கொரோனா வைரஸை பற்றிய சுவாரசியமான தகவல்கள்..!

  • by
interesting facts about corona virus

கொரோனா வைரஸின் மூலமாக உலகம் முழுக்க இருக்கும் மக்கள் அனைவரும் விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார்கள். உலக அளவில் முதல் முறையாக உலக மக்கள் அனைவரும் ஒரே நாளில் விடுமுறை பெறுவது இதுவே முதல் முறை. உலகில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றார்போல் காலம், நேரம் அனைத்தும் மாறுகிறது. இதனால் நமக்கு ஞாயிற்றுக்கிழமை என்பது அமெரிக்கர்களுக்கு சனிக்கிழமையாக இருக்கும். அதனால் நமக்கு அளிக்கப்படும் விடுமுறைகள் அவரவர் காலத்திற்கு ஏற்றார் போல் மாறும். ஆனால் இந்த கொரோனா பாதிப்பினால் உலகில் இருக்கும் எல்லா நாட்டு மக்களும் வீட்டில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இது போல் நாம் அறிந்திராத சுவாரஸ்யமான சில தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

இதுவரை பாதிப்பு

கொரோனா வைரஸ் இதுவரை 8 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர் குணமடைந்து உள்ளார்கள். மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 5 சதவீத மக்களே உயிரிழந்துள்ளார்கள், அதிலும் வயதானவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

மேலும் படிக்க – இதுவரை உலகில் பரவி உள்ள வைரஸ்களின் வரலாறுகள்..!

பாதிக்கப்பட்ட நாடு

சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் படிப்படியாக மற்ற நாடுகளுக்கு பரவியது. இதில் முதலில் இருப்பது அமெரிக்கா, இந்த நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர்களுக்கு மேல் பாதித்துள்ளார்கள், அதைத்தொடர்ந்து இத்தாலியில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு மேல் பதித்துள்ளார்கள். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் இருப்பது ஸ்பெயின், இங்கே கிட்டத்தட்ட 96 ஆயிரம் பேர் பாதித்துள்ளார்கள். உலக அளவில் இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பின் வரிசையில் 36 வது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட ஆயிரத்து 590 பேர்களுக்கு மேல் இந்தியாவில் பதித்துள்ளார்கள். இந்தியாவிற்கு அருகில் இருக்கும் பாகிஸ்தான் 34 ஆவது இடத்தில், கிட்டத்தட்ட 2000 பேருக்கு மேல் பதித்துள்ளார்கள்.

எப்படி உருவாகியது

சார்ஸ் வைரஸின் குடும்பத்தை சேர்ந்தது தான் இந்த கொரோனா வைரஸ். 2002 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வூகான் நகரில் உள்ள வனவிலங்கு அங்காடியில் உருவானதுதான் இந்த சார்ஸ் வைரஸ். இதன் குடும்பத்தை சேர்ந்ததுதான் இந்த கொரோனா வைரஸ். இதுவும் அதே வனவிலங்கு அங்காடியில் இருந்து தான் உருவானது என்று சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டு பரவி வந்த இந்த சார்ஸ் வைரஸினால் அந்த அங்காடியை தற்காலிகமாக முடக்கினார்கள். இதைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு சார்ஸ் வைரஸை முழுமையாக அழிந்து உள்ளதை எண்ணி இந்த அங்காடியை மீண்டும் திறந்தார்கள். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வைரஸ் பரிணாம வளர்ச்சி பெற்று மக்களை பாதித்துள்ளது.

மருந்துகளின் நிலை

கொரோனா வைரஸிற்கான மாற்று மருந்தை இன்றுவரை எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை. இதற்கான முயற்சிகளை மட்டும் மேற்கொண்டு வருகிறார்கள். சாதாரண வைரஸ் அழிவதற்கான மருந்துகளை மனிதர்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலமாக வைரஸின் தாக்கம் குறையுமே தவிர அது முழுமையாக அழியாது.

மேலும் படிக்க – பாட்டி வைத்தியத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

ஒரு சிலரின் கேள்விகள்

கொரோனா வைரஸ் கொசுக்களின் மூலமாக பரவாது, அதேபோல் நாம் குடிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆல்கஹால் அந்த வைரஸை முழுமையாக அழிக்காது. பொதுக் கழிவறைகளில் பயன்படுத்தப்படும் டிரையர்கள் மூலமாகவும் இந்த வைரஸ் அழியாது. சுடு தண்ணீர், பூண்டு போன்றவைகளின் மூலமாக இந்த வைரஸ் பரவுவதை தடுக்க முடியுமே தவிர இதைக் கொண்டு குணப்படுத்த முடியாது.

ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் உங்கள் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தவிர வைரஸ்களை அழிக்காது.

எந்நேரமும் முகமூடியை அணிந்து இருப்பதன் மூலமாக இந்த வைரஸ் தொற்று உங்களை பாதிக்காது. ஆனால் முகமூடி என்பது ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் பயன்படுத்துவது, எனவே முகமூடி இல்லாமலும் நாம் இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது உங்க முகமுடி அவசியமாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன