ஜூன் 21, 2020 சூரிய கிரகணம்: சுவாரஸ்யமான உண்மைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்…!

  • by

இந்த சூரிய கிரகணம் வழக்கமான ஒன்று அல்ல இது சூரிய சங்கிராந்தி அன்று தோன்றும் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் சூரியனை சுற்றி ஒரு நெருப்பு வளையம் இருப்பதை காணமுடியும். இருப்பினும் பெரும்பான்மையான பகுதிகளில் இது பாதியாக தான் தெரியும்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட கண்ணாடிகள், பைனாகுலர், டெலஸ்கோப் மற்றும் புதிய பாதுகாப்பு சாதனங்களை கொண்டு சூரிய கிரகணத்தை பார்வையிடலாம்.

மேலும் படிக்க -> கொரோனாவிற்கும் 2020 ஜூன் 21ல் ஏற்படவிருக்கும் சூரிய கிரகணத்திற்கும் என்ன தொடர்பு? உங்கள் ராசி தப்பிக்குமா…!

சூரிய கிரகணம்:

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் குறிப்பிட்ட கோணத்தில் நிலவு வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

வளைய சூரிய கிரகணம்:

ஜூன் 21ல் நிலவு சூரியனை மத்தியில் மறைப்பதால் சூரியன் வளையம் போல் தோன்றும் இது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.

எந்த இடங்களிலெல்லாம் பார்க்கலாம்:

இது மத்திய ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் இது நன்றாக தெரியும் இந்தியாவில் காலையில் 09:15 மணிக்கு தொடங்கி மாலை 03:04 மணிக்கு முடிகிறது.

முழு சூரிய கிரகணம் மதியம் 12 மணிக்கு தெரியும் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும் மற்ற பகுதிகளில் பாதி சூரிய கிரகணம் தெரியும்; சென்னையில் 34 சதவிகிதம் தெரியும் என்றும் அடுத்த சூரிய கிரகணம் 2020 டிசம்பர் 14 தோன்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க -> உங்களுக்கு சிகிச்சை தேவையா? இந்த 5 அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு சிகிச்சையாளரைப் பார்க்க வேண்டும்…!

ஜூன் 21, 2020 – சூரிய கிரகணம் பற்றிய சுவாரசியமான உண்மைகள்:

This image has an empty alt attribute; its file name is shutterstock_387956851-1-1024x683.jpg
பாதுகாப்பான கண்ணாடிகளை அணிந்து சூரிய கிரகணத்தை பார்க்கவும்.
  • ஜூன் 21, 2020 அன்று ஏற்பட உள்ள சூரிய கிரகணத்தை நீங்கள் தவறவிட்டால், அதை மீண்டும் காண டிசம்பர் 14-15 வரை காத்திருக்க வேண்டும்.
  • ஒரு வருடத்தில், நான்கு முதல் ஐந்து சூரிய கிரகணங்கள் ஏற்படலாம்.
  • மொத்த சூரிய கிரகணத்தையும் காண்பதென்பது ஒரு அரிய நிகழ்வு மேலும் இது ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒரு முறை மட்டுமே நிகழ்கிறது. சூரிய கிரகணத்தின்போது, சூரியனை குறைந்தது 90 சதவிகிதத்தை சந்திரன் மறைகின்றது.
  • மொத்த சூரிய கிரகணத்தின் மிக நீண்ட காலம் 7.5 நிமிடங்கள்.
  • மொத்த சூரிய கிரகணத்தை வடக்கு மற்றும் தென் துருவங்களிலிருந்து பார்க்க முடியாது.

சூரிய கிரகண முன்னெச்சரிக்கைகள்:

மேலும் படிக்க -> நீங்கள் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றி வேண்டுமா-அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது யோகா..!

  • சந்திர கிரகணத்தைப் போலல்லாமல், ஒருபோதும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது.
  • இந்த நிகழ்வைப் பாதுகாப்பாகக் காண்பதற்கு இதற்க்கான சன்கிளாஸ்கள், வீட்டில் இருக்கும் சாதாரண கண்ணாடிகள் போதுமானவை என்று பலர் நினைத்தாலும், அவை சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து உங்களை திறம்பட பாதுகாக்காது.
  • நீங்கள் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
  • ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தால் உங்களின் ஜோதிடரை தொடர்புகொண்டு கேட்டுவிட்டு வெளியில் செல்வது சிறந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன