தமிழ்நாட்டில் தொழில் துறையில் சாதித்த பெண் மற்றும் அவர்களின் கதை.!

Instagram Inspirational Business women entrepreneurs form Tamilnadu

கடந்த சில ஆண்டுகளாகவே ஆண்களை விட பெண்களே பல துறைகளில் வெற்றி அடைந்துள்ளார்கள். இதற்கு முழு காரணம் பெண்கள் சுதந்திரம், பெண்களின் முன்னேற்றம், பெண்களை ஊக்குவிக்கும் பல பெண்கள் வாதிகளே காரணம். அதை தவிர்த்து இதற்குப் பின்னால் ஒவ்வொரு ஆண்கள் இருந்தாலும் விடா முயற்சியால் பல பெண்கள் இன்று பல துறைகளில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறார்கள். உதாரணத்திற்கு விளையாட்டு, தொழில், வேலைகள், விஞ்ஞானம், அறிவியல் என எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். அதில் சுயமுயற்சியால் முன்னேறி இன்று பல பேர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கும் பெண்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஸ்ரீவித்யா

ரவீந்திர சர்வீஸ்ன் இயக்குனராக வலம் வரும் ஸ்ரீவித்யா இன்று சுமார் 22 கோடிகளை தன் வேலைகள் மூலமாக வருடம் பெறுகிறார். இவர் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தி ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு சேவைகளை பல நிறுவனங்களுக்கு அளித்து வருகிறார்.

இவர் இந்திராகாந்தி தேசிய பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டப்படிப்பை முடித்துவிட்டு ரவீந்திரன் பத்மநாபன் என்பவரின் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்பு தானாகவே சில யோசனைகளை வைத்து புதிய நிறுவனத்தை தொடங்கினார். அதன் வெற்றியினாள் இன்று ஏராளமானோர் பயன்பெற்று வருகிறார்கள்.

மேலும் படிக்க – ஆண், பெண் நட்புறவில் இது அவசியமுங்க

மது சரண்

சென்னையை சேர்ந்த இவர் உமன் என்டர்பிரிமியர்ஷிப் குளோபல் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தில் கௌரவ பதவியான அம்பாசிடராக இவர் இருக்கிறார். பெண்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக இவர் ரிவர் என்ற சமூக சேவையும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் சென்னையில் பல இடங்களில் காஸ்மெடிக் கிளினிக் நடத்தி வருகிறார். இதன் மூலமாக இயற்கை வளர்ச்சியை அதிகரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மாமிஸ் காபி கடையை நடத்தி வருகிறார். இதன் மூலமாக தெருவோரங்களில் மிக அற்புதமான சுவையான காப்பிகளை நாம் வாங்கி அருந்த முடியும்.

மேலும் படிக்க – வேலை தேடும் ஆண்களுக்கு இது அவசியம்!

அர்ச்சனா ஸ்டாலின்

இவரைப் பற்றி பலரும் அறிந்துள்ளார்கள். ஏனென்றால், இவரின் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்ட சில சம்பவங்கள்தான் 36 வயதினிலே என்ற ஜோதிகாவின் திரைப்படம். இந்தப் படத்தில் வருவதைப் போல் அனைவரும் தங்களது மொட்டை மாடியில் காய்கறி தோட்டங்களை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தி அவர்களுக்கான இலவச விதைகளையும் அளித்துள்ளார். இதைத் தவிர்த்து ஒவ்வொரு மொட்டை மாடிக்கும் இலவசமாக சென்று பராமரிப்பு வேலைகளையும் செய்துள்ளார். இதனால் இயற்கையின் மேல் உள்ள காதலை பலபேர் புரிந்துள்ளார்கள். இதைத் தவிர்த்து பல பள்ளிகளுக்கு சென்று இதைப் பற்றிய விழிப்புணர்வுகளை பரப்பி வருகிறார்.

எனவே இது போல் பல பெண்கள் முன்னுதாரணமாக தங்கள் தொழில்களை வளர்த்து வருகிறார்கள். இதில் சமூக சேவைகள் மற்றும் சமூக அக்கறை கொண்ட தொழில்களைச் செய்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்கள். எனவே பெண்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான வழியை அமைத்துத் தருகிறோம் என்று கோஷமிட்டு கொண்டுவரும் அரசுக்கு, பெண்கள் எப்போதே அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார்கள் என்பதை உணர்த்தி உள்ளார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன