இந்திய பாதுகாப்புத்துறையில் பட்டாசு கிளப்பும் பாரதப் பெண்கள்..!

Indian Women in Defence Field

உலகத்தின் எல்லா விதமான பாதுகாப்பு துறையிலும் பெண்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் இன்றுவரை அமெரிக்கா தான் அதிக அளவிலான பெண்கள் படையினர்கலை கொண்டுள்ளார்கள். ராணுவம், கப்பல் படை மற்றும் விமானப்படை என இது மூன்றிலும் பெண்களின் பங்கு இந்தியாவைத் தவிர்த்து மற்ற பல நாடுகளில் அதிகமாகவே உள்ளது. அதிலும் ஆசியாவில் ஒப்பிடுகையில் சீனாவிற்கு அடுத்துதான் இந்தியா உள்ளது. இது அனைத்திற்கும் மாறாக ஒரு புதிய மாற்றத்தை இந்தியா தற்போது கொண்டு வந்துள்ளது.

பாதுகாப்பு படையில் பெண்கள் 

கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பெண்கள் அதிகமாக இணைய ஆர்வம் காட்டுகிறார்கள். அனால் இதற்கான விழிப்புணர்வு குறைவாக இருப்பதினால் இன்றுவரை பாதுகாப்பு துறையில் பெண்களின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது.

அதிலும் தென் மாநிலங்களை விட வட மாநிலங்களிலிருந்து பெண்கள் அதிகமாக இராணுவத்தில் இணைகிறார்கள். இதற்கு போதுமான விழிப்புணர்வு மற்ற மாநிலங்களுக்கு சென்றடையாமல் இருப்பதே மிகப்பெரிய காரணமாகுன். மத்திய அரசு, பாதுகாப்புத் துறையில் பெண்கள் இணைவதற்கான எந்த விழிப்புணர்வு காணொளியும் எந்தப் பாதுகாப்பு சட்டமும் கொண்டுவரவில்லை. இதனால் பெண்கள் பாதுகாப்பு துறையில் இணைவது என்பது கடினமான ஒன்றாகவே இருந்து வந்தது.

மேலும் படிக்க – குலதெய்வம் வழிபாட்டை செய்து பலன் பெறுவது எவ்வாறு ?

இதுவரை பாதுகாப்புத் துறையில் பெண்கள்

இந்தியா சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே பத்மாவதி என்ற பெண் இந்திய விமானப்படைக்கு தளபதியானார். அதன் பிறகு ராணுவ படையிலும் இணைந்தார். இது தான் இன்றுவரை மிகப் பெருமையாகப் பேசி வரும் பெண் பாதுகாப்பு அதிகாரி. ஆனால் இது அனைத்தையும் தகர்க்கும் வகையில் இந்தியா தனது அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது. ராணுவ பலத்தை காண்பிப்பதற்கு மொத்தம் எத்தனை இராணுவ அதிகாரிகள் மற்றும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதுதான் ஒரு நாட்டின் பலமாக இருக்கிறது. அதை மற்ற நாடுகள் சரியாக செய்து வந்தாலும் இந்தியாவில் ஆண்கள் படை அதிகமாக இருந்தாலும் பெண்களின் படை போதுமான அளவு இல்லை. இதை தடுப்பதற்கு இந்தியா ஒரு மிகப்பெரிய முயற்சி எடுத்துள்ளது.

இணையதள பதிவுகள்

இனிமேல் ராணுவத்தில் எப்படி சேரலாம், அதற்கான சட்டத் திட்டங்கள் என்ன என்ற அனைத்தையும் இணையதளம் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். அதை தவிர்த்து இணையதளம் மூலமாகவே நாம் இதற்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து நமக்கு எந்தத் துறையில் சேர விருப்பம் உள்ளதோ அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து அதற்கான உங்கள் தகுதிகளையும் பதிவிடலாம்.

பாதுகாப்புத்துறை எனக் கருதப்படும் இராணுவம், கடற்படை, விமானப்படை என இது மூன்றில் எதில் வேண்டுமானாலும் பெண்கள் சேர்ந்து கொள்ளலாம். இதற்கான சில உடல்தகுதி மற்றும் அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ப படிப்பு தகுதிகளும் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க – நோக்கு வர்மத்தினை ஆன்மீகத்தில் செலுத்தி ஆற்றல் பெறுவது எவ்வாறு?

பெண்கள் படைபலம்

இதுவரை ராணுவத்தில் பெண்கள் படை கிட்டத்தட்ட 3 சதவீதம் மட்டுமே இருக்கிறார்கள். இப்போது இந்திய ராணுவம் அளித்துள்ள விளம்பரத்தின் முயற்சியால் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் கப்பல் படையில் 6% இருக்கிறார்கள். விமானப்படையில் இவர்கள் மற்ற இரண்டு பாதுகாப்புத்துறையையும் ஒப்பிடுகையில் இதில் சற்று அதிகமாக கிட்டத்தட்ட 13% இருக்கிறார்கள்.

மேலும் படிக்க – இறையருள் பெற இதை செய்தால் போதுமுங்க..!

பெருமை மிக்க இந்தியா

ஆசியாவில் பல நாடுகளில் இன்னும் பெண்கள் சுதந்திரத்திற்கு வழிவிடாமல் இருக்கும் நிலையை இந்தியா இது போன்ற முயற்சியை மேற்கொண்டது பாராட்டுக்குரிய விஷயம் ஆகும். ஆனால் இது மிகத் தாமதமாக செயல்பட்டு இருக்கிறது என்று சொல்லலாம். ஆண்களுக்கு நிகராக பெண்களும் வலிமை உள்ளவர்கள் அதை உணர்த்தாமல் இன்றுவரை அவர்களை தாழ்த்தி வைத்துள்ளார்கள். ஆனால் இன்று இது போன்ற சிறுசிறு முயற்சியின் மூலமாக பெண்கள் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குவார் என்பதை மேலும் நிரூபிக்க இது மிகப்பெரிய வாய்ப்பாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன