இந்தியா மூன்றாம் மற்றும் இரண்டாம் நிலைக்கு இடையே இருக்கிறது..!

  • by
india is in between second and third stage of corona virus

கொரோனா வைரஸ் மதிப்பில் இந்தியா இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைக்கு இடையே இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஒரு சில அரசியல்வாதிகள் இந்தியா மூன்றாம் நிலையை எட்டியுள்ளது என்று தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இதை தடுக்கும் வகையில் இரண்டு நிலைக்கு மூன்றாம் நிலைக்கும் நிலைக்கு இடையே இருக்கிறோம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை சுகாதாரத்துறை அளித்துள்ளது.

முதல் நிலை

இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் தங்கள் குடும்பம் மற்றும் தங்கள் சமூகத்திற்கு பரப்பக் கூடிய நிலையை தான் முதல் நிலை என்கிறார்கள். இதைத் தவிர்த்து இவர்கள் பயணம் செய்யும் பேருந்துகள் மற்றும் விமானங்களில் இருப்பவர்களும் இவர்கள் மூலமாக பரவுகிறது. எனவே தாங்கள் அருகில் இருக்கும் அனைவருக்கும் பரவுவதால் இதை முதல் நிலை என்கிறார்கள்.

மேலும் படிக்க – தீவிர கோவித் தொல்லையை தீர்க்க இன்னும் சில நாட்கள் ..

இரண்டாம் நிலை

முதல் முதலில் பரப்பப்பட்டுவர்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு சம்பந்தம் இல்லாதவர்களை சந்திப்பது மூலமாக இந்த வைரஸ் தொற்று பரவுகிறது. அதாவது வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையே ஏதாவது ஒரு உணவகங்கள் அல்லது ஏடிஎம் வங்கி என சம்பந்தம் இல்லாதவர்களுக்கு பரப்பப்படுவதை இரண்டாம் நிலை என்கிறோம். இதன் மூலமாக இதைப் பற்றி விழிப்புணர்வு இல்லாதவர்கள் மற்றும் பாதுகாப்பை பயன்படுத்தாதவர்களே அதிகமாக மதிக்கிறார்கள்.

மூன்றாம் நிலை

எப்போது கொரோனா வைரஸ் சமூக தொற்றாகாக மாறுகிறதோ அப்போதுதான் அதை அதிகாரப்பூர்வமாக மூன்றாம் நிலை என்று அறிவிப்பார்கள். மூன்றாம் நிலை என்றால் சமூகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்றுக்கள் பரவும், அதாவது நாம் வசிக்கும் தெருக்கள், வீடுகள் மற்றும் வீட்டைச் சுற்றி உள்ள அனைவருக்கும் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்புகள் ஏற்பட்டால் இதை மூன்றாம் நிலை எனலாம். இதன் மூலமாக இந்த வைரஸ் தொற்றின் எண்ணிக்கை கணக்கிட முடியாத அளவுக்கு அதிகரிக்கும்.

மேலும் படிக்க – கொரோனாவுக்கு எதிராக போராடும் வீடுகளில் இருக்க வேண்டியவை..!

இடைநிலை

இந்தியா இப்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைக்கு இடையே இருக்கிறது, அதாவது இது இன்னும் சமூக தோற்றாகாக மாறவில்லை. இருந்தாலும் இதற்கு முன் ஒரு சிலரால் பரப்பப்பட்ட இந்த வைரஸ் இப்போது இந்தியா முழுவதும் ஏராளமான மக்களை பாதித்துள்ளது. லாக்டவுன் முடிவிற்கு வந்தால் ஒருவேளை இந்த சூழல் சமூகச் சொற்றாக மாறும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே இதைக் கருத்தில் கொண்டு அனைவரும் இடைவெளிவிட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் இந்திய அரசு செய்து வருகிறது.

இனிமேல் இந்திய கொரோனாவை இப்போது வரை கட்டுக்குள் வைத்திருக்கிறது. இதை அலட்சியப்படுத்தாமல் சமூக இடைவெளி விட்டு உங்கள் அன்றாட வேலைகளை செய்யுங்கள். ஒருவேளை இந்திய மூன்றாம் நிலையை ஏட்டினால் நம் நாட்டில் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் கணக்கிட முடியாத அளவிற்கு இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன