பூஜை செய்வதற்கு ஏற்ற பொருட்கள்..!

  • by
important things suitable to do pooja

பூஜை என்பது நம் வீட்டில் எல்லா சுபகாரியங்களுக்கும் செய்யப்படும் மிக முக்கியமான ஒன்று. பூஜை செய்வதினால் நம் வீட்டிற்குள்ளும், நமக்குள்ளும் ஏகப்பட்ட நேர்மறை எண்ணங்கள் உண்டாகும். அதை தவிர்த்து தீய சக்திகள் அனைத்தையும் நம்மை அண்டாமல் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவும். அப்படிப்பட்ட பூஜையை நாம் வாரத்திற்கு ஒரு முறை மறவாமல் செய்வது மிகச் சிறப்பானது.

பூஜையின் பலன்கள்

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் நாம் செய்யப்படும் பூஜைகள் நம் இல்லத்திற்கு ஏகப்பட்ட பலன்களை அள்ளித் தருகிறது. அதிலும் நம் வீட்டை முழுமையாக சுத்தம் செய்து விளக்கேற்றி வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு மணி ஒலிக்க செய்யப்படும் பூஜைகளுக்கு சக்திகள் அதிகம். நம் வீட்டில் உள்ள தீய சக்திகள், எதிர்மறை எண்ணங்கள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற எல்லாமே அகன்றுவிடும். இதற்கு எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் வீட்டில் மகாலட்சுமி குடிபெயர்ந்து சந்தோஷமும், செல்வமும் அள்ளிக் கொடுப்பார்.

மேலும் படிக்க – ஸ்ரீ ராம ஜெயத்தின் சிறப்பு..!

பூஜைக்குத் தேவையான பொருட்கள்

பூஜை செய்வதற்கு நமக்கு மிக முக்கியமான பொருட்களாக கருதப்படுவது சத்தத்தை எழுப்பும் மணி. மணி ஒலிக்கும் பொழுது வீடு முழுவதும் அந்த ஓசை எல்லா திசைகளிலும் பரவி உங்கள் இல்லத்தில் நேர்மறை சக்தியை அதிகரிக்கும். அதே போல் உங்கள் எண்ணங்களிலும் மாற்றம் ஏற்படும். கற்பூரத்தின் மூலமாக சாமி உருவத்திற்கு அக்னி காட்டப்பட உதவுவதுதான் தூப கலசம். இதைக்கொண்டு கடவுள் படம் மற்றும் சிலைகளுக்கு கற்பூர தீபாராதனை காட்ட முடியும். பின்பு தாம்பூலத்தட்டு, கலச பாத்திரங்கள் போன்றவைகளையும் பூஜைக்கு தேவைப்படுகிறது.

பூக்கள் மற்றும் பழங்கள்

நீங்கள் வீட்டில் பூஜைகள் செய்வதாக இருந்தால் அப்போது பூக்கள் மற்றும் பழங்கள் இல்லாமல் இருக்கக்கூடாது. சாதாரணமாக நீங்கள் பூஜைகளை எளிமையாக மேற்கொண்டாலும் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் பூக்கள் மாலையை அணிவிக்க வேண்டும். இல்லையெனில் ஒரு சில பூக்கள் ஏதாவது அவர்கள் மேல் வைக்கவேண்டும். அதை தவிர்த்து அவர்களுக்கு பழங்களை படையலாக படைக்க வேண்டும்.

ஊதுவத்தி குங்குமம்

கற்பூரத்தைக் கொண்டு தீபாராதனை  காட்டுவதைப் போல் ஊதுபத்தியை எரித்து அதன் நறுமணம் எல்லா திசையிலும் பரவும்படி சாமி படங்களுக்கு காட்ட வேண்டும். பூஜைகளை செய்வதற்கு முன்பாக சாமி படங்கள் மற்றும் சாமி சிலைகளை நன்றாக தொடைத்துவிட்டு அவர்கள் நெற்றியில் குங்குமம் மற்றும் மஞ்சள்களை வைக்க வேண்டும்.

மேலும் படிக்க – மாசி மாதத்தின் சிறப்புகள்..!

அக்னிகுண்டம்

கிரகப்பிரவேசம், திருமணம், அல்லது தோஷம் கழிக்கும் போதெல்லாம் நமக்கு தேவைப்படுவது அக்னி குண்டம். இது அமைத்து மந்திரங்கள் ஓத செய்யப்படும் பூஜைகளுக்கு சக்திகள் அதிகம். எனவே மிகப்பெரிய காரியத்தை தொடங்குவதற்கு முன்பாக இதுபோன்ற அக்னி குண்ட பூஜைகளை செய்வார்கள், அதை கணபதி பூஜை எனலாம். இதுபோன்ற பூஜையை வருடத்திற்கு ஒருமுறை செய்வதன் மூலமாக உங்கள் வாழ்க்கை இனிமையாக அமையும்.

குடும்ப அமைதி நிலையாக இருக்க வேண்டும் என்றால் வீட்டில் மணி சத்தம் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் உங்கள் வீட்டில் சந்தோஷம் மற்றும் செல்வம் அதிகமாக வேண்டுமென்றால் வீடு முழுவதும் நேர்மறை சக்திகள் இருக்க வேண்டும். இது அனைத்தையும் உண்டாக்க உதவுவது பூஜைகள். எனவே வாரத்திற்கு ஒருமுறை மறவாமல் விரதமிருந்து பூஜை செய்வதன் மூலமாக உங்கள் வாழ்க்கை அழகாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன