இந்தியா ஐஎன்சி சாக்கின் பாதுகாப்பு திட்டங்கள்..!

  • by
india inc chalk suggests safety measures for corona virus

கொரோனா வைரஸ் தாக்குதலினால் இந்தியா முழுவதும் கடந்த 18 நாட்களாக முடக்கத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த லாக்டவுன் முழுமையாக விளக்கும் திட்டத்தில் மத்திய அரசு இருக்கிறது. ஒருவேளை இந்த லாக்டவுன் முழுமையாக விளக்கினால் நம்மை கொரோனா வைரஸ் பாதிக்காமல் பாதுகாப்பாக எப்படி இருக்க வேண்டும் என்பதை மும்பை உள்ள இந்திய இன்க் கப்ரேஷன் ஒரு பாதுகாப்பு திட்டத்தை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு வழிமுறைகள்

இதுவரை நாம் கையுறைகள் மற்றும் முக கவசம் போன்றவைகளை அணிந்து பாதுகாப்பாக இருந்து வருகிறோம் இதை இந்திய சுகாதாரத் துறை நமக்கு அறிவுறுத்தியது. அதை தவிர்த்து சனிடேஷன் போன்றவர்களை வைத்து ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை கைகளை நன்கு அலச வேண்டும் என்பதும், சமூக இடைவெளி விட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என ஏராளமான அறிவுரைகளை அளித்துள்ளது. ஆனால் இது அனைத்தும் நாம் லாக்டவுனை எப்படி கடக்க வேண்டும் என்பதற்காக அறிவுறுத்தினார்கள். ஆனால் லாக்டவுன் நிறைவு பெற்ற பிறகு நாம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை காணலாம்.

மேலும் படிக்க – கொரோனாவை குணப்படுத்தும் வெண்டிலேஷன்..!

இந்தியா ஐஎன்சி

அனைத்து நிறுவனங்களும் திறந்தவுடன் ஏராளமான தொழிலாளர்களை ஒரே நேரத்தில் வர விடாமல் தடுக்க வேண்டும். அதை தவிர்த்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி நேரத்தை வகுத்து அதற்கேற்ப அலுவலர்களுக்கு வரவேண்டும். இணையம் மூலமாகவும் மற்றும் கணினி மூலமாகவும் வேலை செய்பவர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். மதிய இடைவெளியில் உணவுகளை மிகப் பாதுகாப்பான முறையிலும் மற்றும் தனித்தனியாக உணவுகளை சாப்பிட ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கூட்டத்தை தவிர்க்க வேண்டும்

அலுவலகங்களில் கூட்டங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும். உணவு அருந்தும் சமயங்களில் அல்லது இடைவேளை நேரங்களில் கூட்டமாக இல்லாமல் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்கள் நேரத்தை கழித்து, சமூக இடைவெளியுடன் உரையாடலாம். கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பரவாமல் இருப்பதற்கு இந்த செயலை சரியாக செய்ய வேண்டும்.

மேலும் படிக்க – கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாடு..!

பரிசோதனைகள்

எல்லா நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்களை ஒருமுறைக்கு பலமுறை பரிசோதிக்க வேண்டும். உள்ளே நுழையும்போது மற்றும் தங்கள் கணினி அல்லது தங்கள் மேஜையை பயன்படுத்தி விட்டு மீண்டும் வெளியேறும் போதும் அவர்களை பரிசோதிக்க வேண்டும். இதன் மூலமாக அலுவலகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்கும். ஒவ்வொரு நாளும் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை தங்கள் அலுவலக அறைகள் மற்றும் மேஜைகள் போன்ற அனைத்தையும் கிருமி நாசினிகளை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் முழுமையாக அழியும் வரை இந்த செயலை தொடர்ந்து செய்வது சிறந்தது.

நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறேமோ அவ்வளவு விரைவில் இந்த வைரஸ் தொற்றை நம் நாட்டில் இருந்து வெளியேற்ற முடியும். எனவே மக்கள் அனைவரும் ஒத்துழைத்து இதுபோன்று பாதுகாப்பு வழிகளை கடைப்பிடித்து கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன