கடினமான வாழ்க்கையை கடந்து வந்த தமிழ் கதாநாயகர்கள்..!

Inspirations life stories of Tamil Hero

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தாங்கள் கடந்து வரும் பாதை மிக மோசமானதாக இருக்கும். இவைகளை கடந்தால் மட்டுமே நாம் எதிர்பார்த்த வாழ்க்கை நமக்கு கிடைக்கும். வெற்றியடைந்த எல்லோருக்கும் இது போன்ற கதைகள் இருக்கும். அதிலும் தொழிலில் வெற்றி அடைவது என்பது விடா முயற்சியின் மூலமாக கிடைத்து விடும். ஆனால் சினிமாவில் வெற்றியடைய வேண்டுமென்றால் விடாமுயற்சியுடன் சேர்ந்து புத்திசாலித்தனமும் சிறிது அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். அப்படி விட முயற்சியில் தொடர்ந்து கஷ்டங்கள்பட்டு இறுதியில் வெற்றி அடைந்த ஐந்து பிரபலங்களை இந்த பதிவில் காணலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யார் என்று அறியாதவர்கள் ஆசியாவில் யாரும் இருக்க முடியாது. இதை தவிர்த்து இவருக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த நிலைக்கு வருவதற்கு முன்பு இவர் முதன்முதலில் பெங்களூரில், பேருந்தில் பயணச்சீட்டு விற்பவராக வேலை செய்தார். அதைத்தொடர்ந்து விடாமுயற்சியினால் திரையுலகிற்கு வந்து கே பாலச்சந்தர் மூலமாக அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தனது 70வது வயது வரை வெற்றிகரமான ஒரு நடிகராக வலம் வருகிறார்.

மேலும் படிக்க – அப்படி என்னதன் சூரரைப் போற்றில் இருக்குது..!

சியான் விக்ரம்

சீயான் விக்ரம் யார் என்று இன்று பலருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் இவர் தனது பன்னிரண்டாவது வயதில் சினிமாவில் நுழைந்தார். ஆனால் தொடர் தோல்விகளால் இவருக்கான அங்கீகாரம் ஏதும் கிடைக்கவில்லை. இவர் முதன் முதலில் “என் காதல் கண்மணி” என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். ஆனால் அவர் நடித்த எந்த படமும் வெற்றி அடையவில்லை, நடிகர் அஜித்துடன் சேர்ந்து “உல்லாசம்” என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததே தவிர இவருக்கான அடுத்தடுத்து படங்களுக்கான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. ஆனால் சரியான நேரத்தில் இயக்குனர் பாலாவின் “சேது” திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது, அதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து தனது நடிப்புக்கான தேசிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.

அமராவதி தல அஜித் குமார்

மிக மோசமான கடந்த காலத்தை கொண்டவர்தான் அஜித் குமார். இவர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டுடார். மெக்கானிக்காக வேலை செய்து அவ்வப்போது பந்தயங்களிலும் கலந்து கொள்வார். இதனால் இவருக்கு ஏற்பட்ட விபத்தினால் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் படுக்கையில் இருந்தார். அஜித் குமார் தனது இருபதாவது வயதில் அதிர்ஷ்டவசமாக ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த திரைப்படத்தின் இயக்குனர் பாதியில் இறந்ததினால் இவருக்கு அதற்கடுத்து எந்த பட வாய்ப்பும் அமையவில்லை. ஆனால் “ஆசை” படத்தில் அதிர்ஷ்டவசமாக இவருக்கு கிடைத்த கதாபாத்திரத்தை சரியாக பயன்படுத்தி படித்ததினால் இன்று இவர் எட்டாத உயரத்தில் இருக்கிறார்.

மேலும் படிக்க – டிவிட்டர் இணைய தளத்தில் வார்த்தை போர் சின்மயி, அஜீத் ரசிகர்களால் இணைய உலகம் பரபரப்பு..!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

கனவுகள் என்பது கற்பனையே என்ற எண்ணத்தில் இருந்த விஜய் சேதுபதி குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டுக்கு வேலை சென்றுள்ளார். ஆனால் சினிமாவை இவரை தன் வசப் படுத்தும் நோக்கில் மீண்டும் சென்னைக்கு வந்து சினிமா பட்டறையில் நடிப்பிற்காக பயிற்சி பெற்றார். இதன் மூலமாக சிறு சிறு கதாபாத்திரங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து வந்த இவருக்கு “தென்மேற்கு பருவக்காற்று” படத்தின் மூலமாக கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்று ஏராளமான படங்களை வெற்றிப்படமாக மாற்றியுள்ளார். தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தையும் வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன்

போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சிவகார்த்திகேயன் தனது எம்பிஏ படிப்பிற்காக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடித்தார். இதன் மூலமாக பிரபலமடைந்த சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி தொலைக்காட்சித் தொகுப்பாளராக மாறி “மெரினா” என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் அதைத் தொடர்ந்து “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற படத்தின் மூலமாக சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என எல்லோர் மனதையும் கவர்ந்தார். “எதிர்நீச்சல்” என்ற படத்தின் மூலமாக தனக்கென ஒரு அங்கீகாரத்தை பதித்தார். இதைத் தொடர்ந்து இன்று “ஹீரோ” வரை ஏராளமான படங்களில் நடித்து வெற்றிப் படமாக மாற்றி வருகிறார்.

மேலும் படிக்க – சமந்தாவின் பஸ்ட் லுக் பீல் இப்படி இருக்குங்களாம் ..!

இதுபோல் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் கடந்து வந்த பாதை சற்று கடினமானவை. அதேபோல் இன்றும் ஏராளமான நடிகர்கள் இதுபோன்ற விடா முயற்சியில் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஒருநாள் அவர்களின் கதைகளும் இதுபோன்ற பதிவுகளில் வரலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன