சாதரண கண்டெக்டர் சிவாஜிராவ், சூப்பர் ஸ்டாரன சரித்திர வரலாறு

initial stages of superstar rajinkanth life

உலகம் முழுக்க ரசிகர்களை கொண்ட ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பம் எப்படி இருந்தது அதில் இவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் என்ன என்பதை தெளிவாக பார்ப்போம்.

டிசம்பர் 12 1950 ஆம் ஆண்டு மராத்திய குடும்பத்தைச் சேர்ந்த ராமோஜிராவ் என்பவருக்கு கடைசி மகனாக பிறந்தவர் இவர் இவருக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் ஒரு அக்கா இருக்கிறார்கள் இவரின் தந்தை ஒரு சாதாரண காவல் அதிகாரியாக பணிபுரிந்து இருந்தார் 1956 ஆம் வருடம் ரஜினிகாந்தின் தந்தை தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்றார் சரியாக ரஜினிக்கு ஒன்பது வயது இருக்கும்போது இவரின் தாய் இறந்துவிட்டார் பின் பல கஷ்டமான வாழ்க்கை சூழலை கடந்தபின் இவருக்கு பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராக வேலை கிடைத்தது.

மேலும் படிக்க – உலக நாயகனின் வாழ்வியல் குறிப்புகள் அறிவோம் !

சிறு வயது முதல் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது பள்ளியில் அரங்கேற்றிய நாடகத்தில் ஏதாவது ஒரு வேடத்தில் நடித்து விடுவார் பெரும்பாலாக மகாபாரதத்தில் இருந்து  சிறிய வேடங்களில் நடித்த இவர் பிரபல கவிதை எழுத்தாளர் தி அர் பென்டிர் அவர்கள் இவரை பார்த்து பாராட்டிய பிறகு ரஜினிக்கு துரியோதனன் வேடம் கிடைத்தது.

இதுபோல் பள்ளி பருவத்தில் இவருக்கு நாடகத்தில் நடிப்பதில் அதிகமான கவனம் இருந்தது இதைத் தவிர்த்து இவருக்கு விளையாட்டிலும் அதிகமாக ஆர்வம் இருந்துள்ளது.

சிறுவயதில் இவருக்கு நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் அவ்வப்போது தனக்குத்தானே நடிப்பு பழகிக் கொள்வார் இதுபோல் இளம் வயதில் இவர் தனக்கு கிடைக்கும் சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை முழுமையாக உள்வாங்கி நடித்துக்கொண்டிருந்தார் தூபி முனியப்பா அவர்கள் ரஜினிக்கு அவரின் நாடகத்தில் நடிப்பதற்கான ஒரு வாய்ப்பு அளித்திருந்தார் அந்த நாடகத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக நடிப்பைப் பற்றி கற்றுக் கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்தது இதற்கிடையில் ஒரு விளம்பர காகிதத்தில் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டியூட் நடிப்பதற்கான பயிற்சி தரப்படும் என்பதை கண்டு அதில் சேருவதற்காக வீட்டில் அனுமதி கேட்டுள்ளார் ஆனால் அவர்களிடம் போதுமான பண வசதி இல்லாததால் தனது குடும்பத்தினர் அதை மறுத்து விட்டார்கள் பின்பு தனது சகத் தொழிலாளியும் மற்றும் இவரின் நெருங்கிய நண்பருமான ராஜ்பகதூர் இவரை ஊக்குவித்து தன்னால் முடிந்த பண உதவியைய ரஜினிக்கு செய்தார் இதனால் அவன் நடிப்பதற்கான சரியான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க – கடினமான வாழ்க்கையை கடந்து வந்த தமிழ் கதாநாயகர்கள்..!

இந்த நிறுவனத்தில் அவர் பயிற்சி பெற்று அங்கேயே தங்கி இருந்ததை இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் பார்த்துள்ளார் பின்பு ரஜினியிடம் சென்று எவ்வளவு சீக்கிரம் உன்னால் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கற்றுக்கொள் என்று அவருக்கு அறிவுரை கூறியுள்ளார் இதை சரியாக பயன்படுத்திய ரஜினிகாந்த் உடனடியாக தமிழ் கற்றுள்ளார் இதன் பிறகு உங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும் 1975ம் ஆண்டு ரஜினிகாந்திற்கு கே பாலச்சந்தர் அவர்கள் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை அவருக்கு கொடுத்தார் இதைத் தொடர்ந்து வில்லனாக நடித்து படிப்படியாக நாயகனாக மாறி இன்று சூப்பர் நாயகனாக உருவெடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

1 thought on “சாதரண கண்டெக்டர் சிவாஜிராவ், சூப்பர் ஸ்டாரன சரித்திர வரலாறு”

  1. Pingback: தலைவர் மாஸ் பொங்கல் சும்மா தெறிக்கவிட்டுறாறு !

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன