப்பட்டிருந்தன மற்றவை சவப்பெட்டிகள் அல்லது மரப் பெட்டிகளிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

மேலும் படிக்க – வாழ்வில் யோகம் பெற யோகா செய்யுங்க

நாட்டிலுள்ள பல நகரங்களில் இதுபோன்ற மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் வாழ்ந்த ராஜாக்களும் அவர்கள் வம்சத்தை சேர்ந்தவர்களும் இதுபோன்று பதப்படுத்தப்பட்ட முறையில் புதைக்கப் பட்டிருக்கின்றனர். எகிப்தில் பல ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் 16 வயது சிறுவன் ஒருவன் மம்மியாக கண்டெடுக்கப்பட்டுளான். சில இடங்களில் புதையல் கிடைக்கும் என்ற நோக்கத்தில் பல திருடர்கள் இந்த மம்மிகளை தேடி திருடி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இக்காலகட்டத்தில் மிகவும் விசித்திரமாக காணப்படும் இந்த முறை பழங்காலத்தில் முக்கிய ஒரு பண்பாடாக இருந்து வந்திருக்கிறது. இதில் உள்ள மர்மங்கள் எண்ணற்றவை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன