டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை!

  • by

இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சறுத்தலாக இருப்பதாகக் கூறி ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சீன நாட்டை சார்ந்த 59 ஸ்மார்ட்போன் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா போன்ற பெரிய சந்தையில் செல்போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனாளர்களை குறிவைத்து சீனா பல வித செயலிகளை இந்திய சந்தையில் விட்டுள்ளது.

அந்த செயலிகளில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் டிக்டாக், ஷேர் இட், யுசி பிரவுசர், ஹெலோ, உள்ளிட்ட பல்வேறு செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இது இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, இந்திய செல்போன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சீன செயலிகள் தடைக்கான அவசியம் :

இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் சென்ற ஏப்ரல் மாதத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், CERT- எனப்படும் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு அளித்த பரிந்துரை என்னவென்றால் சீன தயாரிப்பான ஜூம் செயலியை (ZOOM App) பயன்படுத்துவதால் தனிப்பட்ட ரகசியங்கள் கசிவதாக அப்போதே எச்சரிக்கை விடுத்தது.

தனியுரிமை பாதுகாப்பிற்கு எதிரான ஏற்பட்ட புகாரைத் தொடர்ந்து ஜெர்மன், தைவான், அமெரிக்கா போன்ற நாடுகள் பாதுகாப்பை காரணம் காட்டி செயலியை சில நிறுவங்கள் தடை செய்தது.

மாற்று வழி என்ன :

Spark.Live Become Tamil Expert Earn Money

சீனாவின் ஆக்கிரமிப்பு பிரச்சனைகள் அதன் அண்டை நாட்டுடன் நீண்ட நாட்களாக இருப்பவை. இந்தியாவுடன் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆக்கிரமிப்பு சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டிருந்தாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை ஆனால் சமீபத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் கண்மூடித்தனமான ஆயுதமற்ற இத்தாக்குதலிருந்து பல்வேறு தரப்பினரின் மனதில் சீன பொருட்களை தடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பரவலாக காணப்படுகிறது இது நடைமுறையில் சாத்தியமா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறி தான்.

இருப்பினும் மக்களிடையே சீன பொருட்கள் மீதான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது அதன் முன்னோட்டமாக சீன செயலிகளை தடை செய்வது என்பது ஒரு முன்னோட்டம் இதற்கு மாற்று வழி என்றால் இந்தியாவில் தயாரான, இந்திய நிதியை கொண்டு உருவாக்கப்பட்ட மற்றும் இந்தியர்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்ற நல்ல உள்ளடக்கங்களை கொண்டுள்ள பல செயலிகள் இருக்கின்றது.

அதிலும் Spark.Live செயலியானது இந்தியாவில் உருவானது. இந்த செயலி அதிசியக்க வைக்கும் வகையில் பல தரமான உள்ளடக்கங்களை கொண்டுள்ளது. Spark.Live செயலி மூலம் ஆரோக்கியம், அழகுக்கலை, ஜோதிடம், உணவு முறை, கல்வி, மேலும் பல வற்றில் மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று சந்தேகத்தை தீர்த்து கொள்கின்றனர். இந்த Spark.Live செயலி நிபுணர்களின் வீடியோக்களைப் பார்ப்பதற்கும், அவர்களுடன் அரட்டையடிப்பதற்கும், அவர்களுடன் ஒருவருக்கொருவர் ஆலோசனையை முன்பதிவு செய்வதற்கும் உருவாக்கப்பட்ட இந்த Spark.Live செயலி நம் பாரத நாட்டின் உன்னத படைப்பாகும்.

Spark.Live செயலி-யை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Spark.Live Banner

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன