கோவிட் – 19 பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்.!

  • by
important things which you should know about covid-19

சீனாவில் புறப்பட்ட கோவிட் நோய் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வெகு விரைவாக பரவி இருக்கிறது. உலகையே பெரும் பீதியில் ஆழ்த்தி இருக்கிறது இந்த கோவிட் 19 .

கரோனா வைரஸ் டிலீஸ் 2019 என்பதன் சுருக்கம் தான் கோவிட் 19. சிவியர் அக்யூட் ரெஸ் பிரேட்டரி சின்ட்ரோம்  இந்த நோய்க்கான வைரஸ் அதாவது சார்ஸ் வைரஸ் 2 என்ற வைரசால் ஏற்படுகிறது கோவிட் 19. கரானோ வைரஸ் குடும்பத்திலுள்ள வைரஸ்களில் இதுவும் ஒன்று. 2003 ஆம் ஆண்டு உலகையே பீதிக்கு உள்ளாக்கி சார்ஸ் சின் இன்னொரு வடிவம்தான் இப்போது கோவிட் 19 நோயை உண்டக்கிய வைரஸ்.

கோவிட் 19 இன்அறிகுறிகள் எவை ?

இந்த வைரஸ் நோயால் நுரையீரல் அழற்சி ஏற்படுகிறது. இருமல் கடுமையான காய்ச்சல் போன்றவற்றுடன் மூச்சு விடவே சிரமமாக இருக்கும். உடல் நிலை மோசமானதும் பல முக்கிய உறுப்புகளின் செயல் இழக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் படிக்க – கருவேப்பிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

காற்றின் மூலம் கரோனா வைரஸ் பரவுமா ?

காற்றில் பரவுமா என்பது இதுவரை அறியப்படவில்லை. ஆனால் மற்றவர் இருமும்போதும், தும்மும்போதும் வெளியாகும் துளிகளில் இருந்து கரோனா வைரஸ் மற்றொரு உடலுக்கு பரவும். மற்ற உடலுக்கு செல்லும்போதுதான் தொற்று ஏற்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் இருந்தால் நோய் தொற்று ஏற்படுமா? இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இருமிக் கொண்டும் தும்மிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு அருகில் இரண்டு மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்தால் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல் நோயாளிகள் புழங்கிய இடத்தில் நாம் இருந்தாலும் நோய்த்தொற்று

ஏற்படும் சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக நோய் தொற்று கொண்ட ஒருவர் தும்மும்போது அவர் வாயிலிருந்து வரும் சிறு துளி கூட அருகில் இருக்கும் பொருள்களின் மீது படும் நாம் அதை  தொட்டுவிட்டு அந்த கைகளை கழுவாமல் நம்முடைய வாய் கண் மூக்கு போன்ற உறுப்புகளால் நம் உடலைத் தொட்டால் நோய்தொற்று அதிகமாக பரவும் .

கோவிட் 19க்கு தடுப்பூசி எப்பொழுது கண்டுபிடிக்கப்படும்?

தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் அறிவியலாளர்கள் மூலமாக ஈடுபட்டிருக்கின்றனர். விலங்குகளுக்கு தடுப்பூசி கொடுத்து பரிசோதனை செய்து கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற ஆபத்தான நோய்களுக்கு உடனே மருந்து அளித்து விட முடியாது. எல்லா விதமான பக்க விளைவுகளையும் கருத்தில் கொண்டுதான் தடுப்பூசி தயாரிக்க முடியும். அதனால் தான் இவ்வளவு தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பூசி வருவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மேலும் படிக்க – குழந்தைகளுக்கு டயாப்பர் பயன்படுத்தும் பெற்றோர்களின் கவனத்திற்கு ……!

கோவிட் 19 உடலில் வளர்ச்சி அடைய எத்தனை நாட்கள் ஆகும்?


 ஒருவருக்கு கோவிட் 19 தொற்றியவுடன் அறிகுறிகள் எதுவும் தென்படாது. 1
முதல் 14 நாட்களுக்கு உள்ளாக அறிகுறிகள் தென்படலாம். சராசரியாக ஐந்து
நாட்களுக்குள் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.

பூண்டை உண்பதால் கோவிட் 19 தொற்றை தடுக்கலாமா?

பூண்டை உண்பதால் கோவில் 19 தொற்றை தடுக்கலாம் என்று சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இதை பொய்யான செய்தி என ஐ.நாவின் உலக சுகாதார நிறுவனம் மறுத்திருக்கிறது. பூண்டில் நோய்க்கிருமிகளை எதிர்க்கும் திறன் இருந்தாலும் இந்த வைரஸை அதனால் குணப்படுத்த முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.

கோவிட் 19 யை தடுக்க முக உறை அணியலாமா? 

முக உறை அணிவதால் நூற்றுக்கு நூறு சதவீதம் கிருமித்தொற்று வராது என்று கூற முடியாது. கரோனா வைரஸ்கள் மிகவும் நுண்மையானது.அது கண்களில்கூட ஊடுருவக் கூடியது இந்த கோவிட் 19 நோய் வைரஸ். முகவுரையை அணிவதால் நோய் வராமல் ஓரளவு தடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரே முகவுரையை அடுத்தடுத்த நாட்களில் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்திய பின் சாலையோரங்களில் எறிந்துவிடாமல் முறையான குப்பைத் தொட்டியில் போடவும் குப்பைகளை முறையாக
அப்புறப்படுத்துவது முக்கியமானதாக உள்ளது.

மேலும் படிக்க – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..!

விலங்குகளிடமிருந்து கோவின் 19 தொற்றுமா ?

இந்த  வைரஸ்கள் பெரும்பாலும் வன உயிர்களிடம் இருந்து வருபவை.எடுத்துக்காட்டாக சார்ஸ் வைரஸ் புனுக்குப் பூனைகளிடம் உள்ள வைரஸ்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது. மெர்ஸ் வைரஸ் ஒட்டகத்தில் இருந்து பரவியது.இந்த கோவிட் 19 குறிப்பாக எந்த விலங்கிலிருந்து பரவியது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் இறைச்சியை சுத்தமான இடத்தில் இருந்து வாங்குங்கள். சமைக்கப்படாத இறைச்சியை கவனத்துடன் கையாளுங்கள்.

நோய் பரவாமல் இருக்க எந்தவிஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் ?

கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு போவதை தவிர்த்தல் நல்லது. நோய் தொற்று உள்ள பகுதிகள் மாநிலங்கள், நாடுகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். நோய் தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளில் பள்ளி கல்லூரி போன்றவற்றிற்கு அரசு விடுமுறை வழங்க வேண்டும். தனது ஊழியர் ஒருவருக்கு கோவிட் 19 இருந்ததை அடுத்து பேடிஎம் நிறுவனம் அந்த அலுவலகத்தை மூடியது. மற்ற ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கலாம் என்று கூறியது இதை மற்ற நிறுவனங்களும் முடிந்தவரை பின்பற்றலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன