பழங்கால சீனாவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!

  • by
interesting facts about ancient china

உலக மக்கள்தொகையில் முதலில் இருப்பது சீனாதான், ஆனால் இந்த சீனாவின் வரலாறு கிட்டத்தட்ட நான்காயிரம் வருடத்திற்கு முன்பிலிருந்து தொடங்கப்பட்டது. இதனால் இது மிகவும் பழமை வாய்ந்த மொழியாக கருதபடுகிறது, நகர வாழ்க்கையும் முதன் முதலில் உலகுக்கு கொண்டுவந்தவர்கள் இவர்கள்தான் என்று வரலாறு சொல்கிறது. இதைத் தவிர்த்து இந்தியாவில் பல வகையான கலாச்சாரங்களும் சீனாவிடம் ஒத்துப்போகிறது. இவர்களின் தோற்றம் வேறு வகையில் இருந்தாலும் இந்தியர்களைப் போலவே மூலிகை மருந்துகள், யோகா மற்றும் கோவில்கள் கலைகள் என எல்லாமே ஓரளவுக்கு தொடர்பு உள்ளதாக தெரிகிறது. இப்படியிருக்கையில் தமிழர்கள், சீனர்களுக்கு முன்பாக வாழ்ந்ததற்கான போதுமான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் இதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் நிச்சயம் தமிழகம் மிகப்பழமையான நாடாக மாறும். இதுபோன்று தவறுகளைச் சீனர்கள் செய்யாமல் போதுமான ஆராய்ச்சிகள் மூலமாக மிகப் பழமை வாய்ந்த மொழி மற்றும் நகர வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் என்பதை நிரூபித்த சீனாவில் இன்னும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.

லாஸ்ட் எம்பரர்

சீனாவின் கடைசி எம்பரராக இருந்தவர் “புயீ” இவர் மூன்று வயதில் தன்னுடைய நாட்டிற்கு ராஜாவானார்.

சீனர்கள் உணவுகளை சாப்பிடும் டாப்ஸ் ஸ்டிக்கை கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தி வருகிறார்கள்.

உலகில் அச்சகம் உருவாக்கிய பிறகு அதிகளவில் அச்சடிக்கப்பட்ட பதிப்பகம் புத்தரின் சொற்பொழிவு மற்றும் வழிபடும் முறை.

மேலும் படிக்க – பழந்தமிழர்களின் முதுமக்கள் தாழி பற்றி உங்களுக்கு தெரியுமா???

போர்க்கலைகள்

2500 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் உள்ள சண்டூசி என்பவர் எப்படி போர் செய்வது என்பதற்கான புத்தகத்தை வெளியிட்டார். இலையுதிர் காலத்தில் வெளியிட்ட இந்த புத்தகத்தை இன்றும் ஏராளமானோர் படித்து பயன் பெறுகிறார்கள்.

சீனாவை இரண்டு மிகப்பெரிய நதி இணைக்கிறது, அதில் உலகிலேயே மூன்றாம் பெரிய நதியாக கருதப்படும் மஞ்சள் நதி மற்றும் யான்டிஜி என்ற உலகில் 6வது பெரிய நதியும் இங்கே இருக்கிறது.

டிராகன்

சீன பழங்கால படங்களில் நாம் டிராகன் போன்ற உருவங்களை அதிக அளவில் பார்த்திருப்போம். அவர்களின் அடையாளமாக இருப்பது இந்த டிராகன் தான். இது அவர்களுக்கு வலிமையையும், ஆற்றலும் மற்றும் அதிர்ஷ்டத்தையும் அளிக்கிறது என்று நம்புகிறார்கள். எனவே அக்காலத்தில் வாழ்ந்த ராஜாக்கள் இதை அடையாளமாக  வைத்துக் கொண்டார்கள்.

விவசாயிகள்

சீனாவில் படித்தவர்களே அதிகமாக மதித்து வந்தார்கள், ஆனால் ஒரு கட்டத்தில் நம் அனைவருக்கும் உணவு அளிப்பவர்கள் விவசாயிகள்தான். எனவே படித்தவர்களை விட உயர்ந்தவர்கள் விவசாயிகள் என்று அவர்களை மதித்து இன்றும் அவர்களுக்கான மரியாதை அளித்து வருகிறார்கள்.

தேனீர் மற்றும் அரிசி

போதிதர்மனின் மூலமாகதான் சீனாவிற்கு முதல் முதலில் தேநீர் கிடைத்தது என்று புரான கதைகளை சொல்லி வருகிறார்கள். இருந்தாலும் முதன் முதலில் தேனீரை உலகுக்கு அறிமுகம் செய்தது சீனாதான், அதேபோல்தான் நாம் இன்று அதிகளவில் பயன்படுத்தி வரும் அரிசியையும் சீனர்களே மற்ற நாடுகளுக்கு பகர்ந்தார்கள்.

மேலும் படிக்க – கொரனாவால் தள்ளிப் போகும் திருமணங்கள்

பட்டு வியாபாரம்

2700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகம் மற்றும் சீனாவில் பட்டு சம்பந்தமான வணிகத்தை கடல் மூலமாக செய்து வந்தார்கள். இதன் மூலமாக தமிழகம் மற்றும் சீனாவுக்கு இடையே ஏராளமான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைபெற்றது.

உலக நாடுகளை விட சீனாவில் தங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள். இது இவர்களைப் பொறுத்தவரை மிகப் புனிதமான மற்றும் பாரம்பரியம் மிக்க ஒரு நிகழ்ச்சி, எனவே இதற்காக அரசாங்கமும் ஏராளமான சலுகைகளை விதித்து இந்த கொண்டாட்டத்தை சிறப்பித்த உதவுவார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன