இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்காத மாநிலங்கள்..!

  • by
indian states which are not affected by corona

கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் பல மாநிலங்களை பாதிப்படையச் செய்துள்ளது. இதில் கேரளாவில் தான் அதிக அளவிலான நோயாளிகள் உள்ளார்கள். அதைத்தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா இருக்கிறது. ஆனால் இதுவரை கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கும் ஒரு சில மாநிலங்கள் இந்தியாவில் உள்ளது.

கொரோனா பாதிக்காத மாநிலம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் ஒரு சில மாநிலங்களுக்கு செல்லவில்லை, அதில் முதலில் இருப்பது ஜார்கண்ட். பிகார், சத்தீஸ்கர், வெஸ்ட் பெங்கள், ஒடிசா போன்ற 4 மாநிலங்களுக்கு நடுவே இருக்கும் ஜார்க்கண்டில் இன்னும் ஒரு கொரோனா நோயாளிகள் கூட உருவாகவில்லை. அதைத் தொடர்ந்து சீனாவுக்கு மிக அருகில் இருக்கும் அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், திருப்பூரா, மேகாலயா மற்றும் அசாம் போன்ற மாநிலங்களும் பாதுகாப்பாக உள்ளது.

மேலும் படிக்க – கொரானா குறித்து பரவும் புரளிகள் பயங்கள்!

இதற்குக் காரணம் என்ன

இந்த மாநிலங்களில் மக்கள் தொகை குறைவாகவும் அதே சமயத்தில் ஜார்க்கண்ட் போன்ற மாநிலத்தில் வெளிநாட்டுப் பயணிகள் மிகக் குறைவாகவும் வந்ததினால் கொரோனா வைரஸ் தொற்று இவர்களை எந்த வகையிலும் தாக்கவில்லை. இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து மாநிலங்களிலும் வெளிநாட்டு பயணிகள் மூலமாக தான் கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்தது. அதைத் தவிர்த்து இந்தியர்கள் தங்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு வைரஸ் உடன் வீடு திரும்பினார்கள். இதன் மூலமாகவே கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் வைரஸ் தொற்று அதிகரித்தது.

மேலும் படிக்க – தமிழர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்

பரவாமல் தடுக்க வேண்டும்

இந்தியர்களுக்கு இந்த பாதிப்புகள் உண்டாகிருக்கும் சூழ்நிலையில் மற்ற யாருக்கும் இது பரவாமல் தடுக்கும் செயலில்தான் இந்தியா இறங்கியுள்ளது. இந்தியா முழுவதும் முடக்கில் உள்ளதால் இந்த வைரஸ் தொற்று, இதுவரை பாதிக்காத மாநிலங்களுக்கு செல்ல வாய்ப்பில்லை. எனவே இந்த குறிப்பிட்ட நாட்களில் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மட்டுமே இந்திய மக்களுக்கும் மற்றும் பிற மாநில மக்களுக்கும் நன்மை.

வருமுன் காப்பதே நன்று என்பதைப்போல் இந்த வைரஸ் வந்த பிறகு காப்பதற்கான வழிகளை நாம் தேடி வருகிறோம். எனவே இதுவரை பாதிக்காத மாநிலத்தவர்கள் இதன் தாக்கத்தை முழுமையாக அறிந்து மிகப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இதை கவனத்தில் கொண்டு நாமும் நம் வீட்டிற்குள் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன