அர்ஜுனன் மற்றும் அனுமனுக்கு இடையே நடந்த போட்டி!!!

  • by
interesting competition between arjunan and hanuman

ஒருநாள் அர்ஜுனன் காட்டின் வழியாக சென்று கொண்டிருந்தான். சென்று கொண்டிருந்த வழியில் ஒரு குரங்கு ‘ராம நாமம்’ என்று ஜெபித்துக் கொண்டிருந்ததை பார்த்தான். அர்ஜுனனுக்கு நெடு நாளாகவே ஒரு சந்தேகம் மனதில் எழுந்துகொண்டே இருந்தது. அது ராமர் மிகச் சிறந்த வில்லாளி என்று அனைவரும் சொல்கிறார்களே, அப்படி அவர் உண்மையிலேயே மிகச் சிறந்த வில்லாளி ஆகயிருந்தால் ‘சேதுவுக்கும் இலங்கைக்கும் இடையில் அவரது வில்லால் பாலம் கட்டாமல் ஏன் வானரங்களை வைத்துப் பாலம் கட்டினார் என்ற ஒரு சந்தேகம் எழுந்து கொண்டே இருந்தது. 

அர்ஜுனனின் சந்தேகம் 

எனவே தன்னுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள எண்ணிய அர்ஜுனன், ராம நாமம் ஜெபித்து கொண்டிருந்த அந்த வானரத்திடம் சென்று வானரமே உன்னுடைய ராமபிரானுக்கு வலிமை இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். ராமரை மிகச்சிறந்த வில் வீரன் என்று அனைவரும் சொல்கிறார்களே அது உண்மையானால் அவர் ஏன் வில்லால் பாலம் கட்டாமல் வானரங்களின் உதவியைக் கொண்டு பாலத்தை அமைத்தார் என்ற கேள்வியை கேட்டார்.  

மேலும் படிக்க – அறிவியலாளர்களை ஆச்சரியப்படுத்திய தில்லை நடராஜர் கோவில் கண்டிப்பாக காணவேண்டிய ஒரு அதிசயமே!

அர்ஜுனனின் இந்த ஆணவப் பேச்சை கேட்ட அனுமன் தனது தியானத்தைத் கலைத்து தன் எதிரே நிற்பது அர்ஜுனன் என்பதை அறிந்து கொண்டார். எனவே அனுமன் இந்த அர்ஜுனனின் அகந்தையை அடக்க முடிவு செய்தார். 

வில்லைக் கொண்டு கட்டப்படும் வில் பாலம் என் ஒருவனின் பாரத்தையே தாங்காத போது எப்படி ஒட்டு மொத்த வானரங்களின் பாரத்தை தாங்க முடியும் என்று அனுமன் எதிர் கேள்வி எழுப்பினார். 

போட்டி 

அதற்கு அர்ஜுனன், ஏன் முடியாது என்னால் அப்படிப்பட்ட ஒரு பாலத்தை கட்ட முடியும். அதில் உன் ஒட்டுமொத்த வானரங்களை கூட நீ ஏற்றலாம் என்று அர்ஜுனன் பதிலுரைத்தார். மேலும் அர்ஜுனன் இந்த பந்தயத்தில் ஒருவேளை நான் தோற்றால் வேள்வித் தீயில் குதித்து என் உயிர் துறப்பேன் என்று சபதம் ஏற்றார். தன்னுடைய காண்டீபத்தின் மேல் மேல் உள்ள நம்பிக்கையால் இவ்வாறு அவர் கூறினார். அதற்கு பதிலளித்த அனுமன் ஒருவேளை நான் தோற்றால் என் ஆயுள் காலம் முழுவதும் உனக்கு அடிமையாக இருப்பேன் என்று உறுதி அளித்தார். அர்ஜுனனுக்கும் அனுமனுக்கும் போட்டி தொடங்கியது. அர்ஜுனன் தன் அம்பை வைத்து பாலத்தை கட்ட தொடங்கினான். 

அதன்பிறகு அனுமன் ஒரு ஓரத்தில் அமர்ந்து வழக்கம்போல் ராம நாமம் சொல்ல தொடங்கினார். ஒருவழியாக பாலத்தை கட்டி முடித்தான் அர்ஜுனன். அதன்பிறகு அனுமன் அந்த பாலத்தின் மீது முதல் அடியை எடுத்து வைத்த நொடியே அந்த பாலம் சுக்குநூறாக நொறுங்கியது. இதனால் அனுமன் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார். அர்ஜுனனோ அவமானத்தில் தலை குனிந்தார். 

இறைவனின் நாமம்

அப்போது அர்ஜுனன் போரில் எப்படியாவது ஜெயிக்கவேண்டும் மற்றும் என் சகோதரர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பாசுபதாஸ்திரத்தை தேடி வந்தேன். ஆனால் என்னுடைய ஆணவத்தால் அனுமனிடம் தோற்றுவிட்டேன். கிருஷ்ண பகவானிடம் நீதான் என்னை மன்னித்தருள வேண்டும் என்று அர்ஜுனன் வேண்ட தொடங்கினார். அதன் பிறகு தான் சபதம் ஏற்றபடி வேள்வித்தீயில் குதிக்க தயாரானான் அர்ஜுனன். அனுமன் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அர்ஜுனன் அதை கேட்டதாக தெரியவில்லை. அப்போது ஒரு அசரீரி கேட்டது. அந்த அசரீரி கேட்டது திசையில் இருவரும் திரும்பி பார்த்தனர். அந்தப் பக்கம் ஒரு அந்தணர் காணப்பட்டார். அந்த அந்தணர் இவர்களிடம் வந்து நடந்தவற்றை கேட்டறிந்தார். அதற்குப் பிறகு எந்த ஒரு பந்தயத்திற்கு ம் சாட்சி என்பது மிக முக்கியமானது. சாட்சியே இல்லாமல் நீங்கள் இருவரும் செய்தது என ஒருபோதும் பந்தயம் ஆகாது என்று கூறினார். அதன் பிறகு அந்த அந்தணர் நான் சாட்சியாக இருக்கிறேன் இப்போது அர்ஜுனா நீ பாலத்தை கட்டு அனுமன் அதை உடைக்கட்டும். பின்பு யார் பலசாலி என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்றார். அப்படியே அர்ஜுனன் பாலத்தை கட்ட தொடங்கினார். இந்த முறை அர்ஜுனன் பாலத்தை கட்டும்பொழுது கிருஷ்ணனை நினைத்து கொண்டே கட்டினார். கிருஷ்ணா கிருஷ்ணா என ஜபித்துக் கொண்டே பாலத்தை கட்டி முடித்தார். சென்ற முறை எளிதாக வென்று விட்டோம் அதனால் இந்த முறையும் எளிதாக வென்று விடலாம் என்ற கர்வத்தோடு ராம நாமம் சொல்லாமல் இந்த முறை அனுமன் அந்த பாலத்தின் மீது ஏறினார். அப்போது பாலம் அப்படியே இருந்ததை பார்த்து பரிதாபத்தோடு நின்ற அனுமனை அர்ஜுனன் பார்த்தாயா எங்கள் கண்ணனின் மகிமையை இப்போது சொல்லுங்கள் கண்ணன் தானே வலிமையானவர் என்று கேட்டார். 

அர்ஜுனனின் இந்த கேள்வி அனுமனுக்கு மேலும் குழப்பத்தை தான் தந்தது. அப்போது அங்கிருந்த அந்தணர் இவர்கள் அருகில் வந்து பரந்தாமன் ஆக உருமாறி காட்சி தந்து அவர்கள் இருவரையும் ஆசிர்வதித்தார். 

ராம நாமத்தை

பகவான் அவர்களிடம் நீங்கள் இருவருமே தோற்கவில்லை வென்றது கடவுள் பக்தி தான் என்றார். இறைவனை விடவும் இறைவனுடைய நாமம் அதிக சக்தி வாய்ந்தது என்றும் அர்ஜுனன் முதல்முறை பாலம் கட்டும்போது, இறைவனின் நாமத்தை உரைக்காமல் தன்னால் எதுவும் முடியும் என்ற அகந்தையில் பாலத்தை கட்டினான். ஆனால் அனுமன் ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருந்ததால் முதல் முறை வெற்றி பெற்றான். 

மேலும் படிக்க – தமிழர்களின் கல்வெட்டு களஞ்சியமாக விளங்கும் திருவெள்ளறை கோவிலின் சிறப்புகள் ….!

இரண்டாவது முறை அர்ஜுனன் பாலம் கட்டும்போது கிருஷ்ணரின் நாமத்தை ஜெபித்துக் கொண்டே கட்டினான். ஆனால் அனுமன் முதல் முறையே வென்று விட்டோம் என்ற அகந்தையோடு ராம நாமத்தை ஜெபிக்காமல் அந்த பாலத்தின் மீது ஏறவே அது உடையாமல் நின்றது. எனவே இரு முறையும் வென்றது கடவுளே. கர்வம் ஒருவரை அழித்து விடும் என்பதை நீங்கள் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இதுவரை வானரம் என்று எண்ணிக்கொண்டிருந்த அர்ஜுனன் அது அனுமன் என்பதை அறிந்து உடனே அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். 

இறைவன் உங்கள் இருவரின் பக்தியும் எல்லையற்றது. ஆனால் சில தருணங்களில் இறைவன் ஒருவன்தான் என்பதை நீங்கள் உணர மறந்து விட்டீர்கள்.  இதை உணர்த்துவதே இந்த நாடகம் அரங்கேறியது என்று கூறி ஆசி வழங்கி மறைந்தார் கிருஷ்ண பகவான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன