கொரானா வைரஸ் கட்டுகடங்காமல் போகுமா

  • by

கொரோனா வைரஸ் செய்தி நேரடி புதுப்பிப்புகள்: கொரோனா வைரஸ் நாவலின் 18,500 க்கும் மேற்பட்ட நேர்மறையான வழக்குகளை இந்தியா இதுவரை பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை நாட்டில் 559 ஆக உயர்ந்துள்ளது. 

ராஷ்டிரபதி பவனில், சிக்கலான குடும்பத்தில் வசிக்கும் ஒருவர் கோவிட் -19 க்கு நேர்மறையை பரிசோதித்த பின்னர், 125 குடும்பங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. 

முதன்முறையாக எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்ததால் அமெரிக்க கச்சா சாதகமாக மாறியது. இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,430 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளை அமெரிக்கா பதிவு செய்தது. அமெரிக்காவிற்கு குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிடப்போவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அறிகுறிகள் இன்றி கொரானா  தாக்கம்: 

இந்தியாவில் கொரானா  தொற்றானாது அறிகுறிகள் இல்லாமல் வருகின்றது.  இந்தியாவில் 17 ஆயிரத்தை தாண்டியுள்ள கொரானா பாதிப்பானது இன்னும் அதிகரிக்கும் என்று  அரசு தனது கிடுக்குப்பிடியை போட்டுள்ளது. ஆரம்பத்தில் கொரானா பாதிப்புள்ளவர்களால் இந்த பாதிப்பு  தொற்றியது ஆனால் தற்பொழுது அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்க்கு 80 % பேர் இந்தியாவில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியா மேலும் சில கொடுமையான நிலைக்குப் போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

கொரானாவின் பாதிப்பு நாளுக்கு அதிகரித்துக் கொண்டே போகின்றது. இனிதான் வேகமாக பரவ இருக்கின்றது  என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. கொரானாவை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கில் வாழுகின்றது உலகம்.இதனை குறித்து கவலை தெரிவித்துள்ள சுகாதார மையம் 1918 அம் ஆண்டு உருவாகி 10 கோடி உயிரை பலி கொண்ட ஸ்பானிஷ் ப்ளூவுக்கு  நிகராக இந்த கொரானாவின் கோரத்தாண்டவம் இருக்கும். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் பொழுது மனிதர்களை காப்பாற்றலாம். இப்பொழுதுள்ள மேம்பட்ட மருத்துவ வசதியில் நாம் நம்மை காக்கலாம். 

பத்திரிக்கையாளர்கள் பாதிப்பு:

இந்தியா போன்ற நாட்டுக்கு  நடப்பில் இந்தியா இக்கட்டான நிலையில் இருக்கின்றது. இதுபோன்ற நேரத்தில் லாக்டவுன் இன்னும் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தமிழக  ஆலோசனை கூட்டத்தில் பேசப்படுகின்றது. இதற்கிடையே நாடு முழுவதுமுள்ள செய்தி தொடர்பாளர்கள் 50 பேருக்கு மேல் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறியப்படுகின்றது. தமிழகத்தில் முதலில் இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு  கொரானா தாக்கம் இருந்த நிலையில் தற்பொழுது தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் 26 பேருக்கு கொரானா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்கள் கொரானா வைரஸ் தாக்கத்தை உணர்ந்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகின்றது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:ஃபேஸ் மாஸ்க் அணியும் போது கவனிக்க வேண்டியவை..!

ஜனாதிபதி மாளிகை மற்றும் பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் இந்த கொடிய நோயால் அகப்பட்டு கொண்டு போவதை நாடு உண்ணிப்பாக கவனித்து வருகின்றது. இதனை  தொடர்ந்து ஊரடங்கானது இன்னும் வலிமையாக கடைப்பிடிக்கப்படும் என வலியுறுத்தப்படுகின்றது. இந்த நிலையில் கொரானா ரேபிட் கிட் பரிசோதனையில் முடிவுகள் தவறாக இருக்கின்றது என்பதால்   இந்திய மருத்துவ கவுன்சில் ரேபிட் கிட்டில் தரம் குறைவாக இருக்கின்றது இதனை இரண்டு நாட்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

உலகத்திலுள்ள வலிமை வாய்ந்த  கொம்பு முளைத்த நாடுகளான அமெரிக்கா, ஜெர்மினி போன்ற நாடுகள் சீனாவை திட்டி தீர்த்து வருகின்றது இந்த சூழலில் ஜெர்மினி இழப்பீடு கேட்க அதனை கொடுக்க சீனா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

மேலும் படிக்க: கொரோனா வைரஸை அழிக்கும் பிளாஸ்மா சிகிச்சை..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன