இந்தியர்கள் தானியங்கி இயந்திரம் மூலமாகவே தங்கள் வேலைகளை செய்கிறார்களா..!

  • by
indian lifestyle is spoiled by machine life

உலகிலுள்ள எல்லா நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் இந்தியர்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். அதில் பணிபுரியும் இந்தியர்கள் அதிகமாக உழைக்காமல் ஏந்திரன் மூலமாக புத்திக் கூர்மையை கொண்டு குறைந்த அளவில் உழைத்து தங்கள் வேலைகளை செய்கிறார்கள் என்ற ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இவர்களின் வேலையின் தரம் எந்த வகையிலும் குறையாமல் பார்த்துக் கொண்டே எல்லாவற்றையும் குறைந்த நேரத்தில் முடிக்கும் தன்மை இந்தியர்களுக்கு உண்டு. இவர்கள் இயந்திரத்தின் மூலமாக தங்கள் வேலைகளை எப்படி செய்கிறார்கள் அதன் மூலமாக அவர்களுக்கு கிடைக்கும் பிரச்சினைகளை இந்த பதிவில் காணலாம்.

தொடர் வேலைகள்

ஒரு சில நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், செய்யும் வேலையையே தினமும் செய்கிறார்கள். இதனால் தாங்கள் செய்யும் வேலையை சுலபமாக மாற்றும் எண்ணம் இந்தியர்களுக்கு உண்டானது. இதன் அடிப்படையில் தாங்கள் ஒரு நாளைக்கு செய்த வேலையை தினமும் செய்வதற்கு இயந்திரத்தை நாடி உள்ளார்கள். ஒட்டுமொத்த உலக அளவில் 50 சதவீத மக்கள் தங்கள் வேலையை இயந்திரமயமாக மாற்றி வருகிறார்கள். அதில் இந்தியர்கள் மட்டும் கிட்டத்தட்ட 80% தங்கள் வேலைகளை இயந்திரமாக மாற்றி உள்ளார்கள். தங்களின் வேலை சுமையை குறைப்பதற்காக இந்த வழியை தேர்ந்தெடுத்தார்கள். இதனால் உலகளவில் இருப்பவர்களின் பார்வை இந்தியர்களின் மேல் விழுந்துள்ளது.

மேலும் படிக்க – கொரானாவிலிருந்து வீட்டுப் பெரியோர்களை காத்தல்

பொறியாளர்கள்

ஒரு பொறியாளர் என்பவர் எல்லாத்துறையிலும் தன்னுடைய பங்கை காட்டும் வல்லமை கொண்டவர். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் எல்லா தொழிலாளர்களும் ஒருமுறை செய்த தொழில்நுட்பத்தை மீண்டும் மீண்டும் செய்வதற்கான வழிகளை இயந்திரத்தின் மூலமாக பெறுகிறார்கள். உதாரணத்திற்கு ஒரு செயலியை உருவாக்கும் ஒரு பொறியாளர் அதன் நுட்பத்தை நன்கு அறிந்து வேறு ஒரு தொழில்நுட்பத்தின் கோடிங்கை பயன்படுத்தி ஒரு சில மாற்றங்களை மட்டும் செய்து தங்கள் புதிய செயலியை உருவாக்குகிறார்கள். இதைப் போல் தான் எல்லா வேலைகளும் செய்து முடிக்கிறார்கள். சொந்தமாக உருவாக்கப்படும் செயலிகள் அல்லது தொழில்நுட்பத்திற்கான நேரம் அதிகரிப்பதனால் ஏற்கனவே செய்யப்பட்ட மாதிரிகளை பயன்படுத்தி அதில் சில மாற்றங்களை கொண்டு வந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் யோசனையை இந்தியர்கள் பெற்றுள்ளார்கள்.

இயந்திர மயமாகும் உலகம்

ஐடி நிறுவன முதல் ஆட்டோ மொபைல்ஸ் வரை எல்லாமே இயந்திர மயமாகி வருகிறது. இதன் மூலமாக மனிதர்களின் தேவை குறைந்து இயந்திரத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதுபோன்ற இயந்திரத்திற்கு பின்னால் இருப்பது ஒரு மனிதனின் மூளை எனவே அதை அறிந்து இயந்திரத்தின் செயல்பாடு 90% மும் மனிதனின் வேலை 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்று கணித்து இதுபோன்று இயந்திரங்களை உருவாக்குகிறார்கள். இருந்தாலும் மனிதர்களின் தேவை குறைந்து அவர்களின் வேலை வாய்ப்பும் குறைகிறது. எதிர் காலத்தில் நாம் பயன்படுத்தி வரும் எல்லா வேலைகளும் இயந்திர மயம் ஆகும். 

தானியங்கி ரோபோட்ஸ்

இன்னும் சில வருடங்களில் தானியங்கி ரோபோட்கள் உலகம் முழுக்க உபயோகத்திற்கு வந்து விடும். இதன் மூலமாக ஓட்டல் ஊழியர்கள், கட்டுமான ஊழியர்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் வரை எல்லாமே இயந்திர மயமாகி விடும். இது போன்ற செயல்களை ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் ஏற்கனவே துவங்கி உள்ளது. இதன் மூலமாக மனிதர்கள் மிகக் குறைவான சம்பளத்திற்கு வேலை செய்து தங்கள் அன்றாட வாழ்க்கையை அந்நாட்டில் ஓட்டுகிறார்கள். இதுபோன்ற நிலைமை மற்ற நாடுகளில் விரைவில் வரும். எனவே உங்கள் திறமைகளை அதிகரித்து உங்கள் வாழ்க்கையை எப்படி கடப்பது என்பது இப்போதோ சிந்தித்து வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – சித்த அமைப்பின் மருத்துவ முறைகள் !

சில வருடங்களுக்கு முன்பு நாம் செய்து வந்த ஏராளமான வேலைகள் இயந்திரத்தின் மூலமாக முடக்கப்பட்டது, இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் தானியங்கி வாகனங்கள் வரவிருப்பதால் அனைத்து ஓட்டுநர்களின் வேலையும் இழக்கும் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற வாகனத்தை சார்ந்து செய்யப்படும் வேலைகளை மாற்றி வேறு ஏதாவது வேலையில் பயிற்சி பெற்று உங்கள் எதிர்காலத்தை மாற்றிய அமையுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன