மக்களை ஊக்குவிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி..!

  • by
indian prime minister narendra modi motivating people on fighting corona

கொரோனா வைரஸ் மற்ற நாடுகளில் பரவி வந்த சூழ்நிலையில் இந்திய பிரதமர், இந்தியாவில் பரவக் கூடாது என்ற எண்ணத்தில் உடனடியாக லாக்டவுன் சட்டத்தைப் பிறப்பித்தார். இதன் மூலமாக கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறாமல் நம் நாட்டை பாதுகாத்தார். இதைத்தவிர நாட்டு மக்களுடன் மற்றும் மருத்துவர்கள் என எல்லோருடனும் உரையாடி ஊக்கமளித்து வருகிறார்.

பெருமை கொள்ளும் இந்தியர்கள்

கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கிய சில வாரங்களிலேயே சீனாவில் இருக்கும் இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம், தைரியமாக அழைத்துவர உத்தரவிட்டவர்தான் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. இதை தவிர்த்து சீனாவில் தவித்து வரும் மற்ற நாட்டவர்களையும் இந்தியாவுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அளித்தார். சீனாவை தவிர்த்து கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்துள்ள நாடுகளில் இருக்கும் அனைத்து இந்தியர்களையும் பாதுகாக்கும் வகையில் ஏராளமான ஏற்பாடுகளை நமது பாரதப் பிரதமர் செய்திருந்தார்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் பிணத்தை எப்படி கையாள்வது..!

வெளிநாடுகளுக்கு உதவி

கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கும் சக்தி மலேரியா போன்ற மருந்துகளுக்கு இருக்கின்றது என பல ஆய்வுகள் தெரிவிக்கிறது. உலகில் மலேரியாவுக்கு மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதன்மையாக இருப்பது இந்தியாதான். எனவே ஏராளமான நாடுகள் இந்த மருந்துகளை இந்தியாவிடம் கேட்டது, இந்தியாவும் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அனைவருக்கும் இதை அளித்து வந்தது. ஆனால் இப்போது இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இதை உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு வணிகம் செய்து வருகிறார்கள்.

மருத்துவர்களுக்கு நன்றி

இரண்டு வாரங்களுக்கு முன்பு நமக்காக சேவை செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கு நன்றி கூறும் வகையில் மார்ச் 22ஆம் தேதி மாலை 5 மணியளவில் எல்லோரையும் நரேந்திர மோடி அவர்கள் கைதட்டுமாறு கேட்டுக் கொண்டார். அந்த நாள் இந்திய நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து மருத்துவர் மற்றும் நம் உயிரைக் காப்பாற்றுவதற்காக போராடும் வீரர்களுக்கு கை தட்டுவதன் மூலமாக நன்றியை தெரிவித்து வந்தார்கள்.

இருளைப் போக்கும் ஒளிவிளக்கு

அதேபோல் ஏப்ரல் ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றி ஒன்றிணைய வேண்டும் என கூறியிருந்தார். இதன் மூலமாக நாம் கொரோனா மூலமாக ஏற்பட்ட இருள் விலகி மனிதம் ஒளி பெறுகவேண்டும் என்று அனைவரையும் ஊக்குவித்தார். உலகில் இருக்கும் ஏராளமான தலைவர்கள், இந்தியாவின் இது போன்ற செயல்களைப் பார்த்து வியந்துள்ளார்கள். ஒற்றுமையின் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதே நரேந்திர மோடியும் எண்ணம், அதை இது போன்ற சிறுசிறு செயல்கள் மூலமாக மக்களுக்கு உணர்த்துகிறார்.

மேலும் படிக்க – லாக் டவுனின் பொழுது காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்துவது..!

சுகாதாரத் துறையுடன் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுகாதாரத்துறை, விளையாட்டுத்துறை மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் மருத்துவர்கள் என எல்லோருடனும் உரையாடி வருகிறார். இதன் மூலமாக நம் நாட்டில் ஏற்படும் சிக்கல்களையும் மற்றும் இது போன்ற செயல்களை தடுப்பதற்காக அயராமல் உழைக்கும் அதிகாரிகளின் மனநிலையைப் உக்கப்படுத்துவதற்கும் நமது பாரதப் பிரதமர் இது போன்ற உரையாடல்களை மேற்கொள்கிறார். இதைத் தவிர்த்து மற்ற நாடுகளில் இருக்கும் பிரச்சனையையும் கேட்டறிந்து அவர்களுடன் ஒன்றிணைந்து கொரோனா வைரஸை எதிர்த்து போராடுகிறார்.

நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகிற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் தான் யார் சிறந்த தலைவர் என்று நம்மால் கணிக்க முடியும். எனவே அதை பயன்படுத்தி தன்னால் முடிந்த உதவிகளையும் மற்ற நாடுகளுக்கும் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் அளித்து தன்னுடைய முழு திறமையும் வெளிக்காட்டி வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன