கொரானாவால் ஸ்தம்பிக்கும் தினசரி வாழ்வு

  • by

 கொள்ளை  நோயான வைரஸ் கோவிட்-19 வியாதியால் உலகமே ஸ்தம்பித்து நிக்கின்றது எங்கு பார்த்தாலும் ஒரே அச்சம்.  இந்தியாவின் சிலிகான் வேலியான கர்நாடக மாநில பெங்களுரை இழுத்து மூட வைத்துள்ளது. இது குறிபிரதேசம் என்பது கொரானா தாக்குதல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் என அச்சம் மக்களுக்கு உண்டு. ஐடி கம்பெனிகள்  சந்தை இங்குதான் உள்ளது. 

சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம் க்யூ கட்டி இங்கு கொடிப்பிடித்துள்ளது. கொரானாவாவது,கிரணாவாவது வேலை முக்கியம் ஒர்க் ப்ரம் ஹோம் செய்யவும் என்கின்றது. இந்த பெங்களூர் ஐடி நிறுவனங்களில் பலர் வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாக, அவ்வப்போது சென்று வரும் சூழல் அதிகம். இதுவே தொற்றுக்கான முழு காரணமாகும்.  

கொரானாவின் பாதிப்பு அதிகம்:

 இந்தியாவில், கர்நாடகா அதிகபட்ச கொரோனா நோயாளிகள் கொண்டுள்ளது. இங்கு பாதிக்கப்பட்ட  4 பேரு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெங்களூரிலுள்ள ஐடி நிறுவனங்கள், அச்சத்தில் ஆலோசனைக்கூட்டத்தை கூட்டி ஆன்லைனில் முகாம் போடுகின்றனர்.  ஹெச் ஆர்கள் எல்லாம் மண்டையைப் பிச்சுக் கொள்கின்றனர். 

பன்னாட்டு நிறுவனங்கள் திண்டாட்டம்:

இந்தியாவில் உள்ள டெல் நிறுவனம், மைன்ட்ட்ரீ மைண்ட்ஸ் போன்றவற்றின் ஊழியர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அரசு அடுத்த என்ன கெடுபிடிகள் செய்யமோ என்ற அச்சம் ஒரு பக்கம் அவர்களை ஆட்டுகின்ற்து. 

அனைத்து ஐடி நிறுவனங்களையும் வீட்டிலிருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளது. வீட்டிலிருந்து வேலை பார்க்க  வேண்டிய நிர்பந்தத்தை எவ்வாறு முடிக்க வேண்டும் என ஆலோசிக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக அறிவித்து பணியை முடக்கியுள்ளது.  எப்போது வீட்டிலிருந்து வேலை பார்க்க வேண்டி பலரும் சொந்த ஊர் திரும்பி அங்கிருந்து பணியாற்ற முயல்கின்றனர். இதில் உள்ள சிக்கல் என்ன்வென்றால் பெங்களூரில் பெரிய சிட்டியான இங்கே ஒரு சில இடங்களில் ஃவை பை பல்லிழிக்கின்றது.  இப்படி இருக்க ஊருக்கு செல்லும் ஐடி பணியாளர்கள் எவ்வாறு பணியை முடிப்பார்கள் என்ற கலக்கத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நிற்கின்றன. 

மேலும் படிக்க: மஞ்சள் சூப் குடியுங்கள் உடலை தொற்றிலிருந்து காக்கலாம்

ஐடி வட்டாரங்கள் வீட்டில் இருந்து இயங்க உத்தரவு:

பெங்களூரில், ஒயிட்பீல்டு, மார்த்தஹல்லி, இன்டலிசாஃப்ட்  போன்ற பகுதி நிறுவனங்கள் எல்லோருக்குமே ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷன் கொடுத்துவிட்டார்கள். ஒரு வாரம் கழித்து நிலைமை எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்து, நிர்வாகம் முடிவு எடுக்கும் என அறிவித்து அனுப்பி உள்ளார்கள்.  ஒர்க் பிரம் ஹோம் என்பது இப்போது ஐடி ஊழியர்களின் அடுத்த இலக்காகி நிற்கின்றது. ஐடி நிறுவனங்கள் மட்டுமல்ல மற்ற ஆப் நிறுவனங்கள் அனைத்தும் இதைதான் பரிந்துரைக்கின்றனர்.

குழந்தைகள் கொண்ட தாய்மார்கள் அனைவருக்கும்  வீட்டிலிருந்து பணியாற்றும் வாய்ப்பு கிட்டியுள்ளது தப்பித்தோம் பிழைத்தோம்  என வாழ்கின்றனர். 

புதிதான சந்திப்புகள்  அனைத்தையும் அனைத்து அலுவலகங்களும் ஒத்தி வைத்துள்ளது. இது பெங்களூர் மட்டுமல்ல அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த நிலைதான். நாடு முழுவதுமுள்ள  நிறுவனங்கள் அனைத்தும் இந்த சிக்கலில் தான் சிக்கித் தவிக்கின்றன. எப்பொழுதும் பரப்பரப்பாக இருக்கும் நிறுவன்ங்கள் அனைத்தும் மூடி கிடக்கின்றது வணிக நிறுவனங்கள்  வீதிகள் எல்லாம் விழி பிதுங்கி நிற்கின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்திரவும் வந்துவிட்டது அடுத்து என்ன செய்யு உள்ளது என எதுவும் தெரியவில்லை. ஆனால் உடல் ஆரோக்கியம், மன தைரியம் அவசியமான ஒன்றாக உள்ளது. 

மேலும் படிக்க: கொரானாவை முடக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன