இந்திய ராணுவம் கொரோனாவுக்கு எதிராகப் போராடத் தயாரா..!

  • by
indian army to fight against corona virus

கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கும், கிருமிகளுக்கும் இடையே நடக்கும் போர். இதில் கிருமியின் கை ஓங்கி இருந்தாலும் அதை மனிதர்கள் தங்களால் முடிந்தவரை எதிர்த்து போராடுகிறார்கள். கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் ராணுவ படையினர் போராடி வருகிறார்கள். இதில் மருத்துவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் இடைவிடாமல் தங்களால் முடிந்தவரை உழைக்கிறார்கள். காவல்துறையினர் மக்களை கட்டுப்படுத்தி வருகிறார்கள். சில சமயங்களில் இதை சரியாக செய்ய முடியாததால், இந்திய அரசாங்கம் இராணுவ படையை முக்கியமான சில மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளது.

இந்திய ராணுவம்

இந்திய நாட்டின் பேரழிவுகளை உண்டாகும் பிரச்சனைகளை சமாளிப்பதற்க்காகவே நாம் ராணுவப் படையை வைத்துள்ளோம். பேரழிவு என்பது மற்ற நாட்டு இராணுவங்களுக்கு  எதிராக போர் புரிவது மட்டுமல்லாமல் இயற்கைப் பேரழிவு, சுனாமி, சூறாவளி மற்றும் வெள்ளம் சூழ்ந்த காலங்களில் மக்களை காப்பாற்றுவதற்காக நாம் பயன்படுத்தி வருகிறோம். சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் மக்களை கட்டுப்படுத்துவதற்காக நாம் இராணுவத்தை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

மேலும் படிக்க – மொபைல் போன் மற்றும் லேப்டாப்பை எப்படி பாதுகாப்பது..!

மக்களின் அலட்சியம்

ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த நாள் முதல் இன்று வரை மக்கள் ஏதாவது ஒரு பொய்க் காரணங்களைக் கூறி வெளியே சுற்றி வருகிறார்கள். இதில் அதிகளவிலான சொல்லப்படும் பொய்கள் என்னவென்றால் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்வது, மருத்துவமனைக்கு செல்வது மற்றும் பத்திரிக்கையாளர்கள் அல்லது டாக்டர்கள் என பொய் சொல்லிவிட்டு காவல் அதிகாரிகளை கடந்து செல்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் தங்கள் காதலியை பார்க்க அல்லது புகை பிடிக்கத் தேவையான பொருட்களை வாங்க செல்கிறார்கள். இதைத் தவிர்த்து ஒரு சிலர் நம்முடைய நகரம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக செல்கிறார்கள்.

கட்டுப்பாட்டிற்க்கு வரும் ராணுவம்

காவல் அதிகாரிகள் என்னதான் மக்களை கட்டுப்படுத்தினாளும் மக்கள் அலட்சியமாக அவர்களுக்கு தெரிந்து வேறு பாதைகளில் செல்கிறார்கள். இதை தடுப்பதற்காக அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை அதிகரிக்க மத்திய அரசு குறிப்பிட்ட சில நகரங்களுக்கு மட்டும் ராணுவப் படையினரை அனுப்பி உள்ளார்கள். இவர்கள் மக்களை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல் மருத்துவ மனைக்குச் செல்பவர்களுக்கு உதவியாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள மக்களை கண்டு பிடிப்பதற்காகவும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதற்காகவும் ராணுவத்தினரை அணுகி உள்ளார்கள்.

மேலும் படிக்க – நம்ம ஊர் நாட்டு காய்கறிகள் எவை என தெரியுமா???

இனிமேல் மக்கள், அரசுக்கு எதிராக போராடாமல் அரசு சொல்வதை கேட்டு நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ராணுவ அதிகாரிகளின் சிகிச்சை வேறுவிதமாக இருக்கும். இதன் மூலமாக கொரோனா வைரஸ் பாதிப்பை விட இவர்கள் கொடுக்கப்படும் சிகிச்சையின் மூலமாக அதிக நாட்கள் நீங்கள் பாதிப்படைவீர்கள் என்பதை கருத்தில் கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன